கூகுல் மீது சீனாவில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் சீன அரசின் பங்கு தொடர்பாக பல்வேறு ஊகங்களும் குற்றச்சாட்டுகளூம் கூறப்பட்ட நிலையில் சீனா முதல் முறையாக இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளது.கூகுல் தாக்குதலுக்கு எந்த விதத்திலும் தான் பொருப்பல்ல என்று மறுப்பும் தெர்விக்கப்பட்டுள்ளது.
கூகுல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட உடன் சீனாவில் இருந்து வெளியேற நேரலாம் என எச்சரித்த நிறுவனம் சீன அரசு மீது நேரிடையாக் குற்றம் சாட்டாவிட்டாலும் அதனை குறிப்பால உணர்த்தியது. சமீபத்தில் ஒபாமா இந்த தாக்குதலுக்கு சீனா பதில் சொல்லியாக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சீனா அதிகாரபூர்வமாக முதல் விளக்கத்தை அளித்துள்ளது.சைபர் தாக்குதலுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறப்பட்டுள்ளது.
இது போன்ற செய்திகள் ஆதாரமற்றது என்று சீன அரசு அஜென்ஸி தெரிவித்துள்ளது.இதன் பொருள் இனி இதே போல குற்றம் சாட்டாதீர்கள் என்பதாகவும் இருக்கலாம்.
இந்த மறுப்புக்கு கூகுல் எதிர்வினையை பொறுத்தே பிரச்ச்னையின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.