கூகுலால் அடையாளம் காட்டப்பட்ட அனாமத்து பதிவாளர் அந்த நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். தனது அந்தரங்க உரிமையை காக்க தவறியாதற்காக 15 மில்லியன் நஷ்டஈடு கோரியுள்ளார்.
அவரது வாதம் வெற்றி பெறுகிறாதோ இல்லையோ இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.காரணம் பதிவர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையும் அதற்காக போராட தயாராக உள்ளனர் என்பதையும் இந்த வழக்கு உணர்த்திருகிறது.
ரோஸ்மேரி போர்ட் என்பது அவரது பெயர்.ஆனால் அந்த பெயர்கூட யாருக்கும் தெரியமலேயே இருந்தது.காரணம் அவர் அனாமத்து பதிவராக தன்னைப்பற்றிய எந்தவிதமான தகவல்களையும் வெளியிடாமல் இருந்ததுதான்.
வலைப்பதிவு ஏற்படுத்தி தரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களைப்பற்றி சுயதம்பட்டம் அடித்துக்கொள்ள பலரும் தயாராக உள்ள நிலையில் ஒரு சிலர் மட்டும் தங்கள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு பதிவு செய்கின்றனர்.இவர்கள் அனாமத்து பதிவாளர்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
பெரும்பாலும் சர்சைக்குரிய சங்கதிகளை எழுதவும் பிறர் மீது சேற்றை வாரி பூசவும் இவ்வாறு அடையாளத்தை மறைத்துகொள்கின்றனர்.வேறு நியாயமான காரணங்களுக்காக அடையாளத்தை வெளியிடாமல் இருப்பவர்களும் உண்டு.
நியூயார்க்கைச்சேர்ந்த ரோஸ்மேரி ஸ்காங்க்ஸ் ஆப் நியூயார்க் என்னும் பெயரில் மறைந்து கொண்டு வலைப்பதிவு செய்து வந்தார்.அவர் எழுதியது என்ன ,அவற்றை யார் படித்தார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் மாடல் ஒருவர் மீது அவர் நடத்திய தாக்குதல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.கனாடவைச்சேர்ந்த லிஸ்குலா கோஹன் என்னும் மாடலழகி பற்றி அவர் தாறுமாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.அவதூறு என்ற வரையறைக்குள் பொருந்தக்கூடிய அந்த பதிவுகளை பார்த்து கோஹன் கொதித்துப்போனார்.
யார் என்றே தெரியாத ஒருவரால் இப்படி கடுமையாக தாக்கி எழுதப்பட்டது அவரை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியது.முகம் தெரியாத நபாரால் எழுதப்படும் அந்த பதிவு தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் என்ற அச்சமும் உண்டானது.
பத்திரிக்கையிலேயோ தொலைக்காட்சியிலேயோ இப்படி யாராவது கூறியிருந்தால் சரியான பதிலடி கொடுக்கலாம்.தேவைப்பட்டால் கோர்ட்டுக்கும் இழுக்கலாம். ஆனால் அனாமத்து பதிவாளரை என்ன செய்ய முடியும்?அனாமத்து தன்மை தானே அவர்களின் பாதுகாப்பு.
பார்த்தார் கோஹன் .இதை இப்படியே விடக்கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவதூறான கருத்துக்களை எழுதிவரும் அந்த பதிவாளர் யார் என்பதை வெளியிட சம்பந்தப்பட்ட வலைப்பதிவு சேவை நிறுவனத்திற்கு உத்தரவிடவேண்டும் என்று அவர் கோரினார்.
வழக்கை விசாரித்த நியுயார்க் உச்ச நீதிமன்றம் அவர் கோரிக்கையை ஏற்று குறிப்பிட்ட அந்த பதிவரின் அடையாளத்தை வெளியிட வேண்டும் என்று கூகுலுக்கு (பிளாகர் சேவையின் உரிமையாளர்)தீர்ப்பளித்தது.இதனையடுத்து அந்த பதிவர் ரோஸ்மேரி என்ற விவரம் தெரியவந்தது.
இண்டெர்நெட் உலகில் இது முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது.ஒரு முன்னோடி தீர்ப்பாகவும் கருதப்படுகிறது.இனி பதிவர்கள் அனாமத்து முகமுடியின் கீழ் மறைந்துகொண்டு இஷ்டம் போல எழுதுவது சாத்தியமில்லை.
இந்நிலையில் ரோஸ்மேரி கூகுல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். கூகுல் தனது அந்தரங்க உரிமையை மீறிவிட்டதாக கூறீ அவர் நஷ்ட ஈடும் கேட்டுள்ளார்.