மேரி எரிக்சனை உங்களுக்குத்தெரியுமா?நார்வே நாட்டைச்சேர்ந்த நடிகை அவர்.நார்வேயில் நன்கறிந்தவர் .மற்றபடி உலகப்புகழ் பெற்றவர் என்றெல்லாம் சொல்லமுடியாது.ஒலிம்பிக் வீராங்கனை ஒருவரின் பேத்தி உலகப்போரின் போது விமானம் ஓட்டியவரின் மகள் எனபது அவரைப்பற்றிய கூடுதல் தகவல்கள்.
இருந்தாலும் இதற்காகவெல்லாம் அவரை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.அவர் இண்டெர்நெட் சரித்திரத்ததில் இடம் பெற்றிருக்கிறார்.
எப்படி என்றால் வீக்கிபிடியாவில் அவரைப்பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளதன் மூலம் அவர் இண்டெர்நெட் சரித்திரத்திலும் இடம் பிடித்துள்ளார்.
விக்கிபீடியாவில் இடம்பெறுவது என்பது பெரிய விஷயமல்ல. மக்கள் கலைகளஞ்சியமான அதில் எல்லா விஷயங்கள் மற்றும் எல்லா விதமானவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.தொடர்ந்து கட்டுரைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.
பிரபலங்கள் என்றில்லை ;ஓரளவுக்கு அறிமுகமாணவ்ர்களைப்பற்றி கூட யாராவது அதில் சிறு கட்டுரையை எழுதி விடுகின்றனர்.மற்றவர்கள் அதில் தகவல்களை சேர்த்து வருகின்றனர்.
இப்படி நார்வே நடிகையான மேரி எரிக்சன் பற்றி மிக சமீபத்தில் ஒரு கட்டுரை ஆங்கில விக்கிபீடியாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரை விக்கிபீடியாவில் இடம்பெறும் 3 மில்லியனாவது கட்டுரை என்பதே விசேஷம்.
விக்கிபீடியா வராலாற்றில் இது ஒரு மைல்கல் தானே. மில்லியன், பில்லியன் ஆகிய இலக்கங்களை எட்டுவது என்பது ஒரு சாதனை எண்ணிக்கையாக கருதப்படுகிறது அல்லவா?
அந்த வகையில் விக்கிபீடியாவின் கட்டுரைகள் 3 மில்லியனை கடந்திஅருப்பது மாபெரும் சாதனையாக அமைகிறது.அதன் பின்னே உள்ள கூட்டு முயற்சி கொள்கைக்கும் அதன் மீதான நம்பிக்கையில் தகவல்களை இடம்பெறசெய்த இணையவாசிகளுக்கு கிடைத்த வெற்றி இது.
விக்கிபீடியா முகப்பு பக்கத்தில் அடக்கத்தோடு சின்னதாக இந்த செய்தியை வெளியிட்டு பெருமிதம் கொண்டுள்ளது.
விக்கிபீடியா நிறுவப்பட்ட எட்டாவது ஆண்டில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
விக்கிபீடியா தொடர்பான சில உப தகவல்கள்;விக்கிபீடியாவில் மொத்தம் பத்து லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.1.7 கோடி பக்கங்களை வுருவாக்கியுள்ளனர்.32.6 கோடி முறை தகவல்கள் எடிட் செய்யப்பட்டுள்ளன.
பிரெஞ்சு மொழி பதிப்பில் 8 லட்சம் கட்டுரைகள் உள்ளன.மற்ற மொழி பதிப்புகளும் வளர்ந்து வருகின்றன.
தமிழிலும் பதிப்பு உள்ளது. அதன் வளர்ச்சிக்கு உதவிடுங்கள்.
—–
தமிழ் விக்கிபீடியா பதிப்பு பற்றி நல்லதொரு கட்டுரைக்கு பார்க்கவும் இணைப்பு;
link;
http://muelangovan.blogspot.com/2009/08/blog-post.html