பதிவின் தலைப்பை பார்த்து விட்டு நம்ம சிம்மனும் சினிமா விமர்னத்தில் இறங்கிவிட்டதாக நினைக்க வேண்டாம்.இது வேட்டைக்காரன் விமர்சனம் அல்ல.அப்படியென்றால் பதிவுலகில் இப்போது வேட்டைக்காரன் தொடர்பான பதிவுலகில் தெறித்துக்கொண்டிருப்பதால் அதனை பயன்படுத்திக்கொள்வதற்காக போடப்பட்ட தலைப்போ என்றும் கருத வேண்டாம்.
இந்த பதிவு வேட்டைக்காரனில் இருந்து துவங்கியிருக்கும் புதிய தமிழிஷ் சேவை தொடர்பானது.
பொதுவாக பெரிய படங்கள் வெளியாகும் போது பதிவுலகில் அது தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் அதிகம் வெளியாவது வழக்கம் தான்.கந்தசாமி போன்ற படங்களின் போது இதனை பார்த்திருக்கிறோம்.வேட்டைக்காரனைப்பொருத்தவரை இதற்கு முன் வேறு எந்த் படங்களுக்கும் இல்லாத அளவு என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதிக விமர்சனங்கள் வேட்டைக்காரன் பற்றி வெளியாகி வருகின்றன.பாராட்டு, அதீத பாராட்டு,கேலி,கிண்டல்,ஒப்பீடு,நக்கல் என பலவிதங்களில் பதிவுகள் அமைந்துள்ளன.
வேட்டைக்காரன் படத்தின் சிறப்புக்கள் மட்டும் ஓட்டைகள் அலசப்பட்டுள்ளதோடு ஒரு நடிகராக விஜய்யின் செல்வாக்கும் ஆராயப்பட்டுள்ளன.அதோடு ‘தல’யையும் விட்டு வைக்காமல் ஒப்பீட்டு பார்க்கும் பதிவுகளும் அநேகம்.
மொத்ததில் பதிவுலகில் வேட்டைக்காரனின் வேட்டை தான்.விஜய்யின் செல்வாக்கின் அடையாளமாக இதனை கருதலாமா என்று தெரியவில்லை.ஆனால் இன்றைய தேதிக்கு பதிவுலகில் வேட்டைக்காரன் சூப்பர் ஹிட்.பதிவுலகின் பாதிப்பை பொருத்தவரை இதனை மைல்கல் என்றும் சொல்லலாம்.
தமிழிஷ் அல்லது தமிழ்மணம் போன்ற தளங்களை பார்க்கும் போதே இது தெரியும்.
பதிவர்கள் மத்தியில் வேட்டைக்காரன் பற்றிய ஆர்வம் தூக்கலாக இருப்பதை உணர்த்தும் வகையில் தமிழிஷ் தளத்தில் அதற்கென தனிப்பகுதி துவங்கப்பட்டுள்ளது.சூடான சங்கதி என்னும் தலைப்பின் கீழ் வேட்டைக்காரன் பதிவுகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
வேட்டைக்காரனைப்போல மேலோங்கும் பதிவுகளை இப்படி சூடான சங்கதி என்னும் தலைப்பின் கீழ் தரப்போவதாக தமிழிஷ் அறிவித்துள்ளது.வரவேற்கத்தக்க சேவை இது. பொதுவாகவே அதிகம் படிக்கப்படும் அல்லது விவாதிக்கப்படும் விஷயங்களை சூடான போக்கு என பட்டியலிட்டு காட்டுவது இண்டெர்நெட் உலகில் வழக்கம்.தமிழிலும் இப்போது இந்த வழக்கத்தை தமிழிஷ் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் செய்தி உலகில் புதிய போக்குகளை தெரிந்து கொள்ள் முடியும்.
இதே போல ஆண்டு இறுதியில் வழக்காமாக வெளியிடப்படும் ஆண்டின் செல்வாக்கு பெற்ற போக்குகளின் பட்டியலையும் தமிழ்ஷ் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

0 Comments on “வேட்டைக்காரன் ஒரு மைல்கல்”
k.prasath
நல்ல தகவல்
Vettaikaran
Nalla padam Vettaikaran ! aanal makkal kindal rombo jaashti !
Tamil MA
மொத்தத்தில் வேட்டைக்காரன் கொட்டைகாரன். மைல்கல் அல்ல மயிறு கல்.
அது யாருடா…படம் நல்ல படமாமுல…போ பொய் அடுத்து கரடி ஒரு படம் எடுக்குதாம், பொய் இப்பவே ரிசர்வு பண்ணிக்கோ
cybersimman
அவேசம் புரிகிறது நண்பரே.எனினும் வேட்டைக்காரனின் தரத்திற்கு நான் எந்த விதத்திலும் பொருப்பல்ல.அது பற்றி குறிப்பிடவும் இல்லை.
அன்புடன் சிம்மன்