நீங்கள் ஒட்டுகேட்கப்படுகிறீர்கள்

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்த வசதியை நீங்கள் பயன்படுத்தியும் வரலாம். ஆனால் நீங்கள் இன்டெர் நெட்டில் பேசும் போது ஒட்டுகேட்கப் படும் சாத்தியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
ஒட்டுகேட்கப்படுகிறது என்றவு டன் நாம் என்ன அத்தனை பெரிய ஆளாக ஆகிவிட்டோமா என்றோ, நாம் பேசுவதை யார் ஒட்டுகேட்டு, என்ன செய்யப்போகிறார்கள் என்று அச்சப்படவோ தேவையில்லை.
இப்படி ஒட்டுகேட்பது தனிநபரோ, அமைப்போ அல்ல, ஒரு சாப்ட்வேர். அந்த சாப்ட்வேரின் நோக்கம், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளவது அல்ல.
நீங்கள் பேசும் விஷயம் தொடர் பான பயனுள்ள தகவல்களை விளம்பரம் மூலம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிப்ப துதான் அந்த சாப்ட்வேரின் நோக்கம்.
இன்டெர்நெட் உலகை இப்போது விளம்பரங்கள்தான் இயக்கி வருகிறது. மாமூலான விளம்பரங் களாக இல்லாமல், ஒருவருடைய கவனத்தை கவரக் கூடிய, மிகவும் பொருத்தமான விளம்பரங்கள் இணையவாசிகளின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
கூகுல் தனது விளம்பர திட்டத்தின் மூலம் இந்த வகை விளம்பரங்களை பிரபலமாக்கியது. தற்போது இன் டெர் நெட் முழுவதும் இத்தகைய விளம்பரங்களே கோலோச்சுகிறது.
உள்ளடக்கத்துக்கு பொருத்தமான விளம்பரங்களாக இவை அமைவது தான் விசேஷம்.
உதாரணமாக இன்டெர்நெட்டில் நீங்கள் எந்தவகையான தகவல் களை தேடுகிறீர்களோ அதன் உள்ளடக்கம் சார்ந்த, விளம்பர இணைப்புகள் மட்டுமே முன் வைக்கப்படும்.
அநேகமாக அது உங்களது ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக் கும். பல நேரங்களில் அது பயனுள்ள தகவலுக்கான இணைப்பாகவும் அமையும்.
எப்படி இருந்தாலும் நிச்சயம் உங்களது பார்வையை உருத்தும் வகையில் அந்த விளம்பரம் அமைந்து இருக்காது. அதாவது நீங்கள் தேவை யில்லை என்று நினைக்காத அளவுக்கு அந்த விளம்பரம் இருக்கும்.
இதே உத்தியை தற்போது இன்டெர் நெட் மூலம் போன் பேசுவதில் நிறுவனம் ஒன்று கொண்டுவந்து இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பட்டிங் மீடியா என்னும் அந்த நிறுவனம் இன்டெர்நெட் தொலைபேசி உரை யாடல்களை ஒட்டுகேட்கக் கூடிய சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது.
பேசுவதை உணரும் தன்மை கொண்ட இந்த சாப்ட்வேர், உரையாடலின் தன்மையை வைத்து அதற்கு இணையான விளம்பரங் களை கம்ப்யூட்டர் திரையில் எட்டிபார்க்க வைக்கும்.
உதாரணமாக ஒருவர் தனது நண்பரோடு விருந்து சாப்பிட செல்வது பற்றி பேசினார் என்றால், கம்ப்யூட்டர் திரையில் மிகச்சிறந்த ரெஸ்டாரன்டுக ளின் விளம்பரம் தோன்றும்.
நண்பர் ஊருக்குப்போவது பற்றி பேசினால் விமான சர்வீஸ்களின் விளம்பரம் அல்லது சுற்றுலா நிறுவனங்களின் விளம்பரம் எட்டிப் பார்க்கும்.
இதே போல மருத்துவம் தொடர் பான உரையாடல் நடைபெற்றால் மருத்துவ இணைய தளங்கள் விளம்பரங்களாக வந்து நிற்கும்.
இப்படியாக பேசப்படும் உள்ளடக்கத் தின் தன்மையை வைத்து அதற்கேற்ற விளம்பரங்கள் கம்ப்யூட்டர் திரையில் தோன்றும்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த விளம்பரங்கள் மிகவும் பயனுள்ள தாக இருக்க வாய்ப்பு உண்டு.
தொலைபேசியில் நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, நமக்கு தேவைப்படக் கூடிய தகவல்கள் கேட்காமலேயே திரையில் தோன்றி னால் நன்றாகத்தான் இருக்கும்.
உதாரணமாக ஊருக்கு செல்கி றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஊரில் எங்கே தங்குவது என தெரியாமல் இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அப்போது அந்த ஊரில் இருக்கக் கூடிய ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் பற்றிய தகவல் திரையில் தோன்றினால் சிறப்பாகத் தானே இருக்கும். போனில் பேசிக் கொண்டே கிளிக் செய்தால் தேவை யான விவரங்களை பெற்று விடலாம்.
இப்போதைக்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் சோதனை முறையில் இந்த சாப்ட்வேர் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பட்டிங் மீடியா இதற்காக பட்டிங் டாட்காம்(puddingmedia.com) என்னும் இணைய தளத்தை அமைத்துள்ளது. இந்த இணைய தளத்தில் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை டைப் செய்து விட்டு பேச வேண்டும். அதன் பிறகு அதே பக்கத்தில் விளம்பரங்கள் தோன்றும். ஆனால் இதன் வெற்றி சாப்ட்வேர் எந்த அளவுக்கு உரையாடலின் தன்மையை புரிந்து கொள்கிறது என்பதில்தான் இருக்கிறது. இந் நிறுவனம் இன்டெர் நெட் தொலைபேசி சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த சாப்ட் வேரை ஒப்பந்தம் முறையில் விற்க தீர்மானித்துள்ளது.

——

link;
http://puddingmedia.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “நீங்கள் ஒட்டுகேட்கப்படுகிறீர்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *