எதை எழுதுவது ?எப்படி எழுதுவது?என்னும் குழப்பமும் ,சந்தேகமும் கதை எழுத விரும்பும் பலருக்கு ஏற்படக்கூடியது.இதே குழப்பமும் சந்தேகமும் வலைப்பதிவாளர்களுக்கும் உண்டாகலாம்.
அதிலும் வலைப்பதிவு செய்வது என்பது மிகவும் சுலபம் என்னும் நிலையில் எதையாவது நாமும் பதிவிடலாமே என்ற எண்ணம் ஏற்படுவது இயற்கை தான்.ஆனால் எதை பற்றி வலைபடிவிடுவது என்பது மில்லியன் டாலர் கேள்வி போல வாட்டி எடுத்து விடும்.
எதைப்பற்றி எப்படி வலைப்பதிவு செய்வது என்னும் கேள்விக்கு பதில் அளிப்பதை விட மிகச்சிறந்த வலைப்பதிவுகளை சுட்டிக்காட்டி இப்படி பதிவிடலாம் என குறிப்பால் உணர்த்தி விடலாம்.ஒரு சில வலைப்பதிவு தளங்களை பார்க்கும் போது அட நமக்கு இது தோன்றாமல் போய்விட்டதே என்ற வியப்பு ஏற்படும்.
இப்படி வியப்பை ஏற்படுத்தக்கூடிய அருமையான வலைப்பதிவு தளமாக ‘எவ்ரி பர்சன் இன் நியூயார்க்’ தளத்தை குறிப்பிடலாம்.
ஒரு விதத்தில் லட்சிய நோக்கம் கொண்ட வலைப்பதிவு இது.நியூயார்க் நகரில் உள்ள ஒவ்வொருவரையும் படமாக வரைந்து அந்த படங்களை இடம்பெற வைப்பதே இந்த பதிவாளரின் நோக்கமாக இருக்கிறது.
தினந்தோறும் நகரில் தான் பார்ப்பவர்களை அழகிய கோட்டோவியமாக வரைந்து சிறு குறிப்போடு அதனை தளத்தில் இடம் பெற வைக்கிறார்.அவர் வரைவது மற்றவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். சப்வே , பார்க் போன்ற பொது இடங்களில் நின்றபடி கண்ணில் படுபவர்களை வரைந்து தள்ளுகிறார்.
நியூயார்க்வாசி யாராவது தன்னால் வரையப்பட வேண்டும் என்று விரும்பினால் இமெயில் மூலம் தனக்கு தெரிவிக்கலாம் என்றும் இவர் குறிப்பிர்ட்டுள்ளார்.
இவர் வரைந்துள்ள சித்திரங்களையும் குறிப்புகளையும் பார்க்கும் போது சுவையாக உள்ளது.எல்லோரையும் வரைந்து முடித்த பிறகு ஒரு மெக கெட் டுகதர் ஏற்படு செய்ய உள்ளாராம்.
இப்படி எல்லோரையும் வரைபவர் தன்னைப்பற்றி எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.

0 Comments on “ஒரு வலைப்பதிவாளரின் லட்சியம்”
ragu
nalla pathivu 🙂
velji
எவ்வளவு சிம்ப்ளா பெரிய விஷயத்தை யோசித்து விட்டார்!
நல்ல பகிர்வு!
chollukireen
மிகவும் சரியாகச் சொன்னீர்கள்.
குளோபன்
நல்ல பகிர்வு
Pingback: வேர்ட்பிரஸ் பதிவர் « aataiyapottadu
rajapalani
அருமை அருமை வெல்லுங்கள்