ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக்க முடியுமா?.
அமெரிக்கர் ஒருவர் இதனை செய்திருக்கிறார்.அவர் உருவாக்கியுள்ள புத்தம்புதிய கால்குலேட்டர் பல கேள்விகளை எழுப்பக்கூடியது மட்டுமல்ல பொருளாதார விழிப்புணர்வையும் ஏற்படுத்த வல்லது.
தேசிய கடனை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்;இப்படி தான் அவர் அந்த கால்குலேட்டரை வர்ணிக்கிறார்.பிக்ரெட் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த கால்குலேட்டர் சராசரி கால்குலேட்டர்களை விட நீ..ண்ட இலக்கங்களை கணக்கிட வல்லது.அதற்கேற்றவாறு சற்றே பெரிய திரையை கொண்டது.
இதில் டிரில்லியன் கணக்கில் மதிப்பிடலாம்.அதாவது லட்சம் கோடி என்கின்றனரே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான இலக்கங்களை எல்லாம் இந்த கால்குலேட்டர் கையாளக்கூடியது.
நாம் என்ன வங்கியா வைத்திருக்கிறோம். லட்சம், கோடி, லட்சம்கோடி என்றெல்லாம் கணக்கிட என்று நீங்கள் நினைகலாம்.இது நம் வீட்டுக்கணக்கை போடுவதற்கான கால்குலேட்டர் இல்லை. நாட்டின் கணக்கை போடுவதற்கான கால்குலேட்டர்.
நாட்டின் கணக்கு என்றால் கடன் கணக்கு தான்.
அமெரிக்க பொருளாதாரம் நிலைகுலைந்து போன கதை நினைவிருக்கிறது அல்லாவா? வீட்டுக்கடன் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு அமெரிக்க பொருளாதாரத்தின் பலவீனங்களை உணர்த்தியதோடு கடனுக்கான உண்மையான அர்ததத்தையும் சராசரி அமெரிக்கர்களுக்கு புரிய வைத்தது.
கடன் சுமை தாளாமல் ஒரு தேசமாக அமெரிக்க இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கிறது.பொருளாதார செழிப்பு நிலவிய காலத்தில் அமெரிக்கா கடன் வாங்கியே காலம் தள்ளியதால் இன்று அந்நாடு டிரில்லியன் கணக்கில் கடன்பட்டிருக்கிறது.டிரில்லியன் என்றால் லட்சம் கோடி என்று பொருள்.
நாட்டின் ஒட்டுமொத்தகடன் பற்றியெல்லாம் சராசரி மனிதர்கள் கவலைப்படுவதில்லை . ஆனால் மேற்கு கொலராடோவை சேர்ந்த மாட் மைலஸ் என்னும் ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு நாள் அமெரிக்க தெசிய கடன் பற்றி யோசித்திருக்கிறார்.அப்போது தான் சராசரி கால்குலேட்டரில் அமெரிக்க கடன் தொகை அடங்கவில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறார்.
ஒருவிதத்தில் தேசியக்கடன் கை மீறி போய் கொண்டிருப்பதன் அடையாளம் என்று அவர் கருதினார்.சாதராண கால்குலேட்டரில் கனக்கிட முடியாத அளவுக்கு கடன் வளர்ந்திருப்பது அவருக்கு கவலையை அளித்தது.
தேசியக்கடன் பற்றி அவப்போது பேசப்பட்டாலும் நாம் எந்த அளவுக்கு கடன் பட்டிருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியவில்லை என நினைத்த அவர் இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த தெசிய கடனுக்கான பிரத்யேக கால்குலேட்டரை உருவாக்கினார்.
இந்த கால்குலேட்டரில் டிரில்லியன் டிரில்லியனாக சேர்ந்துகொண்டிருக்கும் அமெரிக்க கடனை சுலபமாக கணக்கிடமுடியும்.அது நாள்தோறும் வளர்ந்து வருவதையும் கணக்கிட முடியும்.
இதனால் என்ன பயன் என்கிறீர்களா? அமெரிக்காவின் செலவு எந்த அளவுக்கு போய்கொண்டிருக்கிறது என்பதை இதன் மூலம் உணர முடியும் என்று அவர் நம்புகிறார்.
இந்த கால்குலேட்டரை வாங்கி ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கு வழக்குங்கள் என்றும் வரவை மீறி செலவு செய்பவர்களுக்கு வழங்குங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார.
ஒரு காலத்தில் மில்லியன் என்று பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் பில்லியன் என்றோம் .இப்போது டிரில்லியன் என்கின்றனர்.இதன் உண்மையான பர்மானத்தை தனது கால்குலேட்டர் புடரிய வைக்கும் என்று கூறும் அவர் இந்த கால்குலேட்டர் மற்றும் தன அவசியத்தை உணர்த்த ஒரு இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார்.
——–.

0 Comments on “தேசிய கடனுக்கான கால்குலேட்டர்”
Calculators&Converters
மிக்க நன்றி … உங்கள் வருமானத்தை பற்றி கணக்கிட மேலும் ஓர் அறிய கால்குலேடோர் வலைத்தளம்…. http://easycalculation.com/mortgage/mortgage.php