திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன.
இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது.
திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார்.
ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு அவர் என்ன செய்தி அனுப்பி வைத்திருப்பார் என யூகிப்பது கடினமாக இருக்காது.சமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் கணக்கின் இலக்கணப்படி ஒவ்வொருவரின் அறிமுக பக்கத்தில் தங்கள் பிறந்த தேதி மற்றும் வாழ் நிலையை குறிப்பிட வேண்டும்.அதாவது திருமணமாகி விட்டதா அல்லது தனி நபரா (ஆங்கிலத்தில் சிங்கில்)என தெரிவிக்க வேண்டும்.
எனவே திருமணமாகாமல் இருப்பவர்கள் இலவாழ்கக்கையில் நுழைந்ததும் தங்கள் ஃபேஸ்புக் நிலையை மாற்றிக்கொள்வது தான் சரி.எனக்கு திருமணமாகி விட்டது என்னும் மகிழ்ச்சியோடு ஃபேஸ்புக்கில் இந்த தகவலை தெரிவிப்பது ஒரு ஆனந்தமான விஷயம் தான்.
இத உடனேவும் செய்யலாம் கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டும் செய்யலாம்.
ஹன்னா மணமேடையிலிருந்தே செய்திருக்கிறார்.ஆம் தனது செல்போன் மூலம் அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் தான் திருமணமாகி விட்ட தகவலை பதிவு செய்தார்.அதோடு டிவிட்டருக்கு சென்று திருமணம் ஆகிவிட்டதை அறிவித்தார்.
டிரேசியொடு மணமேடையில் நின்றுக்கொண்டிருக்கிறேன்.அவள் என் மனைவியாகி ஒரு கணம் தான் ஆகிறது என ஆனந்தமயமாக அந்த அறிவிப்பு அமைந்திருந்தது.
இப்படி தனது வலையுலக தொடர்புகளுக்கு திருமண செய்தியை மணக்கோல்த்திலேயே பகிர்ந்து கொண்டதோடு இந்த காட்சியை அப்படியோ விடியோவாக்கி யுடியூப்பிலும் பதிவேற்றினார்.
கல்யானத்திற்கு புகைப்படம் விடியோ எடுப்பது போல ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பதிவுகளும் இனி புதிய சம்பிரதாயங்களாகலாம்.
(நிற்க . ஃபேஸ்புக் வாழ்நிலை தகவல் மாற்ற்ம் விவாகரத்துக்கும் ஏன் கொலைக்கும் வித்திட்ட சம்பவங்களும் உண்டு .அவை பற்றி விரைவில்…)
——