நீங்களும் ரோமியோ ஆகலாம் என்று சொன்னால் சிலருக்கு கோபம் வரலாம்.
ரோமியோ என்னும் வார்த்தையை காதல் நாயகனுக்கான அடையாளமாக மட்டும் அல்லாமல் பெண்களை சுற்றித்திரிபவர்களை குறிக்கவும் பயன்படுத்துவதன் பலன் தான்.ரோமியோ என்றவுடன் வேலை இல்லாமல் பெண் பிள்ளைகளை தேடி அலைபவர்களின் சித்திரம் தோன்றி மறைவதும் தவிர்க்க இயலாதது தான்.
நிச்சயமாக சகாவரம் பெற்ற ரோமியோ பாத்திரத்தை உருவாக்கிய ஷேக்ஸ்பியர் சாலையோர ரோமியோ என்னும் பதத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்.
நிற்க ரோமியோ பெயர் பயன்பாடு ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும்.
ஷேக்ஸ்பியர் பெயரை குறிப்பிட்டு ரோமியோ என்றதுமே கண்ணியமான காதலனின் எண்ணம் தானாக ஏற்பட்டு விடும் .கூடவே வனது உள்ளம் கவர்ந்த ஜூலியட்டும் நினைவுக்கு வருவாள். இந்த காதல் உணர்வோடு ரோமியோ வீடியோ கேம் பற்றி பார்க்கலாம்.
காதலர் தினம் நெருங்க உள்ள நிலயில் இந்த ரோமியோ விளையாட்டை அறிந்து கொள்வதும் ஆடுவதும் பொருத்தமானதே.
ரோமியோ நீ எங்கே இருக்கிறாய் என்னும் அந்த தலைப்பிலான வீடியோ கேமின் நோக்கம் நீங்கள் ஒரு ரோமியோவாக மாறி ஜூலியட்டுக்கான ரோஜா மலர்களை பறித்து வர வேண்டியது தான். காதலிக்காக எவ்வளவு ரோஜா மலர்களை உங்களால் பறிக்க முடிகிறது என்பது தான் விளையாட்டு.
இதற்காக நீங்கள் ரோமிய்யோ சென்ற பாதையில் சென்று பார்க்க வேண்டும். அந்த பாதயில் காட்டுப்பன்றி போன்ற தடைகளும் உண்டு.அவற்றை தாண்டிசெல்ல வேண்டும். ஓவ்வொரு கட்டமாக முன்னேறி செல்ல வேண்டும்.
தடைகள் ஏற்படும் போது ஷேக்ஸ்பியர் மாகாகவியோ தோன்றி அடுத்த காட்டதுக்கு செல்ல ஊக்குவிக்கும் வகையில் இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் சிறப்பம்சம் ஷேக்ஸ்பியர் வாழ்ந்த மற்றும் விவரித்த இடங்கள் வழியே ரோமியோவின் பயணம் அமைவது தான்.
இதனால் கேமை விளையாடும் போது ஷேக்ஸ்பியர் தொடர்பான அனுபவம் பரவச நிலையை ஏற்படுத்தலாம். இந்த கேமை விளையாடிய பலரும் ஷேக்ஸ்பியர் வாழந்த பகுத்திக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணததை பெற்றுள்ளனர்.
கேமை உருவாக்கிய ஷேக்ஸ்பியர் அமைப்பும் இந்த நோக்கத்தோடே ரோமியோ விளையாட்டை உருவாக்கியுள்ளது. மிக எளீமையான் விளையாட்டு என்றாலும் இது இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இதுவரை 2.5 கோடி பேருக்கு மேலானாவர்களால் விளையாடப்பட்டுள்ளது.
நீங்களும் விளையாடிபாருங்களேன்.
———-

0 Comments on “காதலர் தின வீடியோ கேம்;ரோமியோவின் தேடல்”
அன்பு செழியன்
அற்புதமான விளையாட்டு…..
http://www.shakespearegame.com/
காதலர்கள் சார்பாக உங்களுக்கு என் நன்றிகள்!
ம.அன்பு செழியன்
சென்னை.