ஒரு இணையதலம் அல்லது இணைய செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம் அல்லது கவலை கொள்ளச்செய்யலாம்;வியப்படையச்செய்யலாம்,திகைப்பில் ஆழ்த்தலாம்.உள்ளூர புன்னகைக்க வைக்கலாம்.
இப்படி ஒவ்வொரு இணையதளமும் உங்களை ஏதாவது ஒரு உணர்வில் ஆழ்த்தவே செய்யும். இந்த உணர்வின் அடிப்படையிலெயே இணையதளங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? எமோட்டிபை அதை தான் செய்கிறது.அந்த சுவாரஸ்யமான இணையசேவையை பற்றி பார்க்கலாம்.
இணைய உலகம் ஒரு காலத்தில் வலை வாசல்களால் நிரம்பியிருந்தது.யாஹூ போன்ற வலை வாசல்கள் மூலமே இனையதை உலா வந்தோம். இன்று திரட்டிகள் அல்லது புக்மார்க்கிங் தளங்கள் தான் இணைய உலாவுக்கு வழி காட்டுகின்றன.
டிக்,ரிடிட்,டெலிசியஸ்,என நீளும் இந்த வழிகாட்டி தளங்களின் கோட்பாடு பார்த்தல்;பகுத்தல்;பகிர்தல் என்று சொல்லலாம். அதாவது இணையத்தில் பார்க்கும் தளங்களில் சிறந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இந்த பகிர்வுக்கு முன் அவற்றை வகைப்படுத்த வேண்டும்.
அதாவது பகிர விரும்பும் தளம் தொழில்நுட்ப வகையை சேர்ந்த்தா, சினிமா வகையைச்சேர்ந்த்தா என குறிப்பிட்டால் அந்த வகையில் பட்டியலிடப்படும். இப்படி முத்திரை குத்துவது பொதுவாக டாக் செய்வது என அழைக்கப்படுகிறது.தமிழில் குறிச்சொற்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த குறிச்சொற்களின் உதவியினாலேயே இணையவாசிகள் தங்களுக்கு விருப்பமான தகவல்களை சுலபமாக தேடி அடைய முடிகிறது. உதாரணத்திற்கு தொழில்நுட்ப செய்திகளில் ஆர்வம் மிக்கவர்கள் தொழிநுட்பம் என்னும் குறிச்சொல்லை கிளிக் செய்தால் அந்த பகுப்பில் உள்ள தகவல்களை எல்லாம் பார்க்க முடியும்.
இதெல்லாம் தெரிந்தது தானே என்று சொல்கிறீர்களா?
இந்த முறையில் ஒரு அழகான மாற்றமாக எமோட்டிபை தளம் வந்துள்ளது என்பதே சங்கதி. எமோட்டிபை தளத்தில் நீங்கள் குறிச்சொல் அடிப்படையில் அல்லாமல் ஒரு தளம் உங்கள் மனதில் உண்டாக்கும் உனர்வுகளின் படி பகிர்ந்து கொள்ளலாம்.
உதாரணத்திற்கு குறிப்பிட்ட தளம் உத்வேகம் தரவல்லது என நீங்கள் நினைத்தால் உத்வேகமானது என பகிர்ந்து கொள்ளலாம். இதே போல ஒரு இணையதளம் அல்லது செய்தி அதிர்ச்சியானது என்றால் அதற்கான பிரிவில் பகிர்ந்து கொள்ளலாம். இப்படியாக நகைச்சுவை,அதிர்ச்சி,உத்வேகம்,சோகம்,வேதனை,மிரட்சி,வியப்பு ,உறுத்தல் என எட்டு விதமான உணர்வுகளின் கீழ் தளங்களை பகிரலாம். உணர்வுகளுக்கு ஏற்றார் போல் மிக அழகான லோகோக்களை தேர்வு செய்யலாம்
.அதே போல் இந்த தலத்தில் பகிரப்படும் தகவல்கலை பார்க்க விரும்புகிரவர்கள் உணர்வுகளின் லோகோவை கிளிக் செய்தால் போதும் அதற்கான பாட்டியல் தோன்றும். டிக் போன்ற தளங்களை காட்டிலும் சுவாரயமான சேவை இது.
அதிலும் உணர்வுச்சின்னங்களான எமோட்டிகான்களை அறிந்திருப்பவர்களுக்கு மிகவும் சுவார்ஸ்யமானதாக இருக்கும்.
———–

0 Comments on “உணர்வுகளால் உலா வர ஒரு இணையதளம்.”
Elamurugan
பார்த்தேன்.நன்றாகத்தான் இருந்தது.
தகவலுக்கு நன்றி.
LVISS
I AM A GREAT FAN OF YOUR BLOG. I HAVE BEEN RECOMMENDING IT TO MY FRIENDS AND RELATIVES TO READ IT . EVERY BLOG IS USEFUL AND INFORMATIVE.
cybersimman
thank u very much sir
IQBAL SELVAN
Yeah It’s Good for those who love emoticons………I am not a big fan of it. It irritate me a lot……………http://wp.me/KkRf
eppoodi
நல்ல பகிர்வு
s
thanx. good info.