நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது அங்கே கம்ப்யூட்டர் இருப்பதையும் அதில் இண்டெர்நெட் இருப்பதையும் பார்த்தால் அதன் முன்னே அமர்ந்து இமெயில் கணக்கை பார்க்க வேண்டும் என்றோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க வேண்டும் என்றோ தோன்றும் அல்லவா?
அதனால் என்ன என்கிறீர்களா?இது நம் காலத்து பழக்கம்.எங்காவது கம்ப்யூட்டரை பார்த்தால் அதனை பயன்படுத்த தானாகவே தோன்றும்.அதிலும் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை இயக்கிப்பார்க்க கைகள் துடித்துக்கொண்டிருக்கும்.
இதற்கு உதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் திருடப்போன இடத்தில் ஃபேஸ்புக் பக்கத்தை திறந்து பார்த்துவிட்டு அதனால் பிடிபட்டிருக்கிறார்.
பெனிசில்வேனியா நகரை சேர்ந்த பார்க்கர் என்னும் அந்த வாலிபர் ஒருவர் தனது பகுதியில் இருந்த இளம்பெண் ஒடுவர் வீட்டுக்குள் புகுந்து இரண்டு வைர மோதிரங்களை திருடிச்சென்றுவிட்டார்.
இது தொடர்பாக இளம்பெண் போலிசில் புகார் செய்தார். விசாரணையை துவக்கிய போலிசருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.அப்போது தான் இளம்பெண் தனது கம்ப்யூட்டர் இயங்கி கொண்டிருப்பதை பார்த்தார்.அதைவிட ஆச்சர்யம் அதில் ஃபேஸ்புக் பக்கம் ஒன்று திறந்து கிடப்பதையும் பார்த்தார்.
திருட வந்த நபர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தை இயக்கியிருக்க வேண்டும் என் அவர் சந்தேகித்தார்.அது மட்டுமல்ல அந்த் நபர் ஃபேஸ்புக் பக்கத்தை சைன் அவுட் செய்ய் மறந்த்தையும் அவர் கவனித்தார்.
இதனை உடனே போலிசாரிடம் சுட்டிக்காட்டினார்.ஃபேஸ்புக் விவரங்களை வைத்து விசாரனை நடத்திய போலிசார் அதன் பின்னே இருந்த பார்க்கரை கைது செய்தனர்.
ஃபேஸ்புக் நம்மை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

3 Comments on “ஃபேஸ்புக்கால் பிடிபட்ட திருடன்”
kalyanakamala
நாம் குற்றவளிகளுமில்லை. இனி குற்றவளியாகப் போவதுமில்லை. நம்ம ஃபேஸ் புக்கில் இருக்கும் விஷயங்களை குற்றவாளிகள் உபயொகிக்க சான்ஸ் இருக்கு!
கமலா
Pingback: ஒரு திருடனின் ஃபேஸ்புக் சவால் « Cybersimman's Blog