அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபட் ஒபாபாவுக்கு வழங்கப்பட்டிருப்பது அச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ஒபாமாவுக்கு நோபல் என்றதும் நிஜம் தானா என்றே பலருக்கும் கேட்கத்தோன்றியிருக்கும்.சிலருக்கு நோபல் குழு காமெடி கீமெடி செய்யவில்லையே என கெட்கவும் தோன்றியிருக்கலாம்.ஒபாமா மாற்றத்தை கொண்டு வருவார் என்று நம்பியவர்கள் கூட நோபல் பரிசு அறிவிப்பால் வியந்து போயுள்ளனர்.
ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ஏன்,இந்த தேர்வு சரி தானா என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இணைய உலகம் இந்த அறிவிப்பு பற்றி என்ன நினைக்கிறது தெரியுமா?முற்றிலுமாக நொந்து போயிருக்கிறது .
இணையவாசிகளில் 69 சதவீதம் பேர் இந்த அறிவிப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.31 சதவீதம் பேர் மட்டுமே இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.(அதுவே அதிகம் தான்)
முக்கிய நிகழ்வுகளின் போது டிவிட்டரில் அது பற்றிய கருத்தை உடனே பதிவு செய்வது வழக்கமாக உள்ளது அல்லவா? ஒபாமா பரிசு பெறுவது பற்றியும் பலரும் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவற்றில் பெரும்பாலானவை எதிர்மறையாகவே அமைந்துள்ளன.இண்டெர்நெட் மனநிலைஅயை ஆய்வு செய்யும் கிரிம்சன் ஹெக்ஸகன் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
ஒபாமா அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற போது அதனை கொண்டாடதவர்கலே இல்லை என்று சொல்லலாம்.ஆனால் அவருக்கு நோபல் வழங்கப்பட்டிருப்பது ரொம்ப ஓவர் என்றே பலரும் கருதுகின்றனர்.
மகாத்மாவுக்கு வழங்கப்படாத அமைதி நோபல் இப்போது ஒபாமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது . என்ன ஒரு முரண்.

0 Comments on “ஒபாமாவுக்கு நோபாலா?ஆன்லைனில் அதிர்ச்சி”
கிரி
நம்ம கலைஞர் விருது கொடுத்த மாதிரி கொடுத்துட்டாங்க போல 🙂