தொழில்நுட்பத்தின் தாக்கம் நமக்கு எதிர்மறையாகாவே அறிமுகமாவது குறித்து எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு.
இமெயிலின் அருமையை உணர்வதற்கு முன் இமெயில் மோசடி பற்றி தான் அதிகம் தெரிந்துகொண்டோம்.செல்போன் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்து எததனையோ நல்ல விஷயங்கள் இருக்க செல்போனில் ஆபாச படம் எடுக்க முடிவது பற்றியே அதிகம் செய்திகள் வெளியாகின்றன.
பொதுவாகவே இண்டெர்நெட் பயன்பாடு தொடர்பாக எதிர்மறையான செய்திகளே பெரிய அளவில் வெளியாகின்றன.இண்டெர்நெட் அறிமுகமில்லாதவர்கள் இந்த செய்திகளை படிக்க நேர்ந்தால் இந்த தொழில்நுடபமே தீமையானது என நினைத்து விடுவார்கள்.
பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற வலை பின்னல் தளங்கள் விஷயத்திலும் இதே நிலை தான் தொடர்கிறது.இந்த இரண்டு தளங்களுமே தகவல் பரிமாற்றத்திலும் தொடர்புகளை உருவாக்கி கொள்வதிலும் புதிய எல்லைகளை உண்டாக்கி வருகின்றன.இவை பயன்படுத்தப்படும் விதம் குறித்து எழுதவும் வியக்கவும் எவ்வளவோ இருக்கின்றன.
ஆனால் பேஸ்புக் பற்றி நமக்கு கிடைக்கும் தகவல்கள் எத்தகையது தெரியுமா?நடிகர் தனுஷ் பெயரில் பேஸ்புக் தளத்தில் மோசடி என்பது தான்.பிரபலங்கள் பெயரில் பேஸ்புக் பக்கத்தை அமைத்து செயல்படுவது என்பது உலகலாவிய நிகழ்வாகவே இருக்கிறது.
பேஸ்புக் போன்ற தளங்களின் அருமையை புரிந்து கொள்ளும் பிரபலங்கள் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கி கொண்டு ரசிகர்களோடு தொடர்பு கொள்கின்றனர்.மற்ற பிரபலங்கள் இத்தகைய தொழில்நுட்பங்களின் முக்கியத்துவதை உணராமல் இருந்துவிடுகின்றனர்.அப்போது யாராவது ரசிகர்கள் அல்லது விஷமிகள் அவர்கள் பெயரில் பேஸ்புக் பக்கத்தை அமைத்து விடுகின்றனர்.
இதில் பெரிய மோசடி எல்லாம் நடந்துவிடவில்லை.ஒரு ஏமாற்று வேலையாகவே இதனை கருதலாம்.
டிவிட்டரிலும் இதே போல நடந்து வருகிறது.பிரபலங்கள் பெயரில் போலி முகவரிகள் உருவாக்க்கப்பட்டு அவர்களின் பக்கங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதனை தடுப்பதற்காகவே டிவிட்டர் நிர்வாகம் கணக்கை சரிபார்க்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இப்பொது இந்திய கேப்டன் டோனி உள்ளிட்டோர் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்ற செய்தியை பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த கணக்குகளை பார்த்து பல ரசிகர்கள் ஏமாந்து போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இங்கே நான் கூற விரும்புவது என்னவென்றால் டோனி பெயரில் மோசடி என இதனை புரிந்து கொள்ள முற்படுவது தவறு என்பதே.டிவிட்டர் சார்ந்த நிகழ்வுகளில் இது ஒரு சின்ன நிகழ்வு மட்டுமே.டிவிட்டரின் பரிமாணம் பலவிதமாக இருக்கும் போது டோனி பெயரில் மோசடி என்பது சரியான அறிமுகம் அல்ல.பிரபலங்கள் டிவிட்டர் பயன்பாடு பெரிய அளவில் பேசப்படும் போது இத்தகைய நிகழ்வுகளும் பெரிதுப்படுத்தப்படுவது இயல்பானது தான்.இருந்தாலும் கூட டோனி ஏமாற்றப்பட்டது போல இந்த செய்தி வெளியிடப்பட்டால் அது டிவிட்டருக்கான மோசமான அறிமுகமே.
உண்மையில் டிவிட்டரின் அருமையை புரிந்து கொள்ளாமல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை உரிய நேரத்தில் உருவாக்கத்தவறிய இந்திய கேப்டனுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றே கருத வேண்டும்.
டிவிட்டர் மூலம் விளையாட்டு நட்சத்திரங்கள் ரசிகர்களை நேர்டியாக தொடர்பு கொள்ளலாம் எனும் போது அதை டோனி போன்ற இந்திய வீரர்கள் உணராமல் இருப்பதே ஏமாற்றம்.

0 Comments on “டிவிட்டரில் இந்திய கேப்டன் டோனி”
blogpaandi
interesting!
கிரி
//உண்மையில் டிவிட்டரின் அருமையை புரிந்து கொள்ளாமல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை உரிய நேரத்தில் உருவாக்கத்தவறிய இந்திய கேப்டனுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றே கருத வேண்டும்//
நல்லா சொன்னீங்க!
நம்ம ஆளுங்க பணத்தை எப்படி சம்பாதிப்பது என்பதில் குறியாக இருப்பதால் இதில் ஒருவேளை ஆர்வம் காட்டாமல் இருந்து இருப்பார்களோ! 😉