புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவாக்க முடியும்.அதாவது கூகுல் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட நோக்கத்திலான தேடியட்ந்திரத்தை உருவாக்க முடியும்.
அந்த வகையில் கூகுல் துணையோடு தமிழில் மென்பொருள்களை தேட உதவும் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.அலக்சரேஷன் என்னும் வலைப்பதிவை நடத்திவரும் சகபதிவர்(காரல் மார்க்ஸ்)இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
மென்போர் என்னும் பெயரிலான இந்த தேடியந்திரம் மூலம் இணையத்தில் உள்ள தமிழ் மென்பொருளை தேட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்ல முயற்சி.மென்பொருளை மட்டுமே தேட உதவும் தளம் பயன் மிக்கது தான்.
ஆனால் இந்த தேடியட்ந்திரத்தில் எப்படி தேடுவது என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.தமிழில் டைப் செய்ய வேண்டுமா,மென்பொருளின் பெயர் தெரிந்திருக்க வேண்டுமா போன்ற விஷயங்கள் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
இணையவாசிகள் இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்த்து அதன் குறை நிறைகளை பகிர்ந்து கொள்ளலாம்.
—-

0 Comments on “மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்”
நிலா
நன்றி உங்கள் பதிவிற்கு
kowsalya
Usueful post
http://WWW.fastinfo4u.com