கூகுல் புதிரின் மர்மம் நீங்கியிருக்கிறது.எச் ஜி வெல்சுக்கு ஜே.இது தான் கூகுல் புதிருக்கான பதில்.
கூகுல் தனது லோகோவுக்குள் சித்திரங்களை வரைந்து காட்டி அழகாக விளையாட்டு காட்டுவது வழக்கம். டூடுல் என்று சொல்லப்படும் இந்த சித்திரங்களின் சிறப்பமசம் என்னவென்றால் எதோ ஒரு விதத்தில் நடப்பு சம்பவம் தொடர்பானதாக அது அமைந்திருக்கும்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி,அல்லது கிறிஸ்துமஸ் விழாவின் போது கூகுல் லோகோவும் இந்த நிகழ்வுகளை குறிக்கும் வகையில் இருக்கும்.சில நேரங்களில் மேதைகளின் பிற்ந்த தினத்தின் போது அவர்களின் பங்களிப்பை குறிக்கும் வகையில் லோகோ உருவாக்கப்பட்டிருக்கும்.
சில மாத்ங்களுக்கு முன் கலீலியோவின் 400 வது பிறந்ததினத்தை கொண்டாடும் வகையில் அவரது கண்டுபிடிப்பான தொலைநோக்கியோடு கூகுல் லோகோ சித்திரம் அமைந்திருந்தது.
இந்த சித்திரங்கள் முதல் பார்வைக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.உற்று கவனித்தால் அதில் எதாவது குறிப்புகள் தென்படலாம்.மேலும் கூகுல் தேடல் பக்கத்தில் அதற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அமீபத்தில் இப்படிதான் கூகுல் லோகோவில் பறக்கும் தட்டு மற்றும் பயிர் வட்டங்கள் ஆகியவை தோன்றின.ஆனால் இவை யாரை அல்லது எந்த நிகழ்வை குறிக்கின்றன என்பது புரியாதா புதிராகவே இருந்தது.கூகுல் கொடுத்த குறிப்புகளும் குழப்பத்தையே எற்படுத்தின.
இந்நிலையில் இந்த லோகோ மறைந்த எழுத்தாளர் எச் ஜி வெல்ஸ் நினைவாக் உருவாக்கப்பட்டவை என கூகுல் தெரிவித்துள்ளது .வெல்ஸ் உலகின் முத்ல் அறிவியல் புனைகதை எழுத்தாளராக கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரது 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுல் இந்த லோகோவை வடிவமைத்துள்ளது.

0 Comments on “கூகுல் லோகோ மர்மம் நீங்கியது.”
எட்வின்
தகவலுக்கு நன்றி அன்பரே
prakash
ya good thank you…..
லோஷன்
அருமை.. அறியாத பல விஷய்னகளை அறியத்தரும் நீங்கள் ஒரு சிங்கம் தான்