விக்கிபீடியாவை எங்கே சென்றாலும் கையோடு எடுத்துச்செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் கொண்டவர்கள் மகிழக்கூடிய வகையில் விக்கிரிடர் அறிமுகமாகியுள்ளது.
ஒபன்மோகோ என்னும் நிறுவனம் இதற்காக கையடக்க சாதனத்தை உருவாக்கி உள்ளது.விக்கிரீடர் என்னும் இந்த கையடக்க சாதனத்தில் விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து வாசிக்க முடியும்.
இபுக் சாதனத்தைப்போல தோன்றும் இதனை உள்ளங்கையில் வைத்துக்கொண்டே விக்கிபீடியாவை அணுக முடியும்.இதன் திரை வாசிப்பதற்கு ஏற்ற வகையில் தெளிவாக இருப்பதோடு இதனை இயக்குவதும் எளிதானது.
இதில் உள்ள ஒரே குறை விக்கிபீடியாவில் செய்யபப்டும் திருத்தங்கள் உடனடியாக இடம்பெறாது என்பது தான்.திருத்தங்களை மூன்று மாதமங்களுக்கு ஒரு முறை தான் டவுண்லோடு செய்ய முடியும்.
விக்கிரீடர் சாதனம் 99 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.