தினமும் பார்க்கும் அபிமான தளங்களில் நான்கு தளங்களை தேர்வு செய்து அவற்றை முகப்பு பக்கத்தில் லோகோவாக மாற்றிக்கொள்ளும் சேவையான ஃபேவ்4 பற்றி சில பதிவுகளூக்கு முன் எழுதியிருந்தேன்.அருமையான சேவை தான் ஆனால் நான்கு தளங்களை மட்டுமே இப்படி பயன்படுத்த முடிவது ஒரு குறையாக பலருக்கு தோன்றியிருக்கலாம்.
அந்த குறையை போக்ககூடிய அருமையான புகமார்க்கிங் சேவை ஒன்று இருக்கிறது.’கிக்மீஇன்’ என்னும் இந்த இனையதளத்தின் மூலம் எத்தனை அபிமான தளங்களை வேண்டுமானாலும் குறித்து வைத்துக்கொள்ளலாம்.
காட்சிரீதியான முகப்பு பக்கம் என்று இந்த தளம் தன்னை வர்ணித்துக்கொள்கிறது.அது உண்மையும் கூட.அதாவது அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை அவற்றின் முகவரியாக அல்லாமல் தோற்றமாகவே பார்க்க முடியும்.
முதலில் கூகுல் கிரோம் பிரவுசர் அறிமுகமான போது இந்த வசதி அதில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. பிரவுசரை திறந்ததுமே ஏற்கனவே பார்த்த இணையபக்கங்களின் தோற்றம் அடுக்கடுக்கான கட்டங்களாக இடம் பெற்றிருக்கும்.அதில் ஒன்ரை கிளிக் செய்தால போதும் உலாவ ஆரம்பித்து விடலாம். தனித்தனியே முகவரிகளை டைப் செய்ய வேண்டியதில்லை.நாம் பார்க்கும் பக்கங்களுக்கு ஏற்ப இவை மாறிக்கொண்டே இருக்கும்.
இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த வசதி இப்போது மற்ற பிரவுசர்களிலும் வந்து விட்டது. ஆனால் எக்ஸ்புளோரரில் இந்த வசதி இல்லை.
இப்போது கிக்மீஇன் இணையதளம் இந்த வசதியை வழங்குகிறது.இந்த முகப்பு பக்கத்தில் கட்டம் கட்டமாக வெற்றிடம் இருக்கின்றன.அவற்றில் இணையவாசிகள் தாங்கள் தினமும் பார்க்கும் இணையதளங்களை தோன்றச்செய்யலாம். ஒவ்வொரு கட்டத்தின் மீதும் கிளிக் செய்தால் தேடல் பெட்டி போன்ற பகுதி தோன்றும் அதில் நீங்கள் விரும்பும் இணையதள முகவரியை குறிப்பிட்டால் அதன் தோற்றம் கட்டத்தில் இடம் பெறும்.
இவ்வாறு எல்லா கட்டங்களையும் நிரப்பி விட்டு தினமும் இந்த தளத்தில் நுழைந்து ஒவ்வொரு கிளிக்காக அபிமான தளங்களில் உலா வரலாம். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
————
http://www.kickmein.com/Default.aspx
———

0 Comments on “அருமையான புக் மார்கிங் இணையதளம்”
umapathy sankar
i just saw and use the site .it,s very useful to all.thanks a lot
krishna
Thanks for your sharing.
“Speed dial” என்று அழைக்கப் படும் அந்த வசதி முதலில் ஒபேரா உலவியில் தான் வந்தது.
Chrome உலவி நமது உலவியில் இடப் பயன்பாட்டை மேம்படுத்தியது.
இருந்தாலும் Firefox ஐ வீடு வேறு எதையும் முழுமையாக பயன்படுத்த முடியாததற்கு காரணம், நமக் கேற்றவறு உலவியை வடிவமைக்க முடிவது தான்.
மேற்சொன்ன வசதிகள் மட்டுமல்லாமல் எராளமான addon மூலம் அதை மேம்படுத்த முடியும்.
Fast Dial & XMarks will do . In that you can also access bookmarks from website.
cybersimman
தகவல் மற்றும் திருத்ததிற்கு நன்றி
ஜெகதீஸ்வரன்
நன்றி
சுரேஷ்
firefox ல் இந்த வசதி எவ்வாறு செயல்படுத்துவது