காவலில் இருந்து தப்பிசென்ற ஒரு திருடன் காவலர்களுக்கு தண்ணி காட்டி வருவதோடு ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் அவர்களை வெறுப்பேற்றி கொண்டிருப்பது இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரேக் லேசி எனும் அந்த வாலிபர் திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர்.சிறையில் இருந்து எப்படியோ கம்பி நீட்டிவிட்ட கிரேக் அதன் பிறகு போலிசில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறார்.இந்த திருடன் போலீஸ் விளையாட்டு மற்றவர்களுக்கு தெரியாமலே இருந்திருக்கும்.கிரேக் ஃபேஸ்புக் தளத்தை பயன்படுத்தாமல் இருந்தால்…
ஆம் மற்ற இளைய தலைமுறையினர் போலவே கீரேக்கும் சமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கிறார்.நிறையில் இருந்து தப்பியதை அவர் சாகசமாக நினைத்து ஃபேஸ்புக் பக்கத்தில் அது பற்றிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
தனது இருப்பிடம் பற்றியும் காவலர்களால் தன்னை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது பற்றியும் அவர் தகவல் தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்.இணையவாசிகளுக்கும் இதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு அவரது சாகச குறிப்புகளை விரும்பி படித்து வருகின்றனர்.கிட்டத்தட்ட 1400க்கு மேற்பட்ட அபிமானிகள் அவருக்கு கிடைத்துள்லனர்.
போலிசில் சிக்காமல் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் கிரேக் பெருமிதத்தோடு தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் படத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அது மட்டுமல்ல ஒரு முரை குறிப்பிட்ட வணிக வளாகத்திற்கு ஷாப்பிங் செல்ல இருப்பதாக போலிசுக்கு தகவல் தெரிவித்து விட்ட் முடிந்தால் என்னை பிடித்து கொள்ளுங்கள் என்பது போல சவால் விட்டிருக்கிறார்.
போலீசாரே இதென்ன விளையாட்டு என புலம்பாத குறையாக கிரேக்கை தேடி கொன்டிருக்கின்ரனராம்.ஒரு வேலை கிரேக் பிடிபாட்டால் போலிசும் அதனை ஃபேஸ்புக் பக்கத்தில் பெருமையோடு போட்டுக்கொண்டால் போச்சு.
—————-
தொடர்புடைய முந்தைய பதிவு;ஃபேஸ்புக்கால் பிடிபட்ட திருடன்;

0 Comments on “ஒரு திருடனின் ஃபேஸ்புக் சவால்”
jskpondy
your blogs are very well. i like your posts, support my blog by visiting , jskpondy.blogspot.com
IQBAL SELVAN
Really this criminal is a clever…..
http://wp.me/KkRf