சீனப்பெருஞ்சுவர் உங்களுக்குத்தெரிந்திருக்கும்.சீனாவில் மற்றொரு பெருஞ்சுவரும் உண்டு. முன்னது சரித்திர கால சுவர் என்றால் இது நவீன காலத்தின் சுவர்.ஆனால் கண்ணுக்குத்தெரியாத சுவர்.சீனப்பெருஞ்சுவர் பெருமைக்குறியது என்றால் இந்த சுவர் அடக்குமுறையின் அடையாளம்.கருத்துரிமையின் சாபக்கேடு.
கிரேட் ஃப்யர்வால், அதாவது சீன நெருப்பு பெருஞ்சுவர் என்று அந்த சுவர் அழைக்கப்படுகிறது. உண்மையில் அப்படியொரு சுவர் இல்லை. ஆனால் சீனாவில் இண்டெர்நெட் தணிக்கைக்கு உள்ளாக்கப்படுவதும் அரசுக்கு ஆட்சேபனைக்கு உரிய தளங்கள் முடக்கப்படுவதும் தான் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக ஃபயர்வால் என்பது கம்ப்யூட்டருக்கான பாதுகாப்பு வளையத்தை குறிக்கும்.ஆபசமானது அல்லது ஆபத்தான என்று கருதப்படக்கூடிய இணையதளங்களை பிளாக செய்து வைக்க முடியும்.பாத்காப்பு நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த உத்தியை சீனா தனது அரசியல் கொள்கை மற்றும் நிகலைப்பாட்டை காப்பாற்றவும் மாற்று கருத்து மற்றும் எதிர்ப்பாளர்களின் இணைய செயல்பாட்டை முடக்கவும் பயன்படுத்தி வருகிறது.
சீன அரசால் ஏற்புடயது என கருதப்படும் தளங்களைத்தவிர வேறு எந்த தளத்தையும் சீனாவில் பார்க்க முடியாது. அது எவ்வளவு பெரிய தளமாக இருந்தாலும் சரி.
இந்த தணிக்கையே சீன நெருப்பு பெருஞ்சுவர் என்று உருவகப்படுத்தப்படுகிறது.
உள்ளடக்கம் மற்றும் நோக்கம் காரணமாக எந்த தளம் வேண்டுமானாலும் சீனாவில் பிளாக் செய்யப்படலாம்.
இந்த சுவரை மீறி தடை செய்யப்பட்ட தலங்களை பார்க்கும் குறுக்கு வழி எல்லாம் இருக்கின்றன. இதற்காகவே இணைய தளங்கள் ,சேவைகள் உருவாக்கப்படுள்ளன.
நிற்க,சீனா எந்த தளத்தையெல்லால் பிளாக் செய்துள்ளது அல்லது ஒரு குறிப்பிட்ட இணையதளம் தணிக்கைக்கு உள்ளாகி உள்ளதா என்று அறிய வேண்டுமா? அதற்காகவும் ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.
கிரேட்ஃபயர்வாலாப்சைனா என்னும் அந்த தளத்தில் குறிப்பிட்ட தளம் சீனாவில் பிளாக செய்யப்பட்டுள்ளதா என பரிசோதித்துப்பார்க்கலாம்.குறிப்பிட்ட இணையதள முகவரியை சமர்பித்து இந்த சோதனையை சுலபமாக மேற்கொள்ளலாம்.
இதே போல ஏற்கனவே சோதிக்கப்பட்ட தளங்களின் பட்டியல் மற்றும் அவை பிளாக செய்யப்பட்ட விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இணையதள உரிமையாளர்கள் .கருத்து உரிமையில் ஆரவம் கொண்டவர்களுக்கு பயனுள்ள தளம்.மேலும் சீனாவின் முகமுடியை கிழிக்கும் தளம்.
———–

6 Comments on “சீனப்பெருஞ்சுவருக்கு பின்னே மறையும் இணைய தளங்கள்”
Suresh, china
I am living in china last three years, it is very painful as all the website will be blocked without any reason.
even, the above website also blocked here as i can view only with proxy sites.
cybersimman
thanks for sharing the info
karlmarx
antha website a block pannitanga boosu
Elamurugan
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நாட்டுக்கே ஆப்பு வைக்காமல் தடுக்க சீனா செய்துள்ள இதில் கொஞ்சம் நியாயம் இருப்பதாய் படுகிறது.
Pingback: கூகுலுக்கு ஆதரவாக ஒபாமா சீனாவுக்கு எச்சரிக்கை « Cybersimman's Blog