சிலருக்கு கூகுல் கடவுளாக இருக்கலாம் .ஆனால் சீனர்களைப்பொருத்தவரை கூகுல் ஒன்றும் கடவுள் இல்லை.கூகுல் மிக நல்ல நிறுவனம் போல நடித்தாலும் கூட அது கடவுள் இல்லை.கடும் தாகுதலாக இருக்கிறது அல்லவா? சீனா தான் இப்படி கடுமையாக கருத்து தெரிவித்துள்ளது.
சீனாவில் தணிக்கைக்கு உடன்படுவதில்லை என்னும் முடிவை கூகுல் அறிவித்து, சீன கூகுக்ல் பக்கத்திற்கு வரும் இணையவாசிகளை ஹாங்காங்க் கூகுல் பக்கத்திற்கு மாற்றிவிடும் முடிவை கூகுல் அறிவித்ததற்கு பதிலடியாக சீனா இந்த கருத்துக்களை கூறியுள்ளது.
கூகுலின் முடிவு தவறானது மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறுவது என சீன அரசு சார்பில் முதலில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீன கம்யூனிச கட்சியின் அதிகாரபூரவ நாளிதழ் இந்த பிரச்சனை பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
முதல் பக்க கட்டுரையில் கூகுல் ஒன்றும் கடவுள் அல்ல என்று குறிப்படப்பட்டிருப்பதோடு நியாயம் என்று வரும்போது கூகுல் ஒன்றும் களங்கமில்லாத நிறுவனம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூகுல் அமெரிக்க உளவு அமைப்பின் கைக்கூலியாக செயல்பட்ட தருணங்கள் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்ச்னையில் கூகுலின் தணிக்கை நாடகத்தை மீறி அமெரிக்க அரசாங்கத்தின் கை உள்லதோ என்று சந்தேகிக்க தோன்றூவதகவுக் கூறப்பட்டுள்ளது. சீனா மீது அமெரிக்க இண்டெர்நெட் யுத்தத்தின் அங்கமாகவும் இது இருக்கலாம் என்று குற்றம் சாட்டபப்ட்டுள்ளது.
சீன அரசின் அதிகாரபூர்வ கொள்கை அறிவிப்பாக இதனை கருத முடியவிட்டாலும் கூகுல் மீதான கோபத்தின் வெளிப்பாடாக நிச்சயம் கருதலாம்.