பொருத்தது போதும் என பொங்கி எழுந்திருக்கிறார் அமெரிக்க கடனாளி ஒருவர்.தனது வங்கிக்கு எதிராக யூடியூப் விடீயோ மூலம் அவர் அறைகூவல் விடுத்து கடனாளிகளின் புரட்சிக்கு வித்துட்டுள்ளார்.இந்த போர்க்கொடி வீடியோ மூலம் அவர் யூடியூப்பில் நட்சத்திரமாகியிருக்கிறார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைச்சேர்ந்த ஆன் மிர்ச் என்னும் அந்த பெண்மணிக்கு 41 வயதாகிறது.பாங்க் ஆப் ஆமெரிக்காவின் வாடிக்கையாளரான அவர் சமீபத்தில் வங்கி தன்னுடைய கிரிடிட் கார்டு தவணை தொகைக்கான வட்டித்தொகையை அநியாயமாக உயர்த்திய போது கொதித்துப்போய்விட்டார்.
பத்தாண்டுகளுக்கு மேலாக அவர் தன்னுடைய தவணைகளை ஒழுங்காக செலுத்தி வருபவர்.
இந்நிலையில் சமீபத்தில் வங்கி தவணைக்கான வட்டியை 13 சதவீத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தியது.வங்கிகள் அவப்போது வட்டியை உயர்த்துவது வாடிக்கை என்றாலும் இப்படி ஒரேடியாக 30 சதவீதமாக உயர்த்துவது எவருக்குமே அதிர்ச்சியளிக்க கூடியது தான்.அதிர்ச்சி அளிப்பது ஒரு புறம் இருக்க தவனையை திருப்பிச்செலுத்துவதும் அநேகமாக சாத்தியமில்லை.
இந்த விஷயத்தில் வங்கிகளுக்கு வானாளாவிய அதிகாரம் இருப்பதாகவே தோன்றுகிறது.வங்கிகள் இஷ்டத்திற்கு வட்டி விகித்ததை உயர்த்திக்கொள்ளலாம்.அதற்கான காரனத்தை கூட விளக்க வேண்டும் என்ற அவசியமில்லை.அப்படியே கேட்டால் கூட வங்கிகள் பதில் சொல்லும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் இத்தகைய சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது.புலம்பலாம்.முறையிடலாம்.பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை.
ஆன் மிர்ச்சும் இத்தைகைய கையறு நிலையில் தான் இருந்தார்.ஆனால் பாங்க் ஆப் அமெர்க்காவின் அடவடியை பொருத்துக்கொள்ள முடியவில்லை.எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
வெற்று புலம்பல் புலம்புவதை விட பிரச்சனையை இணைய மன்றத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்தார்.யூடியூப் தான் இதற்கான வழி என்று வெப்கேமிரா முன் அமர்ந்து தனது மனக்குமுறலை விடியோ பதிவாக்கி அதனை யூடியூப்பில் பதிவேற்றினார்.
விரிவாகவும் விளக்கமாகவும் அந்த வீடியோ பதிவு அமைந்திருந்தது.
வாழ்க்கையில் எதாவது ஒரு கட்டத்தில் நாம் நியாயத்திற்காக போராட தியாகம் செய்ய முன் வந்தாக வேண்டும் என்ற கூறிய அவர் தானும் இப்போது அது போன்ற தருணத்தில் தான் இருப்பதாக கூறியிருந்தார்.தன்னுடைய போராட்டம் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் கடனாளிகளின் புரட்சிக்கான முதல் படியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
14 ஆண்டுகளாக வங்கியின் வாடிக்கையாளராக இருக்கும் தனக்கு வஙகி இழைத்த அநீதியை விவரித்துவிட்டு பாங்க் ஆப் அமெரிக்காவுக்கும் மற்ற பெரிய வங்கிகளுக்கும் ஒரு பாடம் புகட்ட முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
வங்கிகள் மத்தியதர வாடிக்கையாளர்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டியிருந்த அவர் இதற்கு முடிவு கட்டுவதற்காக வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை திருப்பிச்செலுத்தப்போவதில்லை என்று கூயிருயிருந்தார்.அதாவது வங்கி வட்டி விகிதத்தை மாற்றி பழைய விகதத்திற்கு மாற்றாத வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடனாளிகளின் புரட்சி என்று இந்த செயலை வர்ணித்த அவர் யூடியூப் தளத்தில் இதனை பதிவேற்றினார்.
அவர்து குரலில் இருந்த கோபமும் அதில் இருந்த நியாயமும் இணையவாசிகளை கவர்ந்திருக்க வேண்டும்.அந்த கோப்பை பார்த்தவர்கள் மற்றவர்களூக்கு அதனை ப்ரிந்துரை செய்தனர்.அவர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரைத்தனர்.
அதன்பிறகு யூடியூப் ரசிகர்கள் மத்தியில் அந்த கோப்பு பிகவும் பிரபலமாகிவிட்டது. அதனை பார்த்தவர்கள் தங்களது மோசமான வங்கி அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.ஒரு சிலர் தங்கள் பங்கிற்கு ஒரு விடியோ கோப்பை பதிவேற்றி ஆதரவு தெரிவித்தனர்.
முதல் சில நாட்களில் 2.5 லட்சம் பேர் அந்த கோப்பை பார்த்திருந்தனர்.இதற்குள் இந்த அவேச யூடியூப் போரட்டம் பற்றீ நாளிதழ்களில் செய்தி வெளீயானது.
வங்கிகளின் அடாவடியை எதிர்த்து வாடிக்கையாளர் ஒருவர் யூடியூப் மூலம் நியாயம் கேட்டு போராடும் விதம் பாராட்டப்பட்டது.இண்டெர்நெட் யுகத்தில் நுகர்வோர் தங்கள் குரலை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்லும் வாய்ப்பு இருப்பதை இந்த சம்பவம் மீண்டும் நிருபித்திருப்பதாக கருதப்படுகிறது.
இதனிடையே சம்பந்தபப்ட்ட் வங்கி இறங்கி வந்து ஆனின் வட்டி விகிதத்தை குறைக்க முன்வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.யூடியூப் வழி போராட்டத்திற்கான வெற்றியின் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது.

0 Comments on “வங்கிக்கு எதிராக யூடியூப் புரட்சி”
Arul
can u provide me that youtube video link…
TAMIL
ஒரு மாதகாலம் இலவசமக உங்கள் விளம்பரங்களை எமது வலைத்தளத்தில் பிரசுரிக்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய குறிப்பு : முதல் ஒரு மாதகாலம் மட்டுமே இங்கு இலவசமாக விளம்பரம் செய்யலாம் பிறகு இந்த இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும்
ஒரு மாதத்திற்கான விளம்பர தொகை : £3.00
பணம் கொடுத்து விளம்பரம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
P.Kandaswamy
Bold and beautiful