ஏற்கனவே யூடியூப் பிரசவத்திற்கு உதவியுள்ளது.இப்போது கூகுலும் கொடுத்துள்ளது.
இங்கிலாந்தைச்சேர்ந்த லிராய் ஸ்மித் என்பவர் பிரசவ வலியால் துடித்துக்கொன்டிருந்த மனைவிக்கு கூகுலின் துனையோடு பிரசவம் பார்த்திருக்கிறார்.
அவருடைய மனைவி எம்மா நிறைமாத கர்பினியாக இருந்ததால் எந்த நேரத்திலும் பிரசவம் ஆகலாம் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தாராம்.எனவே பிரசவம் பார்ப்பதற்காக நர்சையும் அழைத்திருந்தார்.எம்மாவை கவனித்து வந்த நர்ஸ் பிரசவ வலி ஏற்படாத காரணத்தால் மறு நாள் வருவதாகச்சொல்லி விடைபெற்றுச்சென்றிருக்கிறார்.
நர்ஸ் சென்றதுமே எம்மாவுக்கு பிரசவ வலி வந்து விட்டது.உடனே அவர் நர்சுக்கு போன் செய்து பரபரப்போடு காத்திருந்தார்.ஆனால் மனைவி வலியால் துடிப்பதை பார்த்ததும் நர்ஸ் வருவதற்குள் குழந்தை பிறந்துவிடும் என்று புரிந்த்தது. எனவே தானே பிரசவம் பார்ப்பதை தவிர வேறு வழியிலை என்று தீர்மானித்தார்.
மூன்று குழந்தைக்கு தந்தை என்ற போதிலும் பிரசவம் அவருக்கு ஒரு அட்சரமும் தெரியாது. என்ன செய்வது என திகைத்தவர் கூகுலின் துணையை நாடினார்.
த்ன்னிடம் இருந்த பிளாக்பெரி போனை எடுத்து அதில் கூகுல் பக்கத்தை அழைத்து பிரசவம் பார்ப்பது எப்படி என டை செய்து தேடினார். அடுத்த நொடிக்குள்ளாக கூகுல் விக்கி ஹவ் தளத்தில் இருந்து பிரசவ வழிக்காட்டியை கொண்டுவந்து காட்டியது.
அந்த நெருக்கடியிலும் ஸ்மித் அதிகம் பதட்டமடைந்து விடாமல் பிரசவ வழிகாட்டியை படித்து அதில் குறிப்பிட்டிருந்த படி மனைவிக்கு உதவி செய்தார்.கணவன் கைகொடுக்க மனைவியும் குழந்தையை பெற்றெடுத்தார்.குவா குவா சத்தம் கேட்ட நிலையில் நல்லவேளையாக நர்சும் வந்துவிட்டார். நல்ல காரியம் செய்தீர்கள் என்று பாரட்டியபடி அவர் குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து எஞ்சிய பொறுப்புகளை ஏற்றுக்கொன்டார்.
இந்தானுபவம் மறக்க முடியாத்து என நான்காவது முறையாக தந்தையாகியுள்ள ஸ்மித் நெகிழ்ந்து போய் கூறுகிறார்.மனைவிக்கு பிரசவம் பார்க்க முடியும் என நினைத்துகூட பார்த்ததில்லை என்று கூறும் அவர் நல்லவேலையாக பிளாக்பெரி மற்றும் கூகுல் துணை நின்று காப்பாற்றின என்கிறார்.குழந்தை தலை வெளியே வரும் போது கையால் தாங்கிகொள்ள வேண்டும் பிறகு தாயின் மார்பின் மீது குழந்தையை கிடத்த வேண்டும் என்று பிரசவ வழிக்காட்டியில் குறிப்பிட்டிருந்ததை அப்படியே பின்பற்றியதாக அவர் படபடப்புடன் கூறியுள்ளார்.
நிற்க இந்த இண்டெர்நெட் பிரசவத்தில் சுவாரஸ்யமான விஷ்யம் ,இந்த தம்பதிக்கு இதற்கு முன் பிறந்ததெல்லாம் ஆன் குழந்தைகளாம். அவர்கள் ஆசைப்பட்ட படி முதல் பெண் குழந்தை இப்போது பிறந்திருக்கிறதாம்.
அது மட்டுமல்ல ஸ்மித் எப்போதுமே தனது பிளாக்பெரியை நோண்டியபடி இருபார் எனபதால் மனைவிக்கு அதனை பிடிக்காதாம் ஆனால் இப்போது பிரசவத்திற்கு உதவியுள்ளதால் பிளாக்பெரிக்கு ஒ கே சொல்லிவிடாராம்.
…………
பிகு;விக்கி ஹவ் போன்ற தளங்களின் மகிமை இப்போது உணர்ந்திருப்பபீர்கள்.எனவே ஒரு முறை அந்த தளத்திறுகு சென்று பாருங்கள்.(link;
http://www.wikihow.com/Main-Page
…
பார்க்க ‘யுடியூப் பிரசவம்’ பற்றிய என் முந்தைய பதிவு..
link1;
http://cybersimman.wordpress.com/2009/05/02/youtube-3/
—-

0 Comments on “பிரசவத்திற்கு உதவிய கூகுல்”
prabakaran
அருமை
கிரி
சுவாராசியமான செய்தி! கூகிள் இல்லாமல் இருக்கவே முடியாதோ! என்று தோன்றுகிறது..
எதையாவது தேட வேண்டும் என்றால் கை தானாக கூகிள் தான் அடிக்கிறது 🙂