அடிக்கடி பார்க்கும் இணையதளங்கள் என்னும் பட்டியல் எல்லோரிடமும் இருக்கலாம்.அத்தகைய பட்டியல் உங்களிடமும் இருந்தால் அவற்றில் நான்கு இணையதளங்களை தேர்வு செய்து கொண்டு ‘ஃபேவ்4’ இணையதளத்தின் பக்கம் செல்லுங்கள்;அங்கு உங்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கும்.
அந்த நான்கு தளங்களையும் ஃபேவ்4 முகப்பு பக்கத்தில் தோன்ற செய்யலாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை இண்டெர்நெட்டில் உலாவும் போதும் நேராக ஃபேவ்4 பக்கத்திற்கு போனால் போதும் உங்கள் அபிமான இணையதளங்களில் உலாவாலாம்.
காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்க்கும் அல்லது கடவுள் படத்தை பார்க்கும் வழக்கம் பலருக்கு இருப்பது போல இண்டெர்நெட்டில் நுழைந்ததுமே கூகுல் அல்லது யாஹூ அல்லது ஃபேஸ்புக் தளத்தை பார்க்கும் பழக்கம் இணையவாசிகள் பலருக்கு இருக்கலாம்.
அவர்களுக்கான சேவை தான் இந்த இணையதளம்.கூகுல் முகப்பு பக்கம் போல ஃபேவ்4 தளமும் மிக மிக எளிமையாக துரவற கோலத்தில் காட்சியளிக்கும். அதன் முகப்பு பக்கத்தில் நான்கு லோகோக்கள் மட்டுமே இருக்கும்.அந்த லோகோவில் எதை கிளிக் செய்தாலும் அதற்கான இணையதளத்திற்கு சென்று விடலாம்.
இணையவாசிகள் அந்த லோகோக்களை மாற்றிக்கொள்ளலாம் என்பதே விஷயம்.ஒவ்வொருவரும் தாங்கள் தினந்தோறும் தவறாமல் செல்லும் தளங்களை தேர்வு செய்து இந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.
அவை ஃபேஸ்புக்காகவோ ,ஜிமெயிலாகவோ,வேறு எந்த தளமாகவோ இருக்கலாம்.
உங்கள் அபிமான தளங்களாக திகழும் நானகை தேர்வு செய்து இந்த தளத்தில் லோகோவாக்கி கொண்டு விட்டால் போதும் தினமும் தனிதத்னியே அந்த தளங்களுக்கு செல்ல வேன்டிய அவசியமில்லை.
தற்போதே கூட பிரவுசர்களில் தினமும் பார்க்க கூடிய ஒரு இணையதளத்தை தோன்றும்படி செய்யலாம். அதை விட ஒரு படி மேலே சென்று நான்கு இணையதளங்களை இண்டெர்நெட்டில் அடியெடுத்து வைத்தவுடன் அணுக இந்த தளம் வழி செய்கிறது.
தினமும் இண்டெர்நெட்டில் உலாவி வருபவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ள தளம்.ஆனால நான்கு தளம் மட்டுமே என்னும் வரையரை சிலருக்கு அதிருப்தியை தரலாம்.
எதிரகாலத்தில் கூகுல் தேடல் பெட்டிஅயை இடம்பெற செய்வது உட்பட கூடுதல் வசதியை அளிக்க இந்த தளம் திட்டமிட்டுள்ளது. நீங்கலும் உங்கள் எதிரப்பார்ப்பை குறிப்பிடலாம். அதே போல இதில் உள்ள தளங்களின் பட்டியலில் உங்கள் அபிமான தளம் விடுப்பட்டிருந்தால் அதனையும் குறிப்பிடலாம்.
எளிய சேவை தான் ;ஆனால் சுவார்ஸ்யமானது.
………..
பின் குறிப்பு. இந்த பட்டியலில் நான் தேர்வு செய்யக்கூடிய அபிமான தளங்களின் பட்டியல் இதோ;1;யாஹூ.2;ரீடிப்.3;டிக்.4;ஸ்விட்ச்டு.
நீங்களும் உங்கள் பட்டியலை குறிப்பிடலாம்.
———-

8 Comments on “அந்த நான்கு இணையதளங்கள்”
தமிழ்மகன்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது..
TechShankar @ டெக்ஷங்கர்
Thanks for the share. it is good.
LVISS
IT IS LIKE BOOK MARKING IN A BROWSER.
cybersimman
exactly but with atwist yes but with a intresting twist
lavanya
Dear Simman,
I do agree with you. Mentioning our private, personal things on social networks seems like a hobby for Twitterers and FB users, I am totally against it and Thanks for making me aware of this website.
விமலன்
என்னிடமே உள்ள நான்கு இணையதளங்கள் போக இப்படியும் ஒரு வழி நன்றி நன்றிகள் பல
Pingback: அருமையான புக் மார்கிங் இணையதளம் « Cybersimman's Blog