ஜோதி பாசு எந்த அளவுக்கு மதிக்கப்பட்ட தலைவராக இருந்தார் என்பதை அவரது மரணம் உணர்த்தியுள்ளது.பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் காத்திருந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் அவரது மறைவுக்காக கண்ணீர் சிந்தும் காட்சியும், கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் பாசுவின் நற்பண்புகளை உளமாற புகழ்ந்திருப்பதும் இதற்கு சாட்சி.
அதே போல குறும்பதிவு சேவையான டிவிட்டரிலும் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மறைந்த தலைவருக்கு தங்கள் டிவீட் மூலம் இறுதி மரியாதை செலுத்தியுள்ளனர்.
மத்திய அமைச்சரும் டிவிட்டர் முன்னோடியுமான சஷி தரூர் ,ஜோதி பாசு (1914…2010)ஆர் ஐ பி என குறிப்பிடிருந்தார். டிவிட்டர் மொழியில் ஆர் ஐ பி என்றால் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பொருள்.
பத்திரிக்கையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான பிரித்திஷ் நந்தி பாசு தனது விச்கியையும் மார்க்சிஸத்தையும் அதே வரிசையில் நேசித்தார்,ஆனால் ஈடு இணையில்லாத மனிதர் என்று தனக்கே உரிய பாணியில் இரங்கல் தெரிவித்தார்.
தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா,பாசுவை சந்தித்த தருணத்தை நினைவு கூறி அப்போது பதவியில் இல்லை.எனினும் ஒருபோதும் அதிகாரமில்லாதவராக தோன்ற மாட்டார் என்னும் உணர்வை அளித்ததாக கூறியுள்ளார்.
அமிதாப் பச்சன் தனது வலைப்பதிவில் பாசு பற்றி விரிவாகவே குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களும் பாசு மீதான மதிப்பை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.நிகரில்லாதா தலைவராக வாழந்து மறைந்த பாசு பற்றி அறிய அவரது அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.
———–

0 Comments on “பாசுவுக்கு டிவிட்டர் வணக்கம்”
Pingback: Tweets that mention பாசுவுக்கு டிவிட்டர் வணக்கம் « Cybersimman's Blog -- Topsy.com