கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.
மன்மோகனின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்ஜய் பரு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.அவருடைய ஃபேஸ்புக் பக்கம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதாகவும் எனவே பிரதமர் ஃபேஸ்புக் தளத்தில் இருப்பது உறுதியாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்போகன் தொடர்பான செய்திகள், வீடியோ கோப்புகள் ஆகியவை அதில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் பொதுவாக இளைஞர்களின் கூடாரமாக கருதப்பட்டாலும் பெரியவர்களும் பிரபலங்களும் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.அரசியல் தலைவர்கள் பலர் ஃபேஸ்புக் மூலம் தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபேஸ்புக் பயன்பாட்டில் முன்னோடி என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு தன்னுடைய தேர்தல் பிராசாரத்தின் போது ஆதாரவாளர்கள் மற்றும் வாக்காளர்களை தொடர்புகொள்ள தீவிரமாகவே ஃபேஸ்புக்கை பயன்படுத்தனார். தற்போது அதிபரான பின்னும் ஃஃபேஸ்புக்கை அவர் பயன்படுத்தி வருகிறார்.
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை அரசியல் தலைவர்கள் மத்தியில் ஃபேஸ்புக் போன்றவை இன்னும் பிரபலமானதாக தெரியவில்லை.ராகுல் போன்ற இளம் எம் பி க்கள் சிலர் ஃபேஸ்புக்கில் உள்ளனர்.
இந்த நிலையில் இண்டெர்நெட் ப்ரிட்சயம் இல்லாதவரும் செல்போன் கூட வைத்திரதவருமான பிரதமர் மன்மோகன் ஃபேஸ்புக்கில் உறுப்பினராக இருப்பது வியப்பானாதது தான்.
ஆனால் பிரதமர் தானே நேரடியாக ஃப்பேஸ்புக்கில் தகவல்களை இடம்பெற வைப்பதாக கருத்வதற்கில்லை. இந்திய வழக்கப்படி அவர் சார்பில் அதிகாரி யாராவது செய்து கொண்டிருக்கலாம்.
ஒபாமாவின் அறிவுரை
இதனிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா ஃபேஸ்புக் பய்னபாடு தொடர்பாக இளைஞர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.எதிர்காலத்தில் அதிபராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் ஃபேஸ்புக்கில் இடம்பெற வைக்கும் தகவல்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று குறியுள்ளார்.காரணம் இப்போது ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் கருத்துக்கள் நாளை உங்களை ஆட்டிப்படைக்கலாம் .
அதிபராகும் எண்ணம் கொண்டவர்கள் மட்டுமல்ல எல்லோருக்குமே இது பொருத்தும்.

0 Comments on “ஃபேஸ்புக்கில் இந்திய பிரதமர்.”
ulavu
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்