எனக்கு உமா ரமணன் பாடிய பாடல்களை மிகவும் பிடிக்கும். அதே போல பி எஸ் சசிரேகா,ஜென்ஸி,எஸ் என் சுரேந்தர்,ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன்,வாணி செயராம ஆகியோர் பாடிய பாடல்களும் மிகவும் பிடிக்கும்.
நிற்க இது எனது தனிப்பட்ட ரசனை பற்றிய பதிவு அல்ல. அவர்களின் குரலில் உள்ள பொது தன்மை கவனிக்கத்தக்கது, எஸ் பி பி யின் குரல் வெகுஜன வகை என்றால் சுரேந்தரின் குரல் கொஞ்சம் வித்தியாசமான அழகை கொண்டது.
மேலும் சுரேந்தரை பிடித்திருந்தால் ஜென்ஸியை பிடித்திருக்கலாம்.செயச்சந்திரனை பிடித்திருக்கலாம்.தீபன் சகரவர்த்தியையும் பிடித்திருக்கலாம். இது பொது விதி அல்ல.ஆனால் ஒரே மாதிரியான குரல் வளம் கொன்டவர்களில் ஒருவரை பிடித்திருந்தால் இன்னொருவரை பிடித்துபோகலாம்.
இனி விஷயத்திற்கு வருவோம்.ஏற்கனவே அறிமுகமான பாடகர்களில் பிடித்தமானவர்கலை தேர்வு செய்வதோ அல்லது அவர்களிடையேயான பொது தன்மையை கண்டு பிடிப்பதோ பெரிய விஷயமல்ல.
ஆனால் அவர்களைப்போலவே குரல் கொண்ட நமக்கு கேட்டதும் பிடித்து போகக்கூடிய ஒரு புதிய பாடகரை அறிமுகம் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்?அதற்கான இணையதளத்தை தான் நாம் பார்க்கப்போகிறோம்.
மியூசிக் மேப் என்னும் அந்த இணையதளம் இசை கண்டு பிடிப்பு இயந்திரம் வகையை சேர்ந்தது.
அதென்ன இசை கண்டுபிடிப்பு இயந்திரம்?
புதிய இசையை கண்டுபிடிக்க உதவும் தேடியந்திரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
இணைய உலகில் மிக பிரபலம்.
நாம் அறிந்த கூகுல் போன்ற தகவல் தேடிய்ந்திரங்களில் இருந்து இவை மூற்றிலும் மாறுபட்டவை.ஆங்கிலத்தில் வாவ் ஃபேக்டர் என்பார்களே அதே போன்ற ஆச்சர்யத்தன்மை இவற்றிடம் உண்டு.
அதாவது நமக்கு பிடித்திருக்க கூடியது என நாமே அறிந்திராத பாடல்கள மற்றும் பாடகர்களை நம்க்கு அறிமுகம் செய்யும் ஆற்றல் கொண்டவை இவை.
இந்த தளங்களில் தேடும் போது நம்க்கு பிடிக்ககூடிய பாடல்கலை இவை கண்டுணர்ந்து பரிந்துரைத்து வியக்க வைக்கும்.இதெப்படி சாத்தியம்?
எல்லாம் ஒரு அனுமானம் தான்.ஆனால் அறிவியல் பூர்வமான அனுமானம்.
மேலே ஒரு பாடகர்களின் பட்டியலை பார்த்தோம் இல்லையா?அதில் உள்ளது போலவே குறிப்பிட்ட ஒரு பாடகரை பிடித்திருந்தால் அதே போன்ற தன்மை கொண்ட மற்ற பாடகர்களையும் பிடித்துபோகும்.
இந்த ரசனைக்கான பொது தன்மைகளை துல்லியமாக கண்டு பிடிக்ககூடிய சாப்ட்வேர் ஒருவருக்கு பிடிக்ககூடிய பாடகர்களை அழகாக அடையாளம் காட்டிவிடும்.
முதன் முதலில் பண்டோரா சாப்ட்வேர் இதனை செய்து காட்டியது. ஒருவர் தனக்கு பிடித்தமான பாடலை சமர்பித்ததும் அதன் இசைக்கூறுகளை அலசி ஆராய்ந்து அதே போன்ற கூறுகள் கொண்ட பாடல்களை தேடி கண்டு பிடித்து பரிந்ததுரைத்து அசத்துவதோ இந்த சாப்ட்வேரின் சிறப்பமசம். ஒரு பாடல் ஏன் பிடித்திருகிரது என்று கேட்டால் நம்க்கே கூட பதில் சொல்ல தெரியாது ஆனால் இந்த சாப்ட்வேர் தனது செயற்கை புத்திசாலிததனத்தை பயன் படுத்தி நம் ரசனையை பகுத்துணர்ந்து சரியாக சொல்லிவிடும்.
இதே பாணியிலான இசை கண்டுபிடிப்பு இயந்திரமாக மியூசிக்மேப் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் என்ன விஷேசம் என்றால்,பாடகர்களின் பட்டியலை வரைபடமாக அளிப்பது தான்.
இந்த தளத்தில் நுழைந்துமே நம்க்கு பிடித்தமான பாட்கரின் பெயரை சமர்பிக்க வேண்டும்.உடனே பாடகர்களின் பெயர்கள் நடசத்திர கூட்டம் போல ஒரு வரைபடமாக தோன்றும். மையத்தில் உள்ள பாடகர்கள் நாம் கேட்டு ரசித்த பாடகர்களின் குரல் வளத்துக்கு மிகவும் அருகாமையில் உள்ளவர்கள் என்று பொருள். என்வே அவர்களை பிடித்திருக்க வாய்ய்ப்புகள் அதிகம். தொலைவில் உள்ளவர்களை பிடித்திருக்க அந்த அளவுக்கு வாய்ப்பு குறைவு.
புதிய பாப் பாடகர்களை அறிமுகம் செய்து கொள்ள இது மிகச்சிறந்த வழி.வரைபடமாக தோன்றுவது கூடுதல் சுவார்ஸ்யம்.
ஜிநாட் எனப்படும் செயற்கை அறிவு சார்ந்த சாப்ட்வேரின் அடிப்படையில் இந்த இயந்திரம் செயல்படுகிறது.இந்த தளத்திலேயே புத்தகஙக்ள்,திரைப்படங்கள் மற்றும் மனிதர்களூக்கான கன்டுபிடிப்பு சேவையும் இருக்கினறன எனபது கவனத்திற்குறியது.
அதாவது நமக்கு பிடித்த எழுத்தாளர்கள், மற்றும் திரைப்படஙக்ளின் பெயரை சமர்பித்து பிடிக்க கூடிய எழுத்தாளரக்ள் மற்றும் படங்களின் பெயரை அறியலாம்.
ஜினாட் என்னும் மைய இணையதளத்தின் மூலமும் அணுகலாம்.
—————-