கூகுல் ஒரு பேரரசைப்போல.அதன் ஆற்றலும் பெரிது.அதன் ராஜ்ஜியமும் பரந்து விரிந்தது.அதன் வியூகமும் சக்தி வாய்ந்தது.அதன் அடுத்த கட்ட திட்டங்களும் எண்ணிலடங்காதவை.கூடவே மிக்க ரகசியமானவை.
கூகுலின் திட்டங்களில் எது வதந்தி எது உண்மை என்று பகுத்தறிய முடியாமல் இருக்கும் .இப்போதைய வதந்தி விரவில் கூகுல் போன் அறிமுகமா இருக்கிறது என்பது தான்.ஜி போன் என்னும் பெயரில் கூகுல் தானே சொந்தமாக செல்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.
ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக ஜி போன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூகுல் இது பற்றி மவுனம் காத்தாலும் இந்த செய்தி இணைய உலகில் உலா வந்த வண்ணம் உள்ளது.இந்நிலையில் பிரபல தொழில்நுட்ப வலைப்பதிவான டெக்கிரஞ்ச் கூகுலின் இந்த திட்டம் உண்மையானது தான் அடுத்த ஆண்டு ஜி போன் நிச்சயம் வரும் அன கூறியுள்ளது.டெக்கிரஞ்ச் நம்பகமான தளம் என்பதால இதனை வெறும் வதந்தி என கொள்வதற்கில்லை.
ஏற்கனவே கூகுல் தனக்கேன பிரவுசர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செய்திகளும் வதந்திகளும் மாறி மாறி உலா வந்து குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் இறுதியில் கூகுல் குரோம் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியது.
ஜீ போன் விஷயத்திலும் இப்படியே நிகழலாம்.ஆனால் ஒன்று கூகுல் இது வரை சாப்ட்வேரைத்தாண்டி ஹார்டுவேர் பக்கம் வந்ததில்லை .எனவே ஜி போன் சாத்தியமில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது.கூகுல் தான் ஐபோன் போட்டியை சமாளிக்க ஸ்மார்ட் போன்களூக்கான ஆப்பரேட்டிங் அமைப்பான ஆன்டிராய்டை அறிமுகம் செய்துள்ளதே என்று கூறுபவர்களும் இருக்கின்றனர்.
ஆனால் கூகுல் விஷயத்தில் என்ன் வேண்டுமானாலும் நடக்கலாம்.கூகுலின் அடுத்த நகர்வு என்பது புரியாத புதிர் அல்லவா?

5 Comments on “வருது வருது ,ஜீ..போன் வருது”
ராஜேஷ் கண்ணன்
I think google has hardware products. They sell document searching servers. http://www.google.com/enterprise/search/mini.html
cybersimman
true. but not the type like cell phone or say desktop
Bluespace +_Arivumani, germany
ITS TRUE… for this Chrismas , they are providing G phone to their employees as giift..
cybersimman
is it
vaarththai
best blog listtil ungalai kandane
http://youthful.vikatan.com/youth/NYouth/Blogs.asp
vaazhthukkal