வாழும் மாகாத்மா,நடமாடும் மேதை என்றெல்லாம் சிலர் வர்ணிக்கப்படுகிறார்கள்.ஆனால் இத்தகைய அடைமொழிக்கெல்லாம் உண்மையில் பொருத்தமானவர் டிம் பெர்னர்ஸ் லீ தான்.
இண்டெர்நெட்டின் தற்போதைய வடிவமான வைய விரிவு வலையை உருவாக்கியதன் மூலம் இண்டெர்நெட் புரட்சிக்கு வித்திட்டவர் டிம் பெர்னர்ஸ் லீ .தனது கண்டுபிடிப்பின் மூலம் தான் பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைய நினைக்காமல் உலகம் அதன் பயனை அடைய வேண்டும் என நினைத்ததே லீ தனிச்சிறப்பு.
இண்டெர்நெட் இண்ரு கட்டற்று அதிகார மையம் எதன் கீழும் இல்லாமல் சுதந்டதிரமாக இருக்கிறது எனறால் அதற்கு லீயே முக்கிய காரணம்.இண்டெர்நெட் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற லீயின் கொள்கையே அதனை இன்று வரை வழி நடத்துகிறது.
தான் உருவாக்கிய வலை இன்று உலகையே மாற்றியமைக்க கூடிய மாபெரும்சக்தியாக உருவாகி இருக்கும் நிலையிலும் லீ அதற்கு உரிமை கொண்டாட முற்பட்டதில்லை.
இண்டெர்நெடின் தந்தை என்று போற்றப்படும் லீ இப்போது இணைய உலகில் புதிய சக்தியாக கருதப்படும் குறும்வலைப்பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
டிவிடரில் தனக்கென தனி பக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ள லீ இந்த சேவை கொஞ்சம் குழப்பமானதாக இருப்பதாக தனது முதல் பதிவில் கூறியுள்ளார்.
இணைய மேதையான லீயின் நடவடிக்கைகளை பின்தொடர விரும்புகிறவர்கள் அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்றூ பார்க்கலாம்.
—–
link;
http://twitter.com/timberners_lee