‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான பாடல்கள், கவித்துவமான காட்சிகள்… இவற்றை எல்லாம் மீறி அதன் மைய கதைக்கருவுக்காகவே இந்தப் படம் கவனத்திற்குரியது.
ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் நடந்த அதிசயம் இது.
ஆனால், தற்போதைய தலைமுறை இந்தப் படத்தையே ஓர் அதிசயமாக பார்க்கக்கூடும்! ஒரு பெண்ணிடம் பேச ஏன் இத்தனை தயங்க வேண்டும்? அவள் பக்கத்தில் செல்லவே ஏன் பயந்து நடுங்க வேண்டும்?
இப்படி பல கேள்விகள் எழக்கூடும். அந்த நாயகனின் தவிப்பும், அதனை ராஜேந்தர் கவித்துவமான முறையில் சொன்னதும் இந்த கால இளைஞர்களுக்கு புரியாத புதிராக இருக்கலாம்.
இந்த செல்போன் யுகத்தில் காதல் என்பது ஒரு எஸ் எம் எஸ் தொலைவில் தான் உள்ளது. ஒரு பெண்ணை பிடித்திருக்கிறதா, அப்படியென்றால் எபப்டியாவது அவள் செல்போன் எண்ணை வாங்கிவிட்டால் ஒரே ஒரு எஸ் எம் எஸ்-சில் தொடர்பு கொண்டுவிடலாம். அதன் பிறகு அதே எஸ் எம் எஸ்-சில் தொடங்கி இமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
அது மட்டுமா… காலமும் சமூகமும் நிறையவே மாறிவிட்டன. பெண்களோடு பேசத் தயங்கும் அசட்டு ஆண் பிள்ளைகள் இன்று அரிதாகிவிட்டனர். இது ஆணும் பெண்ணும் கை கோர்த்து திரியும் காலம்.
எனவே, ‘ஒரு தலை ராக’ காதல் இன்றைய இன்டர்நெட் தலைமுறைக்கு குழப்பத்தை தரலாம். ஆனால் 1980களில் நிலவிய மனோநிலையை இந்தப் படம் பிரதிபலிக்கிறது எனபதை நினைவில் கொள்ள வேண்டும். காதலை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தங்களுக்குள்
மருகிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்தப் படத்தின் நாயகனில் தங்களைக் கண்டு ஆறுதல் அடைந்ததே அந்தப் படத்தை பெரு வெற்றி பெற வைத்தது. காதலைச் சொல்ல முடிவதை வெற்றியாகவும், காதல் தோல்வியை கூட காதலின் வெற்றியாகவும் கருதிய காலத்தின் படம் அது.
இன்றைய இன்டர்நெட் தலைமுறை அந்தப் படத்தைப் பார்த்து சிரிக்கலாம். அல்லது, காலம் எப்படி மாறிவிட்டது என்று வியந்து போகலாம்.
இல்லை அதற்கு மாறாக, படத்தை பார்க்கும் இன்டர்நெட் தலைமுறை தங்களை கொடுத்து வைத்த தலைமுறை என்று நினைத்து மகிழும் வாய்ப்பும் இருக்கிறது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கால மாற்றம் இருபாலரும் சந்தித்து பேசிக்கொள்வதை சகஜமாக்கியிருக்கிறது என்றால் தொழில்நுட்ப வளர்ச்சி காதலர்கள் இடையிலான தகவல் தொடர்பை இன்னும் சுலபமாக்கியிருக்கிறது.
இன்றுதான் காதலை வெளிப்படுத்தவும் காதலை வளர்த்துக்கொள்ளவும் எத்தனை வழிகள் இருக்கின்றன. காதலர்கள் ஒயாமால் செல்போனிலே பேசிக்கொண்டே இருக்கலாம். தொலைபேசியை போல வீட்டில் உள்ளவர்கள் கவனிப்பார்களே என்ற அச்சம் இல்லாமல் செல்போனில் தனனை மறந்து காதல் வானில் மிதக்கலாம். பேசு முடியாத நிலை என்றால் இருக்கவே இருக்கிறது எஸ் எம் எஸ். குறுஞ்செய்திகளை அனுப்பியே காதல் உரையாடலில் மூழ்கலாம்.
இன்னும் கடித பாணி காதலை விரும்புகிறவர்களுக்கு இருக்கவே இருக்கிறது இமெயில் வசதி. இல்லை என்றால் இன்டர்நெட் அரட்டையில் ஈடுபடலாம். ஐ எம் சாட் வசதியை பயன்படுத்தலாம்.
எல்லாம் சுதந்திரமானவை. அந்தரங்கமானவை. காதலனின் கடிதம் அம்மாவிடம் சிக்கிகொண்டால் என்ன செய்வது என்னும் அச்சம் இமெயில் கால காதலிக்கு கிடையாது. காதல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்ல காதல் தேடலுக்கும் கூட இன்டர்நெட்டே கைகொடுக்கும். முன் போல பீச்சிலோ பார்க்கிலோ காதல் தவம் செய்யத் தேவையில்லை.
வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக் அல்லது ஆர்குட்டில் வலைவீசி ஒத்தகருத்துள்ளவர்கள் இணைவது சுலபம் தான். ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் கூடிய அறிமுக பகுதியின் மூலம் இளசுகள் தங்களது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தி அதனடிப்படையில் ஜோடி தேடிக்கொள்ளலாம். கண்டவுடன் காதல் என்பது போல காதலை வெளிப்படுத்த அவசரப்பட வேண்டிய கட்டாயமும் இல்லை. ஃபேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் செய்தபடி ஒருவர் மனதை ஒருவர் புரிந்து கொள்ள முற்பட்டு எல்லாம் சரி என்றால் காதல் முடிவை அறிவிக்கலாம். அதோடு காதலில் விழுந்தேன் என்பதை அறிவிக்க ஃபேஸ்புக்கை விட சிறந்த வழியில்லை.
ரொம்ப சுலபமாகவும் நயமாகவும் இதனை செய்யலாம். அதில், உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் மாற்றம் செய்வதன் மூலம் காதல் செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். அதே போல நண்பர்கள் பட்டியலில் இருந்து விலக்கி காதலன் அந்தஸ்த்துக்கும் கொண்டு செல்லலாம். இவ்வளவு ஏன் அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் அறிவிக்காத வரை காதலுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து இல்லை என்று கருதப்படும் வழக்கம் உருவாகியுள்ளது தெரியுமா? ஃபேஸ்புக்கில் வெளியீட்டால் தான் காதலிலேயே சேர்த்தி என நினைக்கும் அளவுக்கு நிலமை இருக்கிறது.
குறும்பதிவு சேவையான டிவிட்டரை கூட காதல் வாகனமாக பயன்படுத்தலாம். பெரும்பாலும் செய்தி வெளியீட்டுக்கே டிவிட்டர் பயன்பட்டு வந்தாலும் இதன் பகிர்வு தன்மையை காதலர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதிலும் கண்டதும் காதல் கொண்டு விடும் பழக்கம் கொண்டவர்கள் நேற்று தியேட்டரில் அவளைப் பார்த்தேன், பார்த்ததும் மனதை பறிகொடுத்துவிட்டேன் என்று ஒரு டிவிட்டர் செய்தியை தட்டிவிட்டு காதல் உலகில் நுழையலாம். அவளும் கூட அந்த டிவிட்டை பார்த்துவிட்டு ‘காதலா, காதலா’ என அழைத்து பதில் செய்தி மூலம் காதலை உறுதிப்படுத்தலாம்.
அநேக வழிகள் இருக்கின்றன். அவற்றை பயன்படுத்திக்கொள்வது அவரவர் கையில் தான் இருக்கிறது. ஃபிளிக்கர் மூலம் புகைபபட காதலில் ஈடுபடலாம். யூடியூப் வழியே வீடியோ காதலிலும் திளைக்கலாம். அது மட்டுமா இன்று காதல் வலை வீசுவதற்கான நீர் பரப்பும் பரந்து விரிந்து கிடக்கிறது.
சும்மா உள்ளூரில் தான் காதல் தவம் இருக்க வேண்டும் என்றில்லையே. இன்டர்நெட்டில் நுழைந்து விட்டால் வையமே நமக்கான இடமாகிவிடாதா? ஊர், நகரம் என்ற வரையரை இல்லாமல் இமெயில் முலமோ மறுபடியும் ஃபேஸ்புக் முலமோ யாரை வேண்டுமானால் தொடர்பு கொண்டு நடபை வளர்த்துக் கொண்டு காதல் பயணத்தையும் துவக்கலாம்.
இன்டர்நெட்டின் வருகைக்கு பின் காணாமலே காதல் தத்துவத்துக்கு புத்துயிர் கிடைத்திருக்கிறது. நேரில் பார்க்கமாலேயே இமெயில் வாயிலாக அறிமுகமாகி… காதலர்களாகி… அதன் பின், முதல் முறையாக நேரில் சந்தித்துக்கொண்ட நவீன காதலர்கள் பலர் இருக்கின்றனர். இதெல்லாம் ஒரு தலை ராக தலைமுறைக்கு சாத்தியமாகாத வசதிகள். மற்ற துறையைப் போலவே இன்டர்நெட் காதலர்களூக்கும் புதிய கதவுகளை திறந்துள்ளது.
ஆனால், ஒன்று… இன்டர்நெட் காதல் ஆபத்துக்கள் நிறைந்தது எனபதை மறந்துவிடக் கூடாது. இமேயில் மூலம் அறிமுகமாகி தப்பானவர்களின் வலையில் விழுந்து ஏமாந்தவர்களும் கணிசமாக உள்ளனர். கியுபா முன்னாள் அதிபர் காஸ்ட்ரோவின் மகன் இப்படி அமெரிக்க வாலிபர் ஒருவரை கொலம்பிய அழகி என நினைத்து ஏமாந்த கதையும் இருக்கிறது. அது மட்டுமல்ல, ஃபேஸ்புக் புதிய உறவுக்கு எப்படி உதவுகிறதோ அதே போல உறவுக்கும் வேட்டு வைக்கலாம். ஃபேஸ்புக் பயனாளிகளில் பலர் பழைய காதலர்கள் அல்லது முதல் காதலனை/காதலியை தேடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதும், அவர்களில் சிலர் இதில் வெற்றி பெற்று பழைய உறவை புதுப்பித்துக் கொண்டு புதிய உறவில் சிக்கலை தேடிக்கொள்வது குறித்தும் இன்டர்நெட் உலகில் பதிவுகள் இருக்கின்றன.
எனவே, எச்சரிக்கை தேவை! ஆதி கால காதலோ இன்டர்நெட் காதலோ, காதலுக்கான பொன்விதிகள் எப்போதுமே பொதுவனாவை.
அதை நினைவில் கொண்டால் காதல் வசப்படும்!
———–
நன்றி;யூத்புல் விகடன்