சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர் என்று பொருள்.
தகவல்கள் அழகானது (இன்பர்மேஷன் ஈஸ் பியூட்டிபுல்) என்னும் பெயரில் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள்து.
தகவல்களை தகவல்களாக பார்க்காமல் அவற்றை காட்சி ரீதியாக உருவகப்படுத்திக்கொண்டு பார்த்தால் தகவல்கள் உணர்த்தும் பொருளை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுபவர்கள் இருக்கின்றனர்.இப்படி காட்சி ரிதியாக பார்பது மிகவும் சுவாரஸியத்தை அளிக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.
காட்சிரீதியாக தகவல்களை காணும் முறை இன்போகிராபிக்ஸ் என்னும் பெயரில் அழைகப்படுகிறது. தமிழில் தகவல் சித்திரம் என்று வைத்துக்கொள்வோமே.இவ்வாறு இண்டெர்நெட் தொடர்பான பல அழகிய தகவல் சித்திரங்கள உருவாக்கப்பட்டுள்ளன.இத்தகைய சித்திரங்களை உருவாக்குவதில் புகழ் பெற்ற கலைஞர்களும் இருக்கின்றனர்.
இந்த பிரிவில் பிரசித்திப்பெற்ற இணையதளங்களும் உள்ளன.மேலே சொன்ன தளம் இந்த வகையை சேர்ந்த்து தான்.பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிராமல் சொல்ல வரும் விஷயத்தை அழகாக ஒரு தகவல் சித்திரத்தின் மூலம் காட்சி ரீதியாக சொல்லி விடுவது தான் இந்த தளத்தின் தனிச்சிறப்பு.
அழகான படங்களின் மூலம் இந்த தளத்தில் சுவையான சங்கதிகளை தெர்ந்துகொள்ள முடியும்.
இந்த தளத்தில் சமீபத்தில் சமூக வலைப்பின்னல் தளங்களின் பயன்பாட்டை விவரிக்கும் தகவல் சித்திரம் வெளியிடப்பட்டது.ஃபேஸ்புக்,ஃபிளிக்கர்,மைஸ்பேஸ் உள்ளிட்ட தளங்களின் பயனாளிகளில் பெண்களே அதிகம் உள்ளதாக இந்த சித்திரம் சுடிக்காட்டுகிறது.
யூடியூப்,மற்றும் ,லின்கிட் இன் போன்ற தளங்களில் இந்த எண்ணிக்கை சம அலவில் உள்ளன.
டிக் தளத்தில்(தமிழிஷின் முன்னோடி)மட்டும் ஆண்களின் கை ஒங்கியுள்ளது.
இந்த விவரங்கள் ஆச்சர்யமானவை.காரணம் பொதுவாக இண்டெர்நெட் பயன்பாட்டில் ஆண்களே அதிகம் இருக்கும் நிலையில் சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்கள் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்க விஷயம் தான்.ஒருவேளை பெண்கள் உறவை வளர்ப்பதில் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பதை உணர்த்துவதாக இதனை கொள்ளலாமா?என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.
நீற்க சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு புள்ளி விவரத்தின் படி ஆன்லை கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் தகவல்களை சமர்பித்து திருத்தும் தொண்டை செய்யும் பயனாளிகளில் பெண்கள் 14 சதவிதத்திறகும் குறைவாகவே இருக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.பெரும்பாலும் ஆண்களே விக்கிபீடியாவில் கட்டுரைகளை உருவாக்கி வருவதை இந்த புள்ளிவிவரம் உணர்த்துவதாகவும் கருதப்பட்டது.
அது மட்டுமல்ல விக்கிபீடியாவின் தமிழ் பதிப்பை பொருத்தவரை பெண்களின் பங்களிப்பு இரண்டே இரண்டு சதவீதம் தான் என்றும் தெரிய வந்துள்ளது.
இணையவாசிகளின் பங்களிப்பில் உருவாகும் புது யுக கலைக்களஞ்சியம் ஆண்களின் படைப்பாகவே இருப்பதாக கருதப்படும் நிலையில் சமூக வலைப்பின்னல் தளங்களில் மங்கையர் ராஜ்ஜியம் நடப்பது ஆச்சர்ய செய்தி தானே.
—
link;
http://www.informationisbeautiful.net/2009/who-rules-the-social-web/
—
வரைபட விவரங்கள் தொடர்பான என் முந்தைய பதிவு…

0 Comments on “ஃபேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம்”
விடுதலை வீரா
அருமையான கட்டுரை உண்மையும் அதுவே
yarl
nice