அமெரிக்காவின் ஜான் கோல்பே நட்சத்திரமோ பிரபலமானவரோ இல்லை.அவர் அந்நாட்டின் கோடிககணக்கான சாமன்யர்களில் ஒருவர்.அதிலும் வேலை இல்லாதவர். ஆனால் அவர் வேலை இல்லாமல் இருப்பதையும் தற்போது வேலை தேடுவதையும் உலக்மே அறிந்திருக்கிறது.அனேகமாக அவருக்கு வேலை கிடைப்பதையும் உலகம் உடனே தெரிந்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
காரணம் கோல்பே வேலை தேடுவதற்காக என்றே தனியே இணையதளத்தை அமைத்திருப்பதுதான்.
அநேகமாக வேலை தேடுவதற்காக என்று சொந்தமாக இணையதளம் அமைத்திருக்கும் முதல் மனிதராக அவர் இருக்கலாம்.
வேலைவாய்ப்புகளை தேட உதவுதற்காக என்றே எண்ணற்ற இணையதளங்கள் இருக்கின்றன.பெரும்பாலானவை முதல் முறையாக வேலை தேடுபவர்களுக்கானது.வேலை இழந்தவர்களும் இவற்றை பயன்படுத்தலாம் என்பதோடு இவர்களுக்காக என்றே பிரத்யேக தளங்களும் இருக்கின்றன.
எததனை தளங்கள் இருந்தென்ன இப்போது வேலை கிடைப்பது சுலபமாக இல்லை என்பதே அமெரிக்க நிலைமை.அதிலும் பொருளாதார சீர்குலைவுக்கு பிறகு அங்கு வேலை இழப்பு அதிகரித்திருப்பதால் வேலை கிடைப்பது குதிரைகொம்பாகிவிட்டது.
எனவே இணையதளங்கள் மூலம் வேலை தேடுவது என்பது உடனடியாக பயன் தருவதில்லை.வேலைக்கு விண்ணப்பிப்பது சுலபமாக உள்ளதே தவிர வேலை கிடைப்பது சுலபமாக் இல்லை.
இதனால் வேலை தேடுபவர்கள் புதுமையான வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது.வேலை வாய்ப்பு தளங்களை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் வலைப்பின்னல் தளங்களின் மூலமும் வேலை தேடி வருகின்றனர்.இன்னும் சிலர் டிவிட்டர் மூலம் வேலை தேடி வருகின்றனர்.
ஜான் கோல்பேவும் இப்படி தான் வேலை தேடுவதற்கு புதிய வழிகளை கடைப்பிடித்து வருகிறார்.இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர் ஒவ்வொரு வேலைவாய்ப்பு தளமாக விண்ணப்பங்களை சமர்பித்து சரியான பதில் கிடைக்காமல் வெறுத்துப்போன நிலையில் சொந்தமாக இணையதளம் அமைத்து வேலை தேடுவது என தீர்மானித்தார்.
ஜான்கோல்பே டாட் காம் என்னும் பெயரில் மிக எளிமையாகவே அந்த தளம் அமைந்துள்ளது.அதில் அவரது சுயபுராணமோ பயோடேட்டாவோ கூட இல்லை.
ஆனால் அதற்கு பதிலாக அவருடைய வலைப்பதிவு,பேஸ்புக முகவரி,லின்க்ட் முகவர் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.
என் பெயர் ஜான் கோல்பே . வேலையில்லாத லட்சக்கணக்கானோரில் நானும் ஒருவர்.ஆனால் எதையும் நல்லவிதாமாக எடுத்த்க்கொள்வது என் பழக்கம்.தொழில்நுட்ப துறையில் துவங்கி ரியல் எஸ்டேட் உட்பட பல துறைகளில் பணியாற்றியுள்ளேன். இப்படி சுருக்க்மாக தன்னை அறிமுகம் செய்து கொண்டு நன்றாக உழைக்கக்கூடிய தனக்கு வேலை கிடைக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.குறந்தது நேர்முகத்தேர்வு வரை செல்லாவாவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்.
அது மட்டுமல்ல வேலை வாய்ப்புக்கு உதவுகின்றவர்களுக்காக என்று பரிசு போட்டி ஒன்றயும் அறிவித்துள்ளார்.ஆம் வேலை வாங்கி கொடுத்தால் ஒரு வீடியோ காமிரா பரிசாக கிடைக்குமாம். ஆனால் என்ன மாதிரியான வேலை என்று சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.தற்காலிக வேலையாகவோ மல்டி லெவல் மார்க்கெட்டிங் பணியாகவோ இருக்கக்கூடாதாம்.நியாயம் தானே.
கூகுலில் ஜான் கோல்பே என்னும் பெயரை டைப் செய்தால் கோல்பே வேலை தேடுகிறார் என்னும் வாசகத்தோடு இந்த தளம் தான் முதலில் வந்து நிற்கிறது.
இந்த தளத்தில் தான் புதுமையாக வேலை தேடுவது பற்றி வெளிவந்த செய்திகளூக்கும் இணைப்பு கொடுத்துள்ளார்.]
அவற்றுக்கு கீழே சர்ச்சிலின் மொன்பொழி ஒன்றையும் கொடுத்துள்ளார்.
நம்பிக்கை இல்லாதவர்கள் வாய்ப்புகளில் பிரச்சனையை பார்க்கின்றனர்.நம்பிக்கை உள்ளவர்கள் பிரச்சனைகளில் வாய்ப்புகளை காண்கின்றனர் என்பது தான் அந்த வாசகம்.
மனிதர் உண்மையில் இந்த வாசகத்திற்கு உதாரணமாக தான் இருக்கிறார் இல்லையா?
—
link;
http://jonkolbe.com/

0 Comments on “வேலை வேட்டையில் புதுமை”
asfar
excellent post and also very useful for us because i too involve same group (VIP)s…
Greetings
செந்தழல் ரவி
:))))))
rajan
Provide the URL of the same.
cybersimman
jonkolbe.com
jon@jonkolbe.com
Thanks, what does it say?
jon@jonkolbe.com
Thanks. What does this say? Is it Tamil?