கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது.
கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு தற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இணையதளத்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்கமானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
சரி இதனால் கூகுலுக்கு என்ன லாபம் என்று கேட்கலாம்.கூகுலுக்கு என்ன லாபம் என்று கேட்பதைவிட மற்ற தேடியந்திரங்களுக்கு என்ன பாதிப்பு என்று யோசித்துப்பார்த்தால் இந்த காப்புரிமை எத்தனை முக்கியமானது என்று புரிந்து விடும்.
தமிழ் மொழியை பொருத்தவரை ‘முருகன் என்றால் அழகு’ என்பது போல இண்டெர்நெட்டைப்பொருத்தவரை கூகுல் என்றால் அழகு என்று அர்த்தம்.அதாவது எளிமை தான் அழகு என்று எடுத்துக்கொண்டால் கூகுலின் முகப்பு பக்கத்தின் முன் வேறு எந்த இணையதளமும் நிற்க முடியாது.எளிமையோடு தெளிவையும் சேர்த்துக்கொண்டால் கூகுலின் முகப்பு பக்கம் தான் பேரழகானது.
மேகங்களற்ற வெண்மையான வானம் போன்ற அழகான பின்னணியில்,நடுவே ஒரே ஒரு கட்டம் .அதன் கீழே தேடலுக்கான குறிப்பு.அவ்வளவு தான் கூலின் முகப்ப பக்கம். பக்கா எளிமை எனறாலும் நெத்தியடி ரகம். தகவல்கலை தேட வருபவர்களுக்கு வேறு எந்த கவனப்பிசகும் இல்லாமல் வந்தோமா தேடினோமா என்று போய் கொண்டே இருக்கலாம். வடிவமைப்பு என்றால் மெகா பட்ஜெட் படங்கள் போல ஏகப்பட்ட கிரபிக்ஸ் மற்றும் இதர அம்சங்களோடு படு அமர்க்களமாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்ட காலத்தில் சும்மா எளிமையான முகப்பு பக்கத்தின் மூலம் வடிவமைப்பு இலக்கணத்தையே மாற்றியமைத்தது.
கூகுலின் வெற்றிக்கு பிறகு எளிமை எனபது இணையதளத்திற்கான வடிவமைப்பு அம்சங்களில் முக்கிய விஷயமாகிவிட்டது.அது மாட்டுமல்லாமல் தேடியந்திரம் என்றால் அதன் முகப்பு பக்கம் கூகுலைப்போல இருந்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது.
ஆஸ்க் தேடியந்திரத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் துவக்கப்படட்ட cuiல் வரை எந்த தேடியந்திரமாக இருந்தாலும் அதன் முகப்பு பக்கம் கூகுலை போலவே இருக்கும்.
பிரச்ச்னை இது தான். இப்போது கூகுல் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை வாங்கியிருப்ப்தால் புதிதாக துவங்கப்படும் தேடியந்திரங்கள் வேறு மாதிரியான முகப்பு பக்கத்தை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உள்ள யாகூ போன்ற தேடியந்திரங்களும் பாதிக்கப்படலாம்.
ஒரு தேடியந்திரத்தின் வெற்றிக்கு கூகுல் பாணி முக்ப்பு பக்கம் மிகவும் அவசியம் என்பதால் இனி கூகுல் மட்டுமே அதனை பயன்படுத்தமுடியும்.
ஏற்கனவே தேடலில் கூகுலின் அதிக்கம் நிலவும் நிலையில் இது கூகுலுக்கு எதிர்ப்பே இல்லாமல் செய்துவிடலாம்.

0 Comments on “கூகுலின் கை ஓங்குகிறது”
kuppan_yahoo
அருமையான பதிவு நன்றிகள்.
என் பார்வையில் கூகுளின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம், கூகுளின் பரந்த மனப்பான்மை, தொலை நோக்கு பார்வை என்பதே.
அதுவும் யூடுப் , விக்கிபீடியா, மொழி மாற்றுதல் போன்றவற்றில் கூகுளின் சேவை மகா உன்னதமானது.
வ்ய்பாரத்தில் வாடிக்கையாளனையும் (users) பங்கு பெறக் சய்து அவர்களின் பங்களிப்பையும் பயன் படுத்த தொடங்கியது. (gives full freedom to users to write articles in wikipedia..)
எனவே கூகுளின் தொழிழ் நுட்ப அறிவை விட, பரந்த மனப்பான்மை, வாடிக்கையாளரின் விருப்பு அறிந்து நடத்தல் போன்றவை தான் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என்பேன்.
கூகுளுக்கு வாழ்நாள் முழுதும் நான் கடன் பட்டுள்ளேன்.
cybersimman
முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.இணையத்தில் நீங்கள் படிப்பவற்றையே கூட உங்கள் கருத்துக்களோடு பதிவிடலாம். அது நல்ல அறிமுகமாக இருக்கும்.
…சைபர்சிம்மன்
cybersimman
நானும் கூகுல் அபிமானிதான். ஆனால் கூகுலிடம் பரந்த மனப்பானமை இருப்பதாக நான் நினைக்கவில்லை.கூகுல் மொழிபெயர்ப்பு சேவை உட்பட பல மகத்தான சேவைகளை அறிமுகம் செய்துள்ளது உண்மைதான்.ஆனால் கூகுலின் அனைத்து சேவைகளும் லாப நோக்கிலானவை. கூகுலின் அடிப்படை கொள்கை தீய வழிகளை தவிர்ப்பது என்று சொல்லப்பட்டாலும் தற்போது கூகுலின் அதிகரித்து வரும் செல்வாக்கு பல அச்சங்களை எழுப்பியுள்ளன். குறிப்பாக கூகுலின் புத்தக தேடல் திட்டம் எழுத்தாளர்களையும் பதிப்பகங்களையும் நடுங்க வைத்துள்ளது.ஒரே குறிப்பிட்ட நிறுவனத்தின் கைகளில் உலக புத்தகங்கள் செற்டைவது நல்லதல்ல என்பதே பரவலான் கருத்து. மற்றபடி கூகுலுக்கும் விக்கிபீடியாவுக்கும் தொடர்பில்லை என்றே நினைக்கிறேன்.
gurublack
வணக்கம்
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை , நான் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு வலை பூ பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தவுடன் முதலில் பார்த்த வலை பூ உங்களுடையதுதான் , பிறகு நிறைய பாத்தேன் , படித்தேன் , உடனே நானும் வலை பூ ஆரம்பித்து விட்டேன் , ஆனால் நானாக எழுதவில்லை (like copy,paste) ,
உங்கள் பார்வைக்கு எனுடைய வலை பூ
http://www.gurublack.wordpress.com
http://www.rajinigantham.blogspot.com,
http://www.adss4u.blogspot.com,
http://www.techposi.blogspot.com,
இவை அனைத்தும் என்னுடைய வலை பூ , இருந்தும் எனக்கு திருப்தி வரவில்லை ஏனென்றால் நான் சொந்தமாக எதுவும் எழுதவில்லை , எனவே இன்று ஒரு வலை பூ ஆரம்பித்து விட்டேன் சொந்தமாக
http://puthiyavann.blogspot.com.
நான் ஏன் உங்களிடம் இந்த விசயங்களை கூறுகின்றேன் என்றல் நீங்கள் எனுடைய inspiration.
எனுடைய வலை பூவை பார்த்து விட்டு நீங்கள் கருத்து கூறினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் .
நன்றி
வாழ்க வளமுடன்
gurublack
நன்றி அன்பரே
அன்புடன்
பிரபாகரன் .க. மீ
கிரி
கூகிளின் முன் பக்கத்தை போன்ற அழகான பக்கம் எதுவும் இல்லை..
கூகிள் முன் பக்கம் வெள்ளையாக இருப்பதால் அதிகளவில் மின்சாரம் உலக அளவில் வீணாவது குறிப்பிடத்தக்கது. இதனால் உலகம் வெப்பமயமாகிறது என்பதை குறிக்கும் தினத்தில் இவர்கள் முன் பக்கத்தை கருப்பு வண்ணமாக மாற்றி வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
cybersimman
ஆம் உண்மை தான் .தகவல் பகிர்வுக்கு நன்றி
padmahari
வணக்கம்.உங்கள் இணையம் குறித்த பதிவுகள் நன்றாக இருக்கின்றன.தெளிவான கருத்தோட்டம், பகுத்தறிந்து விளக்குதல் போன்றன உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை.தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்! நன்றி.
cybersimman
ஊக்கமளிக்கும் வார்த்தைகள். மிக்க நன்றி நண்பரே.