இணையதளங்களுக்கு பெயரிடுவது ஒரு கலை.சூட்டப்படும் பெயரானது பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும் கவனத்தை ஈர்க்கும் படியும் இருக்க வேண்டும்.அப்படியே கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை;மையக்கருவுக்கு நெருக்கமானதாக இருந்தால் போதும்.
‘ரிட்டன் மை பேன்ட்’ இணையதளம் இந்த ரகத்தைச்சேர்ந்தது தான்.என் பேன்டை திருப்பிக்கொடுக்கவும் என்னும் பொருள் தரும் இந்த தளத்தின் பெயரை முதன்முதலில் கேள்விப்படும் போது விவகாரமான தளமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படலாம்.ஆனால் உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான தளம் இது.
கொடுத்ததையும் கொடுக்க வேண்டியதையும் நினைவு படுத்தும் தளம் இது.அதாவது கடனாக கொடுத்தவற்றையும் மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கியவற்றையும் உரிய நேரத்தில் நினைவு படுத்தும் சேவையை வழங்கும் தளம்.
கைமாத்தாக ஐம்பதோ நூறோ வாங்குவதை தவிர சி டி,புத்தகம்,சூட்கேஸ்,செல்போன் சார்ஜர் என பலவற்றை நாம் இரவல் வாங்குவது உண்டு.நம்மிடம் இருந்தும் நண்பர்களும் தெரிந்தவர்களும் இரவல் வாங்குவதுண்டு.தேவை மற்றும் அவசரம் கருதி பொருட்களை வாங்கும் ஆர்வமும் வேகமும் திருப்பித்தருவதில் இருப்பதில்லை.சோம்பல், மறதி என பல காரணங்களால் பிறரிடம் வாங்கிய பொருட்கள் மீண்டும் வந்து சேராமல் போவது சர்வ சாதரணமாக நிகழ்வது தான்.
சில நேரங்களில் கொடுத்தவர்களே கூட அவற்றை மறந்து விடுவதுண்டு.
இப்படி மறக்காமல் இருக்க உதவும் தளம் தான் ‘ரிட்டன் மை பேன்ட்’.இதனை இந்த தளம் நிறைவேற்றும் விதமும் எளிமையானது.குழப்பம் இல்லாதது.
எடுக்காவா கோர்க்கவா என கர்ணன் கேட்டது போல இந்த தளம் நீங்கள் கொடுக்கப்போகிறீர்களா? வாங்கப்போகிறீர்களா? என்று முகப்பு பக்கத்தில் இந்த தளம் கேட்கிறது.
நீங்கள் கடன் வாங்கப்போகிறீர்கள் என்றால் அதற்கான பகுதியை கிளிக் செய்ய வேண்டும் அதன் பிறகு யாரிடம் இருந்து எந்த பொருளை எத்தனை நாட்களுக்கு வாங்க போகிறீர்கள் என்று குறிப்பிட வேண்டும் ஒரு விண்ணப்ப படிவம் போல இதற்கான கட்டங்கள் உண்டு.கூடவே உங்கள் பெயர் மற்றும் பொருளின் விவரத்தை குறிப்பிட்டு விட்டால் போதும்.
அதன் பிறகு கெடு முடியும் போது இமெயில் மூலம் நினைவுபடுத்தப்படும். இதே போல நீங்கள் யாருக்காவது பொருளை கொடுத்தாலும் அதன் விவரங்களை சமர்பித்தால் உரிய நேரத்தில் இமெயில் நினைவூட்டல் நண்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இப்படியாக கடன் வாங்கிய அல்லது கொடுத்த பொருளை கவனத்தில் கொள்ளலாம்.நீங்களும் நண்பரும் இதில் உருப்பினராக இருக்கும் பட்சத்தில் இந்த தளம் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
எப்படியோ நடைமுறை சார்ந்த சுவார்ஸ்யமான பயனுள்ள இணைய சேவைகளின் வரிசையில் இதனையும் சேர்த்துக்கொள்ளலாம்.
———

0 Comments on “கொடுத்ததை கேட்க ஒரு இணையதளம்”
முத்துலெட்சுமி
நீங்களும் நண்பரும் இதில் உருப்பினராக இருக்கும் பட்சத்தில் இந்த தளம் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.//
திருப்பிக்கேக்க வாயவிட்டு கேக்கவேண்டாம்ங்கறீங்க 🙂
cybersimman
ஆம். அதோடு மறக்காமலும் இருக்கலாம்.
cheena (சீனா)
அன்பின் சிம்மன்
அருமை அருமை அறிமுகம் அருமை – கணக்குப் புத்தகம் எழுதுவதை நிறுத்தி விட்டு
கணினியில் எழுதலாம் – மற்றவற்றை அதுவே பார்த்துக்கொள்ளும்
ஆகா ஆகா
பகிர்ந்தமைக்கு நன்றி
நல்வாழ்த்துகள் சிம்மன்
winmani
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
cybersimman
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.