ஒரே பக்கத்தில் ,அதாவது முகப்பு பக்கத்தில் எல்லா பாடகர்கள் பற்றிய விவரங்களையும் இடம்பெற வைத்தால் எப்படி இருக்கும்.ஒன்பேஜ் ஆர்டிஸ்ட் இணையதளம் இதை தான் அழகாக செய்கிறது.
பாப் பாடகர்களில் தொடங்கி ராக் பாடகர்கள் ,ஹிப் ஹாப் படகர்கள்,ராப் பாடகர்கள் என மேற்கத்திய இசை உலகில் எத்தனை வகையான பாடகர்கள் இருக்கின்றனறோ அவர்கள் அனைவர் பற்றிய தகவல்களை தாங்கிய வண்ணம் இதன் முகப்பு பக்கம் அமைந்துள்ளது.
ஒரே குடையின் கீழ் எல்லா தகவல்களூம் என்று சொல்வது போல ஒரே இடத்தைல் பாடகர்களை பற்றி தெரிந்து கொள்ள செய்வது நல்ல முய்ற்சி தான்.ஆனால் முகப்பு பக்கம் சிக்கலானதாக குழப்பம் தரக்கூடியதாக தோன்றுமே என்ன செய்வது ?
ஆச்சர்யப்படும் வகையில் ஒன்பேஜ் ஆர்டிஸ்ட் தளத்தின் முகப்பு பக்கம் குழப்பமில்லாமல் எளிமையாகவே அமைந்திருக்கிறது.அந்த அளவுக்கு தகவல்களை அழகாக தொகுத்துள்ளனர்.பல்வேறு வகையான இசை வடிவங்கள் தனித்தனி தலைப்புகளாக பிரிக்கப்பட்டு அவற்றின் கீழ் பாடகர்கள் இடம்பெறுகின்றனர்.
விரும்பிய படகரின் பெயரை கிளிக் செய்தால் முழு விவரங்களும் தனிப்பக்கத்தில் வந்து நிற்கும்.இங்கு இடம்பெறும் தகவல்கள் மெரும்பாலும் ஏற்கனவே யூடியூப்,அமேஸான்,போன்ற தலங்களில் இருப்பவைதான்.அவற்றை மிக அழகாக தொகுத்து தருவது தான் இதன் சிறப்பு.
சின்னதாக பயோ டேட்டா, பாடல் ஆல்பங்களின் வீடியோ கோப்புகள்,எதிர்வர உள்ள இசை நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் ஆகியவை இடம்பெற்றிருகின்றன.பக்கத்திலேயே இதே போன்ற கலைஞர்கள் என்னும் குறிபோடு நிகரான மற்ற படகர்கள் பற்றிய விவரங்களும் இடம்பெறுகிறது.
ஆக ஒரு முறாஇ உள்ளே நுழைந்துவிட்டால இசைப்பிரியர்கள் மேற்கொண்டு விவரங்களை தேடிக்கொண்டே செல்லலாம்.
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம் முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு தலைப்புகளின் கீழும் 5 பாட்கர்கள் மட்டுமே இடம்பெறுவது தான்.இதனால் முகப்பு பக்கம் எளிமையாக தோற்றம் தருவதோடு தற்போது முன்னியில் உள்ள பாடகர்களின் பட்டியலாகவும் இது அமைகிறது.இந்த வகையில் இசை சந்தையில் நிலவும் போக்குகளையும் தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பிட்ட பாடகர் தொடர்பான தகவல் தேவை என்றால் முகப்பு பக்கத்திலேயே தேடல் வசதி இருக்கவே இருக்கிறது.
—–