தினந்தோறும் சைக்கிளை பளபள என துடைத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட தலைமுறையில் பிறந்தவன் நான். ஒரு விதத்தில் அப்பா கற்றுத்தந்த பழக்கம் இது.
அந்த காலத்து அப்பாக்கள் எல்லோருமே சைக்கிள் சார்ந்து இத்தகைய ஒழுக்கத்தை பிள்ளைகளூக்கு கற்றுத்தந்துள்ளனர். அப்போதெல்லாம் எங்கே செல்வதானாலும் சைக்கிள் தான். பையன்கள் யாரும் சைக்கிள் ஓட்டிசெல்வதாக நினைக்க மாட்டார்கள். சைக்கிளில் ஏறினாலே சிறகடித்துச் செல்வது போல் தான் இருக்கும்.
சைக்கிளை துடைத்து வைத்து கொள்வது பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் அருமையான சிறுகதைகளை எழுதியிருக்கிரார்.வண்ணநிலவன்,விக்ரமாதித்யன் ஆகீயோரும் சைக்கிளை வைத்து அற்புதமான கதைகளை எழுதியுள்ளனர்.
சைக்கிளுக்கும் அதை வைத்திருப்பவருக்கும் இடையே உயிரோட்டமான பந்த இருப்பதை இந்த கதைகளில் பார்க்கலாம். இந்த உணர்வெல்லாம் இப்போதைய தலைமுறைக்கு புரியுமா என்று தெரியவில்லை.
இன்று சைக்கிள் விரும்பத்துக்குறிய போக்குவரத்து வாகனாமாக இல்லை.எல்லோரும் பைக் ,கார் என்றே விரும்புகின்றனர். சைக்கிளின் பொற்காலம் முடிந்து விட்டதோ என்று தான் தோன்றுகிறது.
இன்று சைக்கிளை விரும்பி வாங்குகிறவர்கள் குறைவு. சைக்கிள் இன்று ஏழ்மையின் அடையாளமாக மாறிவிட்டது.
இந்த சைக்கிள் புராணத்தின் நோக்கம் புலம்புவதோ,பழைய கால ஏக்கமோ அல்ல.சைக்கிளின் அருமையை உணர்ந்து அரம்பிக்கப்பட்டுள்ள புதிய இணைய சேவையை அறிமுகம் செய்வதற்காக. பைக் ஷேரிங் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதே பாணியில் சைக்கிளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவை இது.
மும்பையைச்சேர்ந்த ரமேஷ் என்பவர் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளார். ரமேஷுக்கு இந்தியர்கள் மீது அபார நம்பிக்கையோ அல்லது அக்கரையோ இருக்க வேண்டும் .
அதனால் தான் இந்த சேவையை ஆரம்பித்துள்ளார்.அதாவது இந்தியர்கள் சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ அல்லது இந்தியர்கள் சைக்கிளை பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோ அவரிடம் அதிகம் இருக்க வேண்டும். அதனால் தான் சைக்கிளை பலரும் விரும்பாத ஒரு காலத்தில் அவர் பெரிய பதவியை ராஜினாமா செய்துவிட்டு கையில் இருந்த பணத்தையெல்லாமம் போட்டு சைக்கிள் பகிர்வு சேவையை ஆரம்பித்திருக்கிறார்.
அதாவது விரும்பிய போது மட்டும் சைக்கிளை பயன்படுத்திக்கொள்ள வழி செய்யும் சேவை.சொந்தமாக சைக்கிள் வாங்க வேண்டாம்.அதே நேரத்தில் வாடகைக்கும் சைக்கிள் எடுக்க வேண்டாம்.ஆனால் எப்போது தேவையோ அப்போது மட்டும் சைக்கிளை பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம்.
பயணம் முடிந்ததும் சைக்கிளை விட்டு விட்டு சென்றுவிடலாம்.இது தான் பைக் ஷேரிங். மேலை நாடுகளில் பிரபலாமாக உள்ள சார் ஷேரிங் திட்டத்தின் இந்திய வடிவம் என்று வைத்துக்கொள்ளுங்கள். சைக்கிளில் பயணைக்கும் அணுகூலங்களை சொந்த சைக்கிள் வைத்திருக்கும் சிக்கல்கள் இல்லாமல் அனுபவிக்க முடிவது தான் இந்த சேவையின் சிறப்பம்சம்.
கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
தினமும் லேலைக்கு செல்வதற்காக பேருந்திலோ அல்லது ரெயிலிலோ செல்ல வேண்டியிருக்கிறது.அதற்கு வீட்டிலிருந்து பேருந்து நிலையம் அல்லாது ரெயில் நிலையத்திற்கு நடந்தோ அல்லது பைக்கிலோ அல்லதி ஷேர் ஆட்டோவிலோ வந்தாக வேண்டும். மூன்றுமே கஷடமானது தான்.
தற்போதுள்ள டிராபிக் நெரிசலில் பைக் அல்லது ஆட்டோவில் வருவது சோத்னையானது தான்.அதோடு ஆட்டோ பிடிக்கவே போராட வேண்டியிருக்கும். பஸ்ஸில் வரலாம் என்றால் கூட்ட நெரிசல் வெறுப்பேற்றும். இதற்கு மாறாக வீட்டிலிருந்து புறப்பட்டதுமே ஒரு சைக்கிளில் ஏறி பயணம் செய்தால் என்ன? நெரிசலில் சிக்காமல் வந்தது போலவும் இருக்கும். அப்படியே உடற்பயிற்சி ந்செய்து போலவும் இருக்கும்.
இன்று மருத்துவர்களும் ஒயாமல் உடற்பயிற்சியை தான் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். சுகர் ,பி பி என்று பயந்து கொண்டு வாக்கிங் பயிற்சி மேற்கோள்வதைவிட தினமும் அலுவலகம் செல்லும் போது சைக்கிளிலேயே செனறு வந்தால் என்ன? நல்ல யோசனை தான்.
ஆனால் சைக்கிளை வாங்கி யார் பராமரிப்பது என்ற கேள்வி எழலாம்.வாடகை சைக்கிளை பயன்படுத்தலாம் என்றால் வாடகை சைக்கிள் கருத்தாக்கமே வழக்கொழிந்து விட்டதாக தோன்றுகிறதே என்ன செய்ய? இந்த இடத்தில் தான் பிரிமோ வருகிறது. அது தான் ரமேஷ் ஆரம்பித்துள்ள சேவையின் பெயர்.பிரிமோ என்றால் பிரிடம் பிரம் மூவ்மென்ட் என்பதன் சுருக்கம். அதாவது பயணத்தில் சுதந்திரத்தை ஏற்படுத்தி தரும் சேவை என்று பொருள்.
இந்த சேவையில் உறுப்பினராக சேர்ந்தால் சொந்தமாக சைக்கிள் வாங்காமலே சைக்கிளை பயன்படுத்தலாம்.காரணம் எல்லோர் சார்பாகவும் ரமேஷ் முதல் போட்டு சைக்கிள்கள் வாங்கி வைத்திருக்கிறார்.அது மட்டும் அல்லாமல் ஆறு இடங்களில் சைக்கிள் மையஙக்ளை அமைத்து அவற்றை நிறுத்தி வைத்துள்ளார்.
யாருக்கு சைக்கிள் தேவையே அவர்கள் இந்த மையத்தில் இருந்து எடுத்துச்செல்லலாம். அதற்கு முன்பாக இத்திட்டத்தில் உறுப்பினராக சேரவேண்டும். மாதாந்திடம் உடபட பலவேறு வகையான கட்டணங்களில் திட்டம் உள்ளது. உறுப்பினர்கள் சைக்கிளை எடுத்துச்செல்லும் போது அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஒன்று வழங்கப்படும். சைக்கிளை பயன்படுத்திய பின் சைக்கிளை அருகே உள்ள மையத்தில் ஒப்படைத்து விட வேண்டும் கார்டில் பயன்பாடு விவரங்கள் ஏற்றப்படும்.
உறுப்பினர்களுக்கு ஹெலமட்டும் வழங்கபப்டுகிரது.மழைக்காலம் என்றால் ரெயின் கோட்டும் உண்டு. அதோடு இலவச இன்சூரன்ஸ் காப்பிடும் உண்டு. சைக்களை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது என்கிறார் ரமேஷ். மேலும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனிகளீல் இருந்தும் விடுபடலாம் என்கிறார்.ஆட்டோவிலோ பைக்கிலோ செல்வதை காட்டிலும் சைக்கிள் மூலம் செல்வதில் தினமும் 30 ரூபய் வரை சேமிக்க முடியும் என்றும் உறுதியாக கூறுகிறார்.
இந்த சேவைக்கான இணையதளத்தில் விரிவான கணக்கு மூலம் இந்த சாதக அமசங்களை அவர் விளக்கியுள்ளார். முதல் காட்டமாக மும்பை அருகே உள்ள தானேவில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளார்.முமைபையிலும் ஆரம்பிக்கும் திட்டம் இருந்தாலும் முதலீடு அதிகம் தேவை என்பதால் முதலில் தானே வில் துவங்கியுள்ளார்.
இந்தியாவின் முதல் சைக்கிள் பகிர்வு திட்டம் என்று இதனை அவர் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.இகோமூவ்சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளார். இந்த சேவை சென்னை உள்ளிட்ட மற்ற இந்திய நகரஙக்ளுக்கும் விரிவு செய்யப்படும் என்று எதிர்பார்ப்போம்.
அதற்கு தானேவில் இது நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக்கொடி நாட்ட வேண்டும்.
———–

0 Comments on “இந்தியாவுக்கு வந்த சைக்கிள் ஷேரிங்”
அறிவன்
ஜப்பானில் இப்போதும் சைக்கிளில் செல்லும் பழக்கம் அதிகம் என்று படித்திருக்கிறேன்.சீனாவிலும் அப்படியே என்று நினைக்கிறேன்..நாம்தான் தெருக்களில் வாகனங்களை நிரப்பி காற்றை முடிந்த அளவு மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம்!
cybersimman
உண்மை தான் நண்பரே.நாம் சைக்கிளுக்கு மாறீனால் நன்றாக இருக்கும.
அன்புடன் சிம்மன்
Cheena (சீனா)
அன்பின் சைபர் சிம்மன்
நல்லதொரு சேவை – புதிய சிந்தனையில் உதித்த சேவை – நிச்சயம் வெற்றி பெறும். பயன் படுத்தத் துவங்குவர். நல்வாழ்த்துகள் ரமேஷ்
cybersimman
வெல்லட்டும் அவர் பணி என்பதே என் விருப்பமும்
ramji_yahoo
good idea.
But i feel it is better to buy 1 cycle instead of going for this sharing system, because the investment is not huge. I hope the cycle price will be Rs.2000 to 3000 only.
cybersimman
yes. bu t maintaing a cycle is difficult. more than that this scheme is flexible
இவண்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு , பசுமை புரட்சி என பேசி வரும் இந்த நவீன உலகத்தில் சுற்றுச்சூழல் மாசினை குறைக்கவும், உடல் நலதிருக்கும் ஏதுவாக அமையும் இந்த திட்டத்தை ஆரம்பித்து உள்ள ரமேஷிருக்கு வாழ்த்துகள். அவரது இந்த முயற்சி இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வர நமது பாராட்டுகள்.
நன்றி,
இவண்.
bala
வணக்கம் சார்
tamilish ஓட்டளிப்பு பட்டையை wordpress-ல் எவ்வாறு பொருத்துவது?
cybersimman
there is no such fecility as of now