இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுமானால் இணையம் சார்பில் அதனை பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்தவர். யார்?
இந்த கேள்விக்கு அதிக யோசனையோ ,தயக்கமோ இல்லாமல் வலையை உருவாக்கிய பிதாமகன் டிம் பெர்னர்ஸ் லீ என பதில் சொல்லிவிடலாம். 1969 ம் ஆண்டே அர்பாநெட் வடிவில் இண்டெர்நெட் பிறந்துவிட்டாலும் அதன் மக்கள் வடிவமான வைய விரிவு வலையை (world wide web)லீ உருவாக்கிய பிறகே இண்டெர்நெட் தற்பொது நாம் பயன்படுத்தும் வடிவை பெற்றது.
லீ உருவாக்கிய வலையின் பின்னே இருந்த கருத்தாக்கம் மற்றும் கோட்பாடு புரட்சிகரமானது.லீயின் உண்மையான சாதனை என்னவென்றால் தனது கண்டுபிடிப்பால் பொருளாதார ரீதியாக பயன் பெற நினைக்காமல் வலையானது எல்லோருக்கும் பொதுவில் இருக்க வேண்டும் என்று கருதி அவர் தன்னலமற்று செயல்பட்டதே.லீ நினைத்திருந்தால் வலை மூலம் கோடிக்கணக்கில் டாலர்களை சம்பாதித்திருக்க முடியும்.ஆனால் அப்போது இண்டெர்நெட் இந்த அளவுக்கு திறந்த அமைப்பு கொண்டதாக உருவாகியிருக்க முடியுமா என்பது சந்தேகமே.
லீ இண்டெர்நெட்டால் பணம் சம்பாதிக்க நினைக்காமல் அது தகவல் பரிமாற்றத்திற்கான கட்டற்ற வழியாக அமைய வேண்டும் என்று விரும்பினார்.அதுவே இன்று இணையத்தின் ஆதார குணமாகவும் பலமாகவும் திகழ்கிறது.மேலும் இண்டெர்நெட்டின் அதிகாரம் மையப்படுத்தாமல் பரந்து விரிந்த்தாகவே இருக்கிறது.இண்டெர்நெட் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் அதன் தன்மைக்கு ஏற்பவே சுதந்திரமானதாக விளங்குகிறது.
இண்டெர்நெட் எல்லொருக்குமானதாக இருக்க வேண்டும் என்று லீ கருதியதே இண்டெர்நெட்டையும் இண்டெர்நெட் கால சமுகத்தையும் வழி நடத்துகிறது.
எனவே இண்டெர்நெட்டுக்கான அமைதி பரிசை தன் சார்பில் பெற லீ பொருத்தமானவரே.
கூட்டாக பலரை தேர்வு செய்யலாம் என்னும் படசத்தில் மேலும் சில முன்னோடிகளை பரிந்துரைப்பதும் சுலபமே.மவுசை உருவாக்கிய டக்ளஸ் எங்கல்பர்ட், இமெயிலுக்கு வித்திட்ட டாம்லின்சன்,இண்டெர்நெட்டின் ஆர்ம்பகால முன்னோடியான வின்சென்ட் செர்ப் ஆகியோரை குறிப்பிடலாம்.
இவர்களோடு கட்டற்ற மென்பொருள் தத்துவத்தை முன்வைத்த ஒபன் சோர்ஸ் பிதமகன் ரிச்சர்டு ஸ்டால்மன்,இந்த கொள்கைக்கு லினக்ஸ் மூலம் செயல்வடிவம் கொடுத்து புதிய இயக்கத்துக்கு வித்திட்ட லினஸ் டோவல்ஸ் ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
நேப்ஸ்டர் சாப்ட்வேரை உருவாக்கி இசை உலகின் சமன் குலைத்து இணையவாசிகள் கையில் டவுண்லோடு அதிகாரத்தை அளித்த ஷான் ஃபேனிங்,ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு லேப்டாப் திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்தின் பலனை ஏழை மாணவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க முயலும் நிக்கோலஸ் நெக்ரேபோண்டேவையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இன்னும் சில (பல)முன்னோடிகளை குறிப்பிட முடியும்.
எல்லாம் சரி எதற்கு இந்த பட்டியல் ,இண்டெர்நெட்டுக்கு யார் நோபல பரிசு தர போகின்றனர் என்று கேட்கலாம். நல்ல கேள்வி?
இந்த பதிவே அதற்காக தான்.
விஷயம் என்னவென்றால் இண்டெர்நெட்டுக்கு அமைத்திக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு அதற்கு ஆதரவாக ஒரு இணைய தளமும் அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உலகின் சிறந்த இதழாக கருதப்படும் வயர்டு பத்திரிக்கையின் இத்தாலிய பதிப்பின் ஆசிரியர் தான் இண்டெர்நெட்டுக்கு அடுத்த ஆண்டுக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதற்கு ஆதராவாக அவர் எடுத்து வைத்துள்ள காரணங்கள் வலுவானவை.
துவேஷத்தையும் ,பிரச்சனைகளையும் அழிக்கக்கூடிய பெரும் ஆயுதமாக அமைதி மற்றும் ஜனநாயகத்தை தழைக்கசெய்யக்கூடிய கருவியாக இண்டெர்நெட்டை கருத முடியும் என வயர்டு இத்தாலி ஆசிரியர் ரிக்கார்டோ லுனா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஈரானில் தேர்தல் முறைகேடுகளின் போது கடும் அரசு தணிக்கையை மீறி செய்திகளையும் உண்மை நிலவர்த்தையும் உலகிற்கு உணர்த்த இண்டெர்நெட்டும் டிவிட்டரும் பயன்படுத்தப்பட்ட விதத்தை இதற்கான சமீபத்திய உதாரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நம்பிக்கையோடு இண்டெர்நெட்டுக்கு அமைதி நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்க அவர் இண்டெர்நெட் ஃபார் பிஸ் என்னும் இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார்.
இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் இந்த தளத்தில் தங்கள் ஆதரவை பதிவு செய்யலாம்.ஏற்கனவே அமைதி பரிசை வென்றுள்ள ஈரானின் ஷிரின் இபாடி உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர்.நீங்களும் கருத்து தெரிவிக்கலாம்.
எளிமையாக அமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் இந்த கோரிக்கையின் நியாத்தை வலியுறுத்தும் வகையில் கொள்கை விளக்க அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் தமிழாக்கம் வருமாறு;.
”
இண்டடெர்நெட் என்பது ஒரு கம்ப்யுட்டர் வலைப்பின்னலுக்கும் மேலானது என நாம் உணரும் காலம் வந்துவிட்டது.இண்டெர்நெட் என்பது முடிவே இல்லாத மக்கள் வலை.மனிதகுலத்திற்கு அறிமுகமான இதுவரை இல்லாத மிகப்பெரிய சமுக இடைமுகமான இண்டெர்நெட் மூலம் ஒவ்வொரு நாளும் உலகின் முலை முடுக்கில் உள்ள ஆன்களுகம் பெண்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்கின்றனர்.டிஜிட்டக் கலாச்சாரமானது புதிய வகையான சமுகத்திற்கு அடித்தளமிட்டுள்ளது.இந்த சமுகமானது தகவல் தொடர்பு வாயிலாக உரையாடல்,விவாதம்,பங்கேற்பு ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறது. காரணம் ஜனநாயகம் எப்போதுமே விவாதம்,பங்கேற்பு,ஒத்த கருத்து,திறந்த மனப்பான்மை இருக்கும் போதே தழைத்தோங்கும்.மேலும் மற்றவர்களுடனான தொடர்பே துவேஷம்,மற்றும் பிரச்சனைகளூக்கு எதிரான மாற்று மருந்தாக இருந்து வந்துள்ளது.
எனவே தான் இண்டெர்நெட் அமைத்திக்கான சிறந்த ஆயுதமாக உள்ளது.
எனவே தான் தனை பயன்படுத்துபவர் அகிம்சையின் விதைகளை தூவ முடிகிறது.

4 Comments on “இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு”
anand
nice artical…. thank uuuuuuuuuuuuuuuuuuu……..
Pingback: இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு பரிந்துரை « Cybersimman's Blog

KALPANA K
http://twitter.com/THIRUKURAL1330 டிவிட்டரில் திருவள்ளுவர்… திரு வள்ளுவரின் 1330 குறள்-களும் டிவிட்டரில் ஏற்றி உள்ளேன், தங்களின் பார்வைக்கு.