கூகுலின் பெயருக்கு பின்னே சுவாரசியமான கதை ஒன்று இருக்கிறது.அந்த கதையை மற்றொரு பதிவில் சொல்கிறேன். இப்போது இந்தியாவில் உள்ள கூகுல் கிராமம் பற்றிய செய்தியை பார்ப்போம்.டைமஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தி அது.
கர்நாடகா மாநிலத்தில் தலைநகர் பெங்களுரில் இருந்து 510 கீ மி தொலைவில் ரெய்ச்சூர் மாவட்டத்தில் அந்த கிராமம் அமைந்துள்ளது.ஆயிரம் பேர் மட்டுமே வசிக்ககூடிய அந்த கிராமத்தின் பெயரில் தான் இருக்கிறது விஷயம்.
ஆம் அந்த கிராமத்தின் பெயர் கூகுல்.
தேடியந்திர முதல்வனான கூகுல் மீதான அபிமானம் காரணமாக சூட்டிக்கொள்ளப்பட்ட பெயரோ என்று நினைக்க வேண்டாம்.ஏன் என்றால் கூகுல் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே இந்த கிராமத்தைற்கு கூகுல் என பெயர் வழக்கில் இருகிறது.
அதற்கு பின் சுவையான கதையும் இருக்கிறது. 12 ம் நூற்றாண்டில் அல்லமா பிரப்[உ என்பவர் இந்த கிராமத்தின் வழியே வந்து தங்கியிருக்கிறார்.கவிஞரான அவர் இங்குள்ள குகை ஒன்றில் தங்கியுள்ளார்.அவர் தங்கிய குகை காவி கல்லு என அழைக்கப்பட்டதாம். அதாவது கல் குகை என்று பொருள்.பின்னர் இந்த கிராமத்தைற்கே அதே பெயர் வந்திருக்கிறது.
காவி கல்லு என அழைக்கப்பட்டு வந்து பின்னர் கூகல்லு என மருவி பிறகு கூகுல் என அகிவிட்டது.
ஆனால் கிராமத்தில் எங்கும் கூகுல் எனும் பெயரை பார்க்க முடியாது. காரணம் எல்ல வார்த்தைகளும் கன்னடத்தில் தான் எழுதபட்டிருக்கும்.
கிராமவாசிகளுக்கு தங்கள் ஊர் பெயரில் ஒரு தேடியந்திரம் இருப்பது சமீப காலம் வரை தெரியாது. ஏன் என்றால் இங்கு இண்டெர்நெட் வசதியே கிடையாது.
சமீபத்தில் தான் இது பற்றி கேள்விப்பட்ட கிராமத்தினர் எங்கள் கிராமத்தின் பெயரை தான் கூகுல் வைத்துக்கொண்டிருக்கிறது என மெருமைப்படுகின்றனர்.
கூகுலுக்கு இது பற்றி தெரியுமா என்று தெரியவிலை.தெரிந்தால் காப்புரிமை மீரல் என வம்பு செய்யலாம்.