ஆப்பிள் அருமையான நிறுவனம் தான். அதைவிட அதன் தாயாரிப்புகள் அருமையானவை.முதலில் ஐ பாடு,இப்போது ஐ போன் என ஆப்பிள் கலக்கி கொண்டிருக்கிறது.(அத்ற்கெல்லாம் முதலில் மேக்)குறிப்பாக தற்போது ஐபோன் சார்ந்த செயலிகள் வியக்கவும் மலைக்கவும் வைத்துக்கொண்டிருக்கின்றன.
ஐ போன் ஆப்ஸ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் செயலிகள் புதிய காலாச்சாரத்தையே உருவாக்கியுள்ளன. பயன்பாட்டு நோக்கில் இந்த செயலிகள் கொண்டு வந்துள மாற்றம் குறித்து நிறையவே எழுதலாம்.அது மட்டும் அல்ல ஐபோன் செயலிகள் சிறிய அளவிலான மென்பொருளாலர்களுக்கு புதிய வாயில்களை திறந்து வீட்டு அவர்களை பொருளாதார ரீதியாக நிமிர வைத்துள்ளது.
ஐபோனுக்காக ஒரு வெற்றிகரமான செயலியை உங்களால் ஒரு மென்பொருளாரால் உருவாக்க முடியும் என்றால் பொருளாதார நோக்கில் அவர் தன்னிரைவு பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. நூற்றுக்கணக்காண சுயேட்சை மென்பொருளாளர்கள் இப்படி உருவாகியுள்ளனர்.ஐபாடிற்க்காக ஆப்பிள் ஐடியூன்ஸ் இணையகடையை அமைத்து அதன் வெற்றிக்கு வழி வகுத்தது போல ஐபோனுக்காக ஒரு செயலி கடையை ஆப்பிள் அமைத்துள்ளது.
இதன் மூலம் புதிய செயலிகள் பதிவேற்றப்படுவதும் புதிய செயலிகளை தரவிறக்கம் செய்வதும் சுலபமாகியுள்ளது.இந்த கடையில் ஒரு லட்சத்திற்கும் மேல் செயலிகள் உள்ளன்.
ஆனால் ஒன்று இந்த கடையில் இடம்பெறும் செயலிகள் ஆப்பிளால் அங்கிகரிப்பட வேண்டும். அவற்றை நிராகரிக்கும் உரிமை ஆப்பிளின் வசம் உள்ளது.இந்த நிராகரிப்பு சில நேரங்களில் சர்ச்சைக்குறியாதாக இருந்து வருகிறது.பல மென்பொருளாளர்கள் ஆப்பிள் உரிய காரணம் செல்லாமல் தங்கள் செயலியை நிராகரித்து விட்டதாக குமுறுகின்றனர்.
நிராகரிக்கும் உரிமை ஆப்பிளுக்கு உண்டு எனறாலும் அதில் ஜனநாயக மயம் இல்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு.நிராகரிப்பதற்கான காரணங்களையும் ஆப்பிள் வெளிப்படையாக தெரிவிக்காமல் சர்வாதிகார மனப்பான்மையோடு நடந்து கொள்வதாக ஒரு கருத்து இருக்கிறது.
இந்த பின்னணி ஆப்பிளை வசைபாடவோ குற்றம் சாட்டவோ அல்ல.அதற்கு மாறாக ஆப்பிளின் இந்த குறையை பதிவு செய்து வரும் அருமையான இணையதளத்தை அறிமுகம் செய்ய.
அமெரிக்காவைச்சேர்ந்த ஆடம் மார்டின் என்பவர் இந்த தளத்தை அமைத்துள்ளார்.’ஐபோன்ஆப்ஸ்ரிஜக்சன்ஸ்’ என்பது இந்த தலத்தின் முகவரி.அதாவது ஆப்பிலால் நிராகரிக்கப்படும் செயலிகளை இந்த தளம் பதிவு செய்து வருகிறது.
மார்டின் ஐபோன் அலோசக்ராக செயல்பட்டு வருபவர் எனபது குறிப்பிடத்தக்க விஷயம்.
ஆப்பிள் நிராகரிப்பு பற்றி எந்த தகவலும் இல்லாத்தால் மென்பொருளாளர்களின் வசதிக்காக இந்த தளத்தை துவக்கியதாக அவர் கூறியுள்ளார்.
இது வரை ஆப்பிள் எததனை செயலிகளை நிராகரித்துள்ளது என்றி தெரியாத நிலையில் அதற்கான பதிவாக இந்த தளம் விளங்குகிறது.ஆப்பிலின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு சிறிய முயற்சி.பென்பொருளாளர்களின் குரலால் அவிளங்கும் அரிய முயற்சி.
—-

0 Comments on “ஐபோன் நிராகரிப்புகளுக்கு ஒரு தளம்”
jkrsothy
இவ்வளவு இன்றியமையாத கணிணித் தகவல்களை தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றி paandiyuraanjeya.blogspot.com