கூகுல் மீது வரிவிதிக்கப்படுவது சரியென நினைக்கிறீர்களா?இதனால் பாதிப்பு கூகுலுக்கு மட்டும் தானா?
பிரான்ஸ் அரசு உத்தேசித்துள்ள வரி விதிப்பு திட்டம் தான் இந்த கேள்விகளையும் இதே போன்ற இன்னும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கூகுல் முன்னணி தேடியந்திரமாக இருப்பதும் அந்த செல்வாக்கின் அடிப்படையில் இணைய விளம்பரம் மூலம் வாருவாயை அள்ளிக்குவித்து வருவதும் தெரிந்தது தான்.பத்திரிக்கைகளும் பிற இணையதளங்களும் இணையத்தின் வழியே வருவாயை ஈட்ட முடியாமல் தடுமறிக்கொண்டிருக்கும் போது கூகுல் மட்டும் தேடல் முதல்வனாய் லாபம் பார்த்து வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் அரசு கூகுல் இந்த வெற்றிக்கான விலையை இணைய வரியாக செலுத்த வேண்டும் என்பது போல ஒரு கருத்தை முன்வைத்துள்ளது.அதாவது இணைய விளம்பரம் மூலம் கோடிக்கணக்கான டாலர்களையும் (யூரோக்களையும்)ஈட்டும் கூகுல் அதில் சிறு பகுதியை இணைய வரியாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுல் மட்டுமல்ல இண்டெர்நெட்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஃபேஸ்புக் போன்ற மற்ற நிறுவனங்களும் இப்படி வரி செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாய் தர்போது சட்ட விரோதமாக இருக்கும் இசை கோப்புகளை டவுண்லோடு செய்வதை சட்டபூர்வமாக்கவும் பதிப்பகம் போன்ற இணையத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை காப்பாற்றவும் பயன்படுத்தப்படலாம என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதவது வெற்றிகரமாக இருக்கும் கூகுலிடம் இருந்து பணத்தை வசூலித்து இணைய யுகத்தில் தடுமாறும் துறைகளை காப்பாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இசை டவுண்லோடு மற்றும் காப்புரிமை பிரச்சனை தொடர்பாக அரசால் நியமிக்கப்பட்ட குழு இதற்கான பரிந்துரையை அளித்துள்ளது. அரசும் அந்நாட்டு அதிபரும் இந்த பரிந்துரையை முழுமனதோடு ஆதரித்துள்ளனர்.
எனவே எப்போது வேண்டுமானாலும் கூகுல் மீது வரி விதிக்கப்படலாம்.
இந்த வரி விதிப்பு நடைமுறை சாத்தியமா இதனால பயன் ஏற்படுமா பாதிப்பு வருமா என்பதெல்லாம பதில் இல்லா கேள்விகள். ஆனால் ஒன்று கூகுல் மீது பிரான்ஸ் வரி விதித்தால் மற்ர நாடுகளும் அத்னை பின்பற்றலாம்.
இதனைடையே கூகுல் இந்த யோசனையை கடுமையாக எதிர்த்துள்ளது. இண்டெர்நெட் நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு வெற்றிக்கான வழியை தேடுவதை விட்டு தங்களுக்கு எதிரான செயல்பாடு யாருக்கும் பயன் தராது என கூகுல் தெரிவித்துள்ளது.
யுத்தம் இப்போது தான் துவங்கியுள்ளது.

0 Comments on “கூகுல் மீது வரி விதிப்பு”
nanthakumaran
ithayum paathuruvom but thats right tax upon google
henry
Visit 10 websites and earn 5$. Click here to see the Proof