தெருவுக்கு டிவிட்டர் பெயர்

twitterstreet.jpegஉண்மையில் யாராவது டிவிட்டர் முகவரியை தனது பெயராக மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அது தான் இணைய உலகின் வழக்கம்.ஆனால அதற்கு பதிலாக தெருவுக்கு டிவிட்டர் முகவரி பெயராக சூட்டப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தெரு ஒன்றுக்கு அர்ஜான் எல் பஸாத் என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

யார் இந்த பஸாத்,அவர் டிவிட்டர் முகவரி எப்படி தெருவுக்கு பெயரானது என பார்ப்பதற்கு முன் இணைய உலகில் பெயர் கலாச்சாரத்தை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்.

பெயர் வைக்கும் போது வித்தியாசமான பெயர்களை தேடுவது போல சிலர் பெயரை மாற்றிக்கொள்வதும் உண்டு.இந்த பெயர் மாற்றம் ஒரு கொள்கை பிரகடனமாக ,புதிய போக்கின் பாதிப்பின் வெளிப்பாடாக அமைவதுண்டு.இப்படி தான் வலை மனைகள் பிரபலமாகி கொன்டிருந்த காலத்தில் அமெரிக்க வாலிபர் ஒருவர் தனது பெயரை டாட்காம்கய் என மாற்றிக்கொண்டார்.

டாட்காம்யுகத்தின் எழுச்சியை குறிப்பதற்காக இப்படி பெயர் மாற்றம் செய்து கோன்ட அவரது செயல் அப்போது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.(டாட்காம்கய் பற்றி விரைவில் தனியே எழுதுகிறேன்)

அதன்பிறகு புதிய இணைய போக்குகள் பிரபலாமாகும் போதெல்லாம் அத பாதிப்பாக பெயர் சூட்டிக்கொள்வதும் அரங்கேறியுள்ளது. அப்படிப்பார்த்தால் இப்போது எங்கு பார்த்தாலும் டிவிட்டர் சேவை ப‌ற்றியே பேச்சாக இருப்பதால் டிவிட்டர் முகவரியையே யாராவது பெயராக வைத்துக்கொள்ள முயற்சிப்பதை எதிர்பார்க்கலாம்.

டிவிட்டர் மூலம் கொஞ்சம் புகழ் வெளிச்சம் தேடிக்கொள்ளலாம் அல்லவா?

ஆனால் டிவிட்டர் முகவரியை பெயராக பெரும் வாய்ப்பு ஒரு தெருவுக்கே கிடைதிருக்கிற‌து.மேலே சொன்னது போல பஸாத் என்பவர் பாலஸ்தீன அகதிகம் முகாமில் உள்ள தெருவுக்கு தன‌து டிவிட்டர் முகவரியை பெயராக வைத்துள்ளார்.

ட‌ச்சு மைப்பு ஒன்று அக‌திக‌ள் முகாமில் தெருக்க‌ளுக்கு பெய‌ர் வைக்கும் உரிமையை விற்று நிதி திர‌ட்டி வ‌ருகிற‌து.இந்த அமைப்பிட‌மிருந்தே ப‌ஸாத் த‌ன‌து டிவிட்ட‌ர் முக‌வ‌ரியை தெர்வுக்கு பெய‌ராக‌ வைக்கும் உரிமையை பெற்றுள்ளார்.

இந்த‌ மூல‌ம் டிவிட்ட‌ர் ப‌க்க‌த்திற்கு கொஞ்ச‌ம் புக‌ழ் தேடிக்கொண்ட‌தோடு அக‌திக‌ளுக்கு உத‌விய‌து போல‌வும் இருக்கும் என்று அவ‌ர் க‌ருதுகிறார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *