ஒபன் சோர்ஸ் சாப்ட்வேர் முறையின் அருமை பெருமை அறிந்தவர்கள் மிகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.அதிலும் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் கில்லாடிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் காரணம் வெள்ளை மாளிகை இணையதளம் ஒபன் சோர்ஸ் முறைக்கு மாறியிருப்பது தான்.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லாமாக வெள்ளை மாளிகை திகழ்கிறது.அதிபரின் இனையதள முகவரியும் வெள்ளை மாளிகை பெயரிலேயே அமைந்திருக்கிறது.வொயிட் ஹவுஸ் டாட் ஜிஒவி என்னும் முகவரியில் வெள்ளை மாளிகை இணையதளம் இயங்கி வருகிறது.
மாற்றத்திற்கு வித்திடுவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள பாரக் ஒபாமா தன்னுடைய அரசு வெளிப்படையான செயல்பாட்டினை கொண்டிருக்கும் என்றும் மக்களின் பங்களிப்பிற்கு வழி வகுக்கும் என்றும் வாகுறுதி அளித்திருந்தார்.தேர்தல் பிராசாரத்தின் போதே இண்டெர்நெட்டின் ஆற்றலை முழு வீச்சில் பயன்படுத்தி போட்டியாளர்களை முந்தியவர் என்பதாலும் அட்சியிலும் இண்டெர்நெட்டை பயன்படுத்தி மாற்றத்தை கொண்டு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
அரசுக்கே உரிய இறுகத்தை தளர்த்தி பொது மக்களோடு தொடர்பு கொள்ளவும் மக்களின் கருத்து அறிந்து அரசின் கொள்கை முடிவுகளை வகுக்கவும் இண்டெர்நெட் மற்றும் சமுக வலைப்பின்னல் தலங்களை ஒபாமா பயன்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதுவரை ஒபாமா அந்த நம்பிக்கையை காப்பாற்றி வருகிறார். பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாவிட்டலும் தன்னால் இயன்றதை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை மாளிகையின் இணையதளம் இனி பொன் சோர்ஸ் சாப்ட்வேரை அடிப்படையாக கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முடிவு பரவலான் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஒப்ன் சோர்ஸ் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றியாகவும் இது கருதப்படுகிறது.
சாப்ட்வேரின் அடிப்படை கோட்கள் ரகசியாமாக இல்லாமல் பகிரங்கப்படுத்தப்படுவதும்,அவற்றை யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொண்டு மாற்றங்களை செய்து பேம்படுத்த முடிவதும் ஒபன் சோர்ஸ் முறையின் சிறப்பு.எல்லா சாப்ட்வேரும் ஒபன் சோர்ஸ் முறையிலிருப்பதே சரி என்று வாதிடப்படுகிறது.ஒபன் சோர்ஸ் என்பது இலவசமல்ல சுதந்திரம் என்னும் கருத்தும் வலியுறுத்தபடுகிறது.
விஷயம் என்னவென்றால் ஒபன் சோர்ஸ் முறையிலான சாப்ட்வேரை பயன்படுத்தும் போது அதனை யார் வேன்டுமானாலும் மாற்றியமைக்கலாம்.இந்த மாற்றம் பெரும்பாலும் மேம்பாடு சார்ந்ததாக இருக்கும்.
வெள்ளை மாளிகை இந்த முறைக்கு மாறியிருப்பதால் இனி இந்த தளம் தொடர்பான வடிவமைபை பயனாளிகள் மாற்றியமைக்க முடியும்.தாவது தள உருவாக்கத்தில் பங்கேற்று தங்கள் கருத்தை தெரிவிக்க முடியும்.தன் மூலம் தளத்தின் கோட் அமைப்பில் இருக்கக்கூடிய ஓட்டைகளை எளிதில் திருத்திவிட முடியும் என்று கருதப்படுகிறது.
துருபல் என்னும் ஒபன் சோர்ஸ் சாப்ட்வேர் உதவியோடு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பகிர்வு மற்றும் பங்கேற்பு என்பதே சிறந்த அரசின் கொள்கையாக இருக்க முடியும். இணையதள வடிவமைப்பில் ஒபமா இதனை கொண்டு வர முயன்றுள்ளார்.