தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வதைப்போல கேளுங்கள் சொல்லப்படும் என்பதும் சத்தியம் தான்.நமக்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருப்பதைவிட யாரிடமாவது மனம் திறந்து கேட்டு விட்டால் பிரச்ச்னையே இல்லை.
எதற்காக இந்த முன்னுரை என்கிறீர்களா? இப்படி புழுங்கித்தவிப்பவர்களுக்கு உதவக்கூடிய இணையதளத்தை அறிமுகம் செய்யத்தான். ‘
ஈஸ் இட் நார்மல்’ இது அந்த இணையதளத்தின் பெயர்.தளத்தின் உள்ளடக்கமும் இந்த ஒரு கேள்வியில் அடங்கி விடுகிறது. அதாவது ஒருவருக்கு இருக்ககூடிய பயம் அல்லது உணர்வு சகஜமானது தானா என்னும் கேள்வி.
குறட்டை விடுபவர்களை பார்த்தாலே பற்றிக்கொண்டு வருவதாக சிலர் கூறலாம்.இன்னும் சிலரோ விசில் அடிப்பவர்களை கண்டாலே அடிக்கத்தோன்றுவதாக சொல்லலாம்.
இப்படி ஒவ்வொருக்கும் ஒரு விதமான விநோதமான பழக்கமோ அல்லது பயமோ இருக்கலாம்.ஆனால் என்ன பிரச்சனை என்றால் சிலருக்கு இந்த உணர்வு கவலைத்தராலாம்.மற்றவர்களுக்கு இல்லாத உணர்வு தங்களுக்கு மட்டும் இருக்கிறதோ என்ற சந்தேகம் வாட்டி எடுக்கலாம்.
அதிலும் குறிப்பாக மிகவும் விசித்திரமான பழக்கம் கொண்டவர்கள் அதனை நினைத்து மனதுக்குள் புழுங்கலாம்.உதாரணத்திற்கு பெண்களின் உள்ளாடையை அணிந்து கொள்ளும் பழக்கம் கொண்ட ஆண்களையே எடுத்துக்கொள்ளலாம்.
இவர்கள் ஏதோ குற்றம் செய்வதைப்போல நினைத்து தவிக்கலாம். இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் தவறு செய்து கொண்டிருப்பதாக நினைப்பவர்கள் மேலே சொன்ன இணையதளத்திற்கு சென்று தங்கள் பழக்கத்தைகுறிப்பிட்டு அது சரி தானா என்று கேட்கலாம்.
அதனை பார்த்து விட்டு மற்ற உறுப்பினர்கள் பதில் அளிப்பார்கள். மற்றவர்கள் அளிக்கும் பதில்கள் கவலையை போக்க கூடிய வகையிலோ ஆறுதல் தரும் வகையிலோ அமையலாம்.
உதாரணத்திற்கு இந்த உரையாடலை பாருங்கள்; யாரோ ஒருவர் தனக்குள்ள பெண்களின் உள்ளாடையை அணிந்து கொள்ளும் பழக்கம் சரி தானா என்று கேட்டுள்ளார்?
இதற்கு பதில் அளித்துள்ளவர்கள் அட இதெல்லாம் ரொம்ப சகஜம்பா என்ற ரேஞ்சுக்கு பதில் அளித்துள்ளனர். இன்னும் சிலரோ அந்த பழக்கம் தங்களூக்கும் இருப்பதாக கூறியுள்ளனர். ஒரு சிலர் இதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளனர்.
இதே போல என் மார்பகத்தை நானே தடவிப்பர்ர்பது சரியா என்னும் கேள்விக்கும் ஒருவர் தானும் அப்படி செய்வது உண்டு என்று கூறியுள்ளார். இப்படி எண்ணற்ற பழக்கங்கள் தொடர்பான விளக்கங்களும் பதில்களும் இடம் பெற்றுள்ளன..
பல சுவார்ஸ்யமானவை.சில சிந்தனையை தூண்டுபவை. மொத்ததில் நாம் மட்டும் தவறு செய்வதாக நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஆசுவாசம் தருபவை.
——-

0 Comments on “சந்தேகம் தீர்க்கும் இணையதளம்”
ஜெகதீஸ்வரன்
பயனுள்ள இடுகை!
safa
pls send reply
cybersimman
reply for what my friend
karlmarx
mikka nanri
Pingback: Tweets that mention சந்தேகம் தீர்க்கும் இணையதளம் « Cybersimman's Blog -- Topsy.com
praveen
thugam varali
NANCY
NAN PLUS TWO MUDITHU ORU VARUDAMAKIVITTATHU.IPPOTHU TEACHERTRAINING COURSE KERALAVIL PADIKKA VIRUMBIKIREN.ANAL, ITHANUDAN DEGREE SEYYAVUM VIRUMBIKIREN.ENNAL ITHURENDUM SEIYA IYALUMA?IRANDUM MAIN SUBJECTA TAMIL THAN THERNTHEDULLEN.ORU NALLA MUDIVAI SOLLAVENDUM.THANK YOU!