எட்டுத்திக்கும் மத யானை என்பது போல உலக மொழிகளில் எல்லாம் வலைப்பதிவு செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக தான் இருக்கும் ஆனால் அதற்கு பல மொழிகள் தெரிந்திருக்க வேண்டுமே என நீங்கள் நினைக்கலாம்.
நாம் பன்மொழி புலவர் அப்பாதுரையாக இல்லாவிட்டலும் கூட ஒரு சில மொழிகளையாவது அறிந்திருந்தால் தானே நம்முடைய வலைப்பதிவுகளை பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியும்.அதன் மூலம் புதிய மொழிகளிலும் வாசகர்களை பெற முடியும்.
ஆனால் மற்ற மொழிகளில் புலமை இல்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை.அதற்காகதான் கூகுல் இருக்கிறதே.
ஆம் வலைப்பதிவுகளை மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துக்கொள்ளும் வசதியை கூகுல் அறிமுகம் செய்துள்ளது.மொழி மாற்றத்திற்க்கான இந்த சேவையை பய்னப்டுத்தி வலைப்பதிவை வேறு மொழிகளில் வெளியிட முடியும். இப்படி 50 மொழிகளில் வாசகர்களை சென்றடைய முடியும்.
இந்த சேவையை பயன்படுத்தும் முறையை அறிய http://translate.google.com/translate_toolச் என்ற முகவரிக்கு செல்லவும்
நிற்க இதே போல ஃபேஸ்புக் தளமும் மொழிபெயர்ப்பு சேவை அறிமுகம் செய்துள்ளது.
தமிழுக்காக குரல் கொடுங்கள்
இந்த சேவையில் தமிழ் இடம்பெறவில்லை என்று சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். உண்மைதான். தமிழ் விடுபட்டிருப்பது வருத்தத்தை தருகிறது.மிக விரைவில் தமிழ் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.மேலும் தமிழ் மொழியை இஒப்பட்டியலில் சேர்க்க கோரி கூகுலை வலியுறுத்தவும் செய்யலாம்.
வலைப்பதிவுலகில் தமிழ் முக்கிய மொழியாக இருக்கும் போது கூகுல் இவ்வாறு தமிழை கருத்தில் கொள்ளாதது ஏன்?
—————-

0 Comments on “50 மொழிகளில் வலைப்பதிவு செய்ய”
Nundhaa
அது சரி … ஆனால் தமிழ் எங்கே?
திருதிரு
தமிழ் இல்லையே! தமிழில் வரும் வலைகளை எப்படி மாற்றுவது?