ஏற்கனவே திருமணமானவர்கள் இந்த தளத்தைப்பற்றி அறிய நேர்ந்தால் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அதிலும் சமீபத்தில் திருமணமானவர்கள் இந்த தளத்தை பார்த்தவுடனேயே அடடா முன்பே இந்த தளம் பற்றி தெரியாமல் போய்விட்டதே என்று நினைப்பார்க்ள்.
அதே நேரத்தில் விரைவில் திருமணம் செய்ய இருப்பவர்கள் ஆஹா இப்படி ஒரு சேவையை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் என அகமகிழ்ந்து போவார்கள்.அதிலும் இமெயிலில் அழைப்புகளை அனுப்பும் பழக்கம் கொண்டவர்கள் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
அப்படி என்ன விஷேசமான இணையதளம் என்று கேட்கிறீர்களா?
திருமண அழைப்பு தளம் என்ற வைத்துக்கொள்ளுங்களேன்.சுருக்கமாகச்சொன்னால் திருமணதளம்.அதாவது திருமணத்திற்கு நண்பர்களையும் உறவினர்களையும் இண்டெர்நெட் மூலமே அழைப்பதற்காக இணையதளத்தை அமைத்துகொள்ள உதவும் தளம்.
திருமணத்திற்கு சொந்தமான இணையதளம் என்பது நல்ல விஷயம் தான்.ஆரம்பத்தில் இது புதுமையாக மட்டுமே கருதப்பட்டது.ஆனால் இப்போது அவசியமானதாகவும் ஆகிவிட்டது.
எப்படியும் மணமக்கள் எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் நண்பர்கள் மற்றும் ஹைடெக் உறவினர்களுக்கு இமெயில் மூலம் திருமண அழைப்பிதழை அனுப்பி வைக்கின்றனர்.பெரும்பாலும் கலயாண பத்திரிக்கையை ஸ்கேன் செய்து அனுப்பிவிடுகின்றனர்.வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம்.
இப்படி ஸ்கேன் செய்த பத்திரிக்கையை அனுப்புவதைவிட அட்டகாசமாக ஒரு இணையதளத்தை அமைத்து திருமணத்தை கம்பீரமாக அறிவித்தால் எப்படி இருக்கும்.அழைப்பிதழ் மட்டுமல்ல மணமக்கள் தொடர்பான அனைத்து விவரங்கள், திருமணம் தொடர்பான தகவலகள் அனைத்தும் அடங்கியதாக அந்த தளம் இருந்தால் எப்படி இருக்கும்.
நன்றாகத்தான் இருக்கும்,ஆனால் இணையதள வடிவமைப்பு பற்றி எதுவுமே தெரியாதே என்று நீங்கள் நினைக்கலாம். அந்த கவலையே வேண்டாம்.உங்களுக்காக திருமணதளத்தை அமைத்து தருகிறோம் என்கிறது இன்வைட்டி தளம்.
திருமண அழைப்பிதழ் மாதிரிகளை தேர்வு செய்வதுபோல இந்த தளத்தில் திருமணதளத்திற்கான வடிவமைப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.அதன்பிறகு மணமக்களின் புகைபடத்தோடு தேவையான தகவல்களை இடம்பெறச்செய்து முழுவீச்சிலான தளத்தை உருவாக்கிகொள்ளலாம்.
அதோடு இந்த தளம் பற்றி இமெயில் மூலமே அனைவருக்கும் தெரிவிக்கலாம்.இந்த தளமே அழைப்பிதழாக இருக்கும்.
புகைப்படங்கள், மணமக்கள் சந்தித்தவிதம் பற்றிய சுவையான தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.அழைப்பாளர்கள் வாழ்த்து தெரிவிக்கும் வசதியும் உண்டு.திருமணம் தொடர்பான மற்ற திட்டங்களையும் தெரிவிக்கலாம்.
திருமணத்திற்கு பின் மணவிழா புகைப்படங்களையும் இடம்பெறச்செய்யலாம்.
இப்படி உருவாக்கப்படும் தளத்தை வெட்சைட் அதாவது திருமண தளம் என்று இன்வைட்டி குறிப்பிடுகிறது.அன்றிய அவசர யுகத்தில் திருமண அழைப்பை இண்டெர்நெட் மூலமே மேற்கொள்வதைவிட சிறந்த வழி வேறில்லை என்று சொல்லும் இந்த தளம் அதனை சுலபமாக்கி தந்துள்ளது.
அடிப்படை சேவை இலவசமானது. கூடுதல் அமசங்கள் தேவை என்றால் கட்டணம் செலுத்த வேண்டும்.திருமணத்திற்காக செலவிட தயங்காத இந்தியர்கள் இதற்கா அஞ்சப்போகிறார்கள்.
இன்னொரு விஷயம் .இந்த சேவையை துவக்கியிருப்பது ஒரு இந்திய நிறுவனமே.
—-
link;
http://www.invity.com/index.php

6 Comments on “திருமண அழைப்பு இணையதளம்”
விடுதலை வீரா
வணக்கம். இந்த முயற்சி மிகவும் சிறப்பானது.தற்போது இணையதள உலகமாகிவிட்டது.உங்கள் இணையதளம் அனைவரையும் சென்று அடைந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்..
Sombery
Thanks a lot.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
Kannan
நல்ல சிந்தனை
Pingback: திருமண தேடியந்திரம். « Cybersimman's Blog

அருள்
தேவையான தருணத்தில் உங்கள் வலைப்பதிவை பார்த்தேன்……..
மிக்க நன்றி!