சமீபத்தில் மரணமடைந்த அமெரிக்க ‘எம் பி’ டெட் கென்னடிக்கு இணைய உலகின் சார்பில் வீரவணக்கம் செலுத்த வேண்டும்.காரணம் மனிதர் சாதரண எம் பி இல்லை .இண்டெர்நெட்டின் முன்னோடி எம் பி.
ஆம் இண்டெநெநெட்டில் தனக்கென இணையதளத்தை அமைத்துக்கொண்ட முதல் அமெரிக்க எம் பி இவர் தான். அநேகமாக உலகிலேயே முதல் எம் பியாகவும் இருக்க வேண்டும்.
ஒரு எம் பி சொந்தமாக இணையதளம் வைத்திருப்பது இன்று பெரிய விஷயமல்ல. அது மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் இணையதளமில்லாமல் இருந்தால் வாக்களர்கள் மதிக்க மாட்டார்கள். (இந்தியாவில் எத்தனை எம்பிக்கள் இணையதளம் வைத்துள்ளனர் என்று தெரியவிக்ல்லை)
தேர்ந்தெடுத்த மக்களோடு தொடர்பு கொள்ளவும் அடுத்த தேர்தலில் வாக்கு சேகரிக்கவும் இணையதளம் மிகவும் அவசியம்.தற்போதைய எம்பிக்கள் ஃபேஸ்புக் பக்கம், டிவிட்டர் பக்கம் எல்லாம் வைத்துகொண்டு அசத்துகின்றனர்.
ஆனால் இண்டெர்நெட் பிரபலமாகத்துவங்காத காலத்தில், அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தெளிவாக புரியாத ஆரம்ப காலத்திலேயே கென்னடி தனக்கான இணையதளத்தை அமைத்துக்கொன்டார் என்றால பார்த்துக்கொள்ளுங்கள்.
இண்டெர்நெட்டின் தற்போதைய வடிவமான வைய விரிவு வலை அறிமுகமான 1993 ம் ஆண்டே கென்னடி தனக்கான இணையதளத்தை உருவாக்கிகொண்டார்.அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் எந்த அலுவலகமும் இண்டெர்நெட்டில் இடம்பெறவில்லை.
இதன்மூலம் டெட் கென்னடி இண்டெர்நெட்டில் இடம் பெற்ற முதல் அமெரிக்க எம்பி என்னும் சிறப்பை பெற்றார். அதன்பிறகு இண்டெர்நெட்டை பயன்படுத்துவதிலும் அவர் முன்னினியில் திகழ்ந்தார்.