பாரீஸ் நீதிமன்றம் ஒன்று கூகுலுக்கு அபராதம் விதித்துள்ளது.3 லட்சம் யூரோக்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் யூரோக்கள் அபாராதத்தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
கூகுல் புக்ஸ் என்னும் பெயரில் கூகுல் உலகில் உள்ள புத்தகங்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்யும் மாபெரும் திட்டத்தில் ஈடுபட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.இது ஒரு மாபெரும் திட்டம் .மகத்தான திட்டம் .ஆனால் சர்ச்சைக்குறியதாக இருக்கிறது.
காப்புரிமை தொடர்பாக எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்குவது வரவேற்கத்தக்கது என்றாலும் இந்த திட்டம் புத்தகச்சந்தையில் கூகுலின் ஏகபோகத்திற்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.அனுமதி பெறாமல் கூகுல் புத்தகங்களை ஸ்கேன் செய்ய பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கூகுல் செய்வது சரியா தவறா எனும் விவாதம் அமெரிக்காவில் ஒரு தேசிய விவாதமாகவே நடந்து வருவதோடு நீதிமனரத்தில் வழக்கு நிலுவையிலும் உள்ளது.
உண்மையிலேயே இது சிக்கலான பிரச்சனை.உலகின் அறிவை எல்லாம் தேடக்கூடிய வகையில் தருவதாக கூகுல் இந்த திட்டத்தை பற்றி குறிப்பிடுகிறது.அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் என்னதான் இருந்தாலும் ஒரு தனியார் நிறுவனத்தின் வசம் உலகின் அறிவுச்செல்வங்கள் ஒப்படைக்கப்ப்டுவது மனித குலத்திற்கு நல்லதா என்று கேட்க்கப்ப்டுகிறது.
இது கூகுலுக்கு எதிரானது என்பதைவிட ஏகபோகத்திற்கு எதிரான கொள்கை நிலைப்பாடு என்றே சொல்ல வேண்டும்.
நிற்க கூகுல் முயற்சிக்கு எதிராக பிரான்சின் பாரீஸ் நீதிமன்றத்தில் வழ்க்கு தொடரப்பட்டது.லா மார்டினரி என்னும் பதிப்பகம் உள்ளிடவை தொடர்ந்த் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நம்மூர் பாணியில் அடிரடி தீர்ப்பு என்றே சொல்ல வேண்டும்.
அனுமதி இல்லாமல் ஸ்கேன் செய்ததற்காக 3 லட்சம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு ஸ்கேன் செய்யப்பட்டவற்றை நீக்கும்வரை ஒவ்வொரு நாளுக்கும் 10 ஆயிரம் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை பிரெஞ்சு பதிப்பகத்துறை முழுமனதோடு வரவேற்றுள்ளது.கூகுல் இதனை துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளது.
இந்த தீர்ப்பின் பாதிப்புகள் மற்றும் விளைவுகள் இனிமேல் தான் தெரிய வரும்.
நிற்க த்னிப்பட்ட முறையில் நான் கூகுலின் திட்டத்தை ஆதரிக்கிறேன்.காரணம் உலகின் மிகச்சிறந்த புத்தகஙக்ளை டிஜிட்டல் வடிவில் இணையத்தில் சுலபமாக படிக்க கூகுல் வழி செய்கிறது.புத்தகங்கள் மட்டுஇமல்ல புகழ் பெற்ற பத்திரிக்கைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
லைப் பத்திரிக்கையை உங்களுக்கு தெரியும் அல்லவா.கலக்டர்ஸ் ஐடம் என்று வர்ணிக்கப்படும் அந்த பத்திரிக்கையை இப்போது படிக்க வேண்டும் என்று நினைத்தால் வழியில்லை.ஆனால் கூகுல் அவற்றை மிகவும் அக்கரையோடு ஸ்கேன் செய்து படிக்கவும் வாய்ய்பு ஏற்படுத்தி தந்துள்ளது.
லைப் பத்திரிக்கை போன்றவற்றை படிக்க வழி செய்ததற்காகவே கூகுலுக்கு ஜே போடலாம்.
——-

0 Comments on “கூகுலுக்கு 3 லட்சம் அபராதம்”
fawas
i said that the google is in the right way. because this kind of records most be have to save in correct way, which is google did is the way i mean too. we know all of us we can’t reach this books, really i have some time’s reams about this products and cost as well. but the google did great think for all of us. in the same time i feel very sorry GOOGLE that you are faced this violation by some one who don’t like to save and reach the kind message to middle or poor class peoples. i remember that one think happened in SRI LANKA the world old library was fire by some one in JAFNA, they damaged every think in one minuet for nothing, and really we lost lot of memorial records in a moment So this thing don’t want to happen in the future. in srilakna we loss be cause we kept only our records as books, if this google started this process before some years we can save our SRILANKA library records as well. how ever it’s happened in that time we don’t know, but now we are in the way please think before you stop your process.
Thanks for give me a chance in this regard,
FAWAS
cybersimman
yes google is in right way.other problems are to be sorted put. no other company has such an vision and also financial strebgth to pursue it
geetha
Yeah, I too agree Google is doing the right thing, only internet makes all the things easy.. This is the world of internet and Google is always giving its best for its trusted users. I love Google..