கூகுல் எதையும் விட்டு வைப்பதாக இல்லை போலும்.புது புது சேவைகளை அறிமுகம் செய்த வண்னம் இருக்கும் கூகுல் இப்போது இணையதள முகவரிகளை சுருக்கும் சேவையை ஓசைப்படாமல் அறிமுகம் செய்திருக்கிறது.
Goஒ.க்ல் என்னும் முகவரியில் இந்த சேவையை அணுக முடியும்.எனினும் தனி இணையதளமாக அல்லாமல் கூகுல் டூல்பார் மற்றும் ஃபீட்பர்னர் விரிவாக்கமாக செயல்படக்கூடியதாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இணையதள முகவரி சுருக்கச்சேவை நீண்ட காலமாகவே அமலில் இருக்கிறது என்றாலும் டிவிட்டர் பிரபலாமாகி இணைப்புகளை பகிர சுருக்கமான இணையமுகவரி தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த சேவைக்கான மவுசும் அதிகரித்துள்ளது.
இந்த சேவையை வழங்கி வந்த ஒரு சில தளஙகள் மூடப்பட்டு வரும் நிலையில் எல்லாம் வல்ல கூகுல் இந்த பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளது.(நிற்க ஃபேஸ்புக்கும் இதே போன்ற சுருக்க சேவையை அறிமுகம் செய்துள்ளது.fb.me )
கூகுல் போன் பற்றிய செய்தி இணைய் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில் சத்தமே இல்லாமல் இந்த சேவை உதயமாகியுள்ளது.
கூகுல் நெக்சஸ் ஒண் என்னும் பெயரிடப்பட்ட போனை அதன் ஊழியர்கள் பத்தியில் புழக்கத்திற்கு விட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி பரபர்ப்பை உணடாக்கியிருக்கிறது.
அது மட்டுமல்ல கூகுல் சமீபத்தில் ஐந்து புதிய சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.அவை பற்றி அடுத்த பதிவில்..
———–
link;
http://goo.gl/

0 Comments on “கூகுலின் (மேலும் ஒரு)புதிய சேவை”
கிரி
கூகிளின் ஆர்வம் பிரம்மிக்க வைக்கிறது 😮
cybersimman
ஆம் நண்பரே
K.SIVA(Fr)
Unmai Thaan Nanparéé.