இரண்டு கேள்விகள்.அதற்கான விடை தேட இரண்டு கட்டங்கள்.இது தான் ‘பைன்டு நியர் யூ’ இணையதளம்.
இந்த இரண்டு கேள்விகளுக்கு விடை தேடுவதன் மூலம் உங்களின் பல தேவைகளுக்கு இந்த தளத்தில் தீர்வு காணலாம்.தேடலும் சரி ,இந்த தளத்தை பயன்படுத்துவதும் சரி மிகவும் சுலபமானது.
அடிப்படையில் இந்த தளம் சென்னை நகரில் உள்ள இடங்கள் மற்றும் நிகழ்வுகளூக்கான கையேடு என்று சொல்லலாம்.
பூங்கொத்துக்களை விற்பனை செய்யும் கடை உங்கள் பகுதியில் எங்கே இருக்கிறது என்று தெரிய வேண்டுமா அதற்கான பதிலை இந்த தளத்தில் தேடுவது சுலபம்.’என்ன ‘என்று இருக்கும் கட்டத்தில் பூங்கொத்து என குறிப்பிட்டு விட்டு பக்கத்தில் உள்ள ‘எங்கே’ என்னும் கட்டத்தில் நகரில் எந்த பகுதி என குறிப்பீட்டால அந்த இடத்தைல் உள்ள பூங்கொத்து கடைகளின் முகவரி வந்து நிற்கும்.
இப்படியாக சென்னையில் உள்ள வங்கிகள்,ஜெராக்ஸ் கடைகள்,ஹோடல்கள்,பள்ளிகள்,அழகு நிலையங்கள், என எல்லாவிதமான இடங்கள் பற்றியும் தேடலாம்.
வழக்கமாக நகரில் எந்த இடத்தில் என்ன கிடைக்கும் என்ற கேல்விக்கு விடை காண நீங்கள் கொஞ்சம் அல்லாட வேன்டியிருக்கும். நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களிடம் விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் வரி விளம்பர கையேடு போன்றவற்றை புரட்டிப்பார்க்க வேன்டும்.
ஆனால் இந்த தளத்தில் அவற்றை சுலபமாக தேடி கண்டு பிடித்து விடலாம். எளிமையான் வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில் கூடுதலாகவும் சில அமசங்கள் இருகின்றன.
தேடப்படும் இடங்கள் பட்டியலிடப்படும் போது முகவரி அருகிலேயே சின்னதாக செல்போன் மற்றும் இமெயில் வசதிக்கான ஐகான்கள் மின்னிக்கொண்டிருக்கும்.அப்படியே கிளிக் செய்தீர்கள் என்றால் அந்த நிறுவனத்திற்கு இமெயில் அனுப்புவதோ அல்லது எஸ் எம் எஸ் தட்டி விடுவதோ சாத்தியம்.என்னெ தேவையோ அவற்ரை விசாரித்துக்கொண்டு அதன் பிறகு நேரில் செல்லலாம்.
இடங்கள் மட்டுமல்ல நிகழ்வுகள்,திரைப்படங்கள்,தள்ளுபடி அறிவிப்புகள் போன்றவை தொடர்பான தகவல்களையும் பெற முடியும்.இதற்காக என்று கீழ் பகுதியில் தனித்தனி ஐகான்கள் இடம் பெற்றறுள்ளன.
தர்போதுஇசை விழா காலம் இல்லையா எநத சபாவில் என்ன கச்சேரி நடக்கிறது என கண்டு பிடிப்பதும் எளிது தான்.அதே போல் திரைபடங்கள் ஓடும் அரங்குகளையும் அறிய முடியும்.
வெறும் தேடல் மட்டும் இந்ததளத்தின் பலம் அல்ல. அதையும் தாண்டி பகிர்வு வசதியும் உள்ளது.
ஒருவர் தேடிக்கொண்டிருக்கும் இடம் அல்லது தகவல் பற்றி உங்களூக்கு விஷயம் தெரியும் என்றால் அதனை பகிர்ந்து கொள்ளலாம்.உதாரணத்திற்கு ஒருவர் சென்னையில் மூலிகை தைலம் கிடைக்கும் இடத்தை தேடுகிறார் என வைத்துக்கொள்வோம்,பயனாளிகள் மூலிகை தைலம் கிடைக்கும் இடத்தை தேடுகின்ரனர் உங்களுக்கு தெரியுமா? என கேட்கப்படுகிறது.உங்களூக்கு தெரியுமாயின் அதனை தெரிவிக்கலாம்.
வாச்கர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் முதல் நபராக நீங்கள் இருங்கள் என்னும் ஈர்ப்பு வாசகம் மூலம் உங்களுக்கு அழைபு விடுகப்படுகிறது.ஆக ஒரு விதத்தில் நகரம் சார்ந்த் சமுக வலைப்பின்னல் சேவையாகவும் இதனை கருதலாம்.
அதிகமானோர் பயன்படுத்ததுவங்கி பலரும் தகவல் பகிர்வில் ஈடுபடும் போது இந்த தளம் மேலும் பயன் மிக்கதாக விளங்கும்.
சென்னையை போல மற்ற நகரங்களுக்கான சேவையும் இருப்பதாக ஊகிக்கிறேன்.
உள்ளூர் சேவைகள் மற்றும் இடங்களை கண்டறிய உதவும் தளங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரபலமாக உள்ளன. நம்முரில் இப்போது இந்ததளம் வந்துள்ளது.
நிறக யாஹூ தளமும் உள்ளூர் சார்ந்த சேவையை வழங்கி வருகிறது.
————
link;
http://www.findnearyou.com/

0 Comments on “‘பைன்டு நியர் யூ’;சென்னை உங்கள் கையில்”
cheena (சீனா)
அன்பின் சிம்மன்
அருமையான் பயனுள்ள இடுகை – பயன்ப்டுத்துவோம்
பகிர்ந்தமைக்கு நன்றி
நல்வாழ்த்துகள்
விமல்
A wonderful and useful site.