சீன இண்டெர்நெட் தணிக்கை பற்றி பில்கேட்ஸ் கருத்து

‘இதெல்லாம் ஒன்றுமே இல்லை.ஜுஜுபி ‘என்று சூப்பர்ஸ்டார் ரஜினி பாணியில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் சீனாவின் இண்டெர்நெட் தணிக்கை பற்றி கூலாக கருத்து தெரிவித்துள்ளார்.இந்த‌ பிர‌ச்ச‌னையில் கூகுல் ஒவ‌ராக‌ அல‌ட்டிக்கொள்கிற‌து என்றும் அவ‌ர் சொல்லாம‌ல் சொல்லியிருக்கிறார்.
கூகுல் மீதான‌ சைப‌ர் தாக்குத‌லை அடுத்து சீனாவின் இண்டெர்நெட் த‌ணிக்கை குறித்து ப‌ர‌வ‌லான‌ விவாத‌மும் ச‌ர்ச்சையும் எழுத்துள்ள‌து.

ஒரு ப‌க்க‌ம் சீன‌ அர‌சின் செய‌ல்பாடு க‌டும் விம‌ர்ச‌ன‌த்திற்கு ஆளாகியுள்ள‌ நிலையில் ம‌ற்றொரு ப‌க்க‌ம் கூகுல் பிர‌ச்ச‌னையை பெரிதாக்கி ஆதாய‌ம் தேடுவ‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.

இதுவ‌ரை சீனாவின் த‌ணிக்கை முறையை ஏற்றுக்கொண்ட‌ கூகுல் இப்போது ம‌ட்டும் எதிர்ப்பு காட்டுவ‌து ஏன் என்றும் கேட்க‌ப்ப‌டுகிற‌து.

அமெரிக்க‌ அர‌சு இந்த‌ பிர‌ச்ச‌னையில் கூகுல் சார்பாக‌ குர‌ல் கொடுக்க‌ முத‌ல் முறையாக‌ சீனா அதிகார‌பூர்வ‌மாக‌ இந்த‌ தாக்குத‌லில் அர‌சுக்கு ப‌ங்கில்லை என்று ம‌றுத்துள்ள‌து.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவ‌ன‌ர்  பில் கேட்ஸ் இந்த‌ பிர‌ச்ச்னை குறித்து க‌ருத்து தெரிவித்துள்ளார்.ப‌த்திரிக்கை மொழியில் சொல்வ‌தாயின் அதிர‌டி க‌ருத்து என்று தான் சொல்ல‌ வேண்டும்.

இண்டெர்நெட்டுக்கும் க‌ருத்து சுத‌ந்திரத்துக்கும் வாய்ப்பூட்டு போடும் சீனாவுக்கு க‌டிவாள‌ம் போடுவ‌து யார்?என்றெல்லாம‌ விவ‌திக்க‌ப்ப‌ட்டு வ‌ரும் நிலையில் பில் கேட்ஸ் சீன‌வின் இண்டெர்நெட் த‌ணிக்கை பெரிய‌ விஷ‌ய‌மே இல்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க‌ டிவி ஒன்றுக்கு அளித்துள்ள‌ பேட்டியில் கூகுல் மீதான‌ தாக்குத‌ல் ம‌ற்றும் சீனாவில் இருந்து வெளியேற‌ப்போவ‌தாக‌ அந்நிறுவ‌ன‌ம் கூறிய‌து ப‌ற்று கேட்க‌ப்ப‌ட்ட‌ போது கேட்ஸ் ‘இன்னொரு நாட்டில் செய‌ல்ப‌டும் போது அந்நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌ வேண்டும்;இல்லையென‌றால் அங்கே வ‌ர்த்தக‌ம் செய்ய‌ முடியாது என்று கூறியுள்ளார்.

இதன் உட்பொருள் கூகுல் ஒவார் ரியாக்ட் செய்கிற‌து என்ப‌து தான்.மைக்ரோசாப்ட் கூகுலை போட்டி நிறுவ‌ன‌மாக‌ க‌ருதுகிற‌து என்னும் போது இந்த‌ க‌ருத்தின் நிற‌மே மாற‌க்கூடும்.

இதே பேட்டியில் சீனாவின் த‌ணிக்கை ப‌ற்றி குறிப்ப‌ட்ட‌ கேட்ஸ்,இத‌னால் பெரிய‌ பாதிப்பில்லை என்றே கூறியுள்ளார்.இண்டெர்நெட் த‌ணிக்கையை மீறி த‌க‌வ‌ல்க‌ளை பெற‌ தொழில்நுட்ப‌ வ‌ழிக‌ள் இருக்கும் போது இது ப‌ற்றி அல‌ட்டிகொள்ள‌ தேவையில்லை என்று கேட்ஸ் கூறியுள்ளார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சீன இண்டெர்நெட் தணிக்கை பற்றி பில்கேட்ஸ் கருத்து

  1. கேட்ஸ் ‘இன்னொரு நாட்டில் செய‌ல்ப‌டும் போது அந்நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌ வேண்டும்;இல்லையென‌றால் அங்கே வ‌ர்த்தக‌ம் செய்ய‌ முடியாது என்று கூறியுள்ளார்.
    ஆக இங்கேயும் வியாபாரத்தைத்தான் பார்கிறார் பில் கேட்ஸ்.
    நல்ல வியாபாரி.

    Reply
  2. arulmozhi r

    //இன்னொரு நாட்டில் செய‌ல்ப‌டும் போது அந்நாட்டின் ச‌ட்ட‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌ வேண்டும்;இல்லையென‌றால் அங்கே வ‌ர்த்தக‌ம் செய்ய‌ முடியாது என்று கூறியுள்ளார்.//

    ஆனால் விண்டோஸ் விற்கும் போது மட்டும் அமெரிக்கா விலைக்கு இந்தியாவில் விற்பார்

    Reply
  3. Pingback: Tweets that mention சீன இண்டெர்நெட் தணிக்கை பற்றி பில்கேட்ஸ் கருத்து « Cybersimman's Blog -- Topsy.com

  4. Siva

    விண்டோசை அமெரிக்க விலையை விட அதிகமாக நம்மிடம் விற்றாலும் நாம் அதை கூட்டாக நின்று எதிர்க்க மாட்டோம். அதற்கான சுயமான மாற்று கட்டமைப்பும் நம்மிடம் இல்லை. விலை போகும் அரசியல் வாதிகளும், குருட்டு வெளிநாட்டு லோகமும் நம்மிடையே கொஞ்ச நஞ்சம் அல்ல. பொது நன்மையின் பொருட்டு இணக்கம் செய்வது நம்மிடம் இல்லாத வரைக்கும் பில் கேட்ஸ் போன்றவர்கள் இப்படிதான் இருப்பார்கள். என்னை பொறுத்தவரையில் சீனாவையும், இந்தியாவையும் ஒப்பிடவே முடியாது.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *