முதலில் கண்ணாடி பாடில்கள் அறிமுகமாயின.பின்னர் பிளாஸ்டிக் பாட்டில்கள் அறிமுகமாயின. இப்போது புரட்சிகரமான மடிக்கக்கூடிய பாட்டில்கள் அறிமுகமாயுள்ளன.அமெரிகாவை சேர்ந்த வேப்பர் என்னும் நிறுவனம் இந்த பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக தண்ணீர் பாடில்களை பயன்படுத்திய பிறகு என்ன செய்வோம் தூக்கியெரிந்து விடுவோம் அல்லவா? வேப்பர் பாட்டிலல்களை தாக்கியெரிய வேண்டாம் . தண்ணிர் தீர்ந்த பிறகு அப்படியே மடித்து பையிலேயே அல்லது பாக்கெட்டிலோ வைத்துக்கொண்டு விடலாம். அடுத்தமுறை தேவைப்படும் போது மீண்டும் எடுத்து தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டியது தான்.
தண்ணீர் நிரப்ப படும் போது மட்டும் பாட்டில் வடிவம் கொள்ளக்கூடிய பாட்டில் இது என்று வேப்பர் இதனை வர்ணிக்கிறது.விஷேச பிளாஸ்டிக்கை கொண்டு இந்த பாட்டிலை நிறுவனம் தாயாரித்துள்ளது.
இந்த தயாரிப்பின் புதுமைத்தன்மையை எளிதில் புரிந்து கொள்ளலாம்.ஆனால் வெறும் வர்த்தக தயாரிப்பாக மட்டும் இதனை வேப்பர் நிறுவனம் அறிமுகம் செய்யவில்லை.இதனை ஆன்டி பாட்டில் அதாவது எதிர் பாட்டில் என நிறுவனம் குறிப்பிடுகிறது.
பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் நோக்கம் என்பதை வேப்பர் நிறுவனத்தின் இணையதளம் மூலம் அறிய முடிகிறது.ஆனால் இதன் பின்னே இருப்பது வெறும் வணிக சிந்தனை மட்டுமல்ல.பிளாஸ்டிக் தண்ணிர் பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டைனை கட்டுப்பதுத்துவதும் தான்.
தளத்தில் உள்ள நிறுவன அறிமுகப்பகுதியில் பாட்டில் தண்ணீரைவிட அதாவது மினரல் வாட்டரை விட குழாய் தண்ணீரே சிறந்தது என கருதுவதால் குழாய் தண்ணிரை சுலபமாக எடுத்துச்செல்லக்கூடிய வகையில் இந்த பாட்டில்களை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மினரல் வாட்டரில் உள்ள அணுகூலம் என்னவென்றால் வேண்டும் போது வாங்கிக்கொண்டு பயன்படுத்திய பிறகு தூக்கியெரிந்து விடலாம் என்பது தான்.அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பை நாம் உணர்வதில்லை.அப்படியே உணர்ந்தாலும் நம்மால் அதிகம் செய்ய முடியாது..காரணம் வர்த்தக நிறுவனங்களுக்கு லாபம் கொழிக்கும் தொழிலாக இது விளங்குகிறது. அதன் விளைவாக தண்ணீர் தொழில் செழிக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 5000 கோடி மினரல் வாட்டர் பாட்டில்கள் விற்பனையாகினறன. உலகம் முழுவதும் 20000 கோடி மினரல் வாட்டர் பாட்டில்கள் விற்பனையாகின்றன.அமெரிக்க தண்ணீர் சந்தையின் தேவைக்கான பாட்டில்களை உருவாக்க ம்ட்டும் 1.7 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது.அது மடுமல்லாமல் இவற்றின் போக்குவரத்திற்காகவும் பெருமலவில் எரிபொருள் தேவைப்படுகிறது.எல்லாமே சுற்றுச்சூழலுக்கு சுமை தான்.
இதனை எல்லாம் குறிப்பிட்டுள்ள வேப்பர் நிறுவனம் பலவிதங்களில் குழாய் நீரே பாதுகாப்பனது என தெரிவிக்கிறது.குழாய் நீரை சுலபமாக எடுத்துச்செல்ல வசதியாக பயன்படுத்திய பின் மடித்து வைக்க கூடிய பாட்டில்களை தாயரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
—-

0 Comments on “புரட்சிகர பாட்டில் அறிமுகம்.”
rajarajan
just ippa thaan anatha vikatan la parthan unga site pathi its superb
cybersimman
thanks